சிற்பச்செய்திகள்
[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் தங்களது விஷ்ணுபுரம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய கோயில் சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு விமானம், பிரகாரம், முகமண்டபம் மற்றும் பல. இதுபோல சிற்பங்கள் குறித்த கலைச் சொற்கள். இவைகளை எப்படி புரிந்து கொள்வது? தயவுசெய்து வழிகாட்டவும். காட்டுவீர்களா?
இப்படிக்கு
பா.மாரியப்பன்
அன்புள்ள மாரியப்பன்
கோயில்சார்ந்த கலைச்சொற்கள் பொதுவாக வையாபுரிப்பிள்ளை பேரகராதியில் உள்ளன. தனியாக ஒரு கலைச்சொல்லகராதி இல்லை. இந்தப் பெருங்குறையை அ.கா.பெருமாள் அவர்களிடம் பேசியதுண்டு. பெருமாள், செந்தீ நடராசன் இருவரும் இணைந்து கோயில்சிற்பக்கலை சார்ந்த ஒரு சிறிய கலைக்களஞ்சியம் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு வருடங்களாக வேலை நடந்துகொண்டிருக்கிறது
கீழக்கண்ட நூல்கள் தகவல்களை அளிக்க உதவியானவை
[வரலாற்றாய்வாளர் திரு அ.கா.பெருமாள்
இடம்: குமரிமாவட்டம் முஞ்சிறை அருகில்]
சுசீந்திரம் கோயில் – அ.கா.பெருமாள்
தென்னிந்திய திருக்கோயில்கள் – கெ.ஆர்.சீனிவாசன்
திருவட்டார் பேராலயம் – அ.கா.பெருமாள்
தஞ்சை பெரியகோயில் – குடவாயில் பாலசுப்ரமணியம்
ஜெ
மூலக்கட்டுரைகள்
http://www.jeyamohan.in/?p=21461
http://www.jeyamohan.in/?p=2291