அயன் ரான்ட் கடிதங்கள்

அயன் ரான்ட் கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெ,

அயன் ராண்டின் சிந்தனைகள் அவ்வளவு எளிமையானவை அல்ல. சுயநலத்தை பற்றிய அவரது கருத்துக்கள் மிக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளன். மனிதநேயத்தையும், தர்ம‌ சிந்தனையையும் அவர் மறுக்கவில்லை / வெறுக்கவில்லை. ஆனால் மனிதனேயம் ‘மட்டுமே’ அறம் என்பதை அவ்ர் ஏற்பதில்லை. உற்பத்தியை பெருக்கும், தொழில் முனைவோரின் அடிப்படை அறங்களே உலகில் மிக மிக முக்கியமான அறம் என்பதே அவர் கோட்பாடு. தொழில் முனைவோர்களின் ஊக்கம், உழைப்பு மற்றும் லாபநோக்கங்களே நம் உலகை மாற்றி, வறுமையை பல மடங்கு குறைத்து, வாழ்க்கை தரத்தை மிக மிக உயர்த்தி உள்ளது.

ஆனால் மதமும், கம்யூனிசமும், இடதுசாரி சிந்தனைகளும் இதை மறுத்து, தொழில் முனைவோர்களை வில்லன்களாகவும், மனித நேயம் அற்ற கொடுங்கோலர்களாகவும், சுயநல பிசாசுகளாகவும் சித்தரிக்கின்றன. பொது புத்தியில் ஏற்றி பல காலங்கள் ஆகிவிட்டது. நேர்மையான‌, ச‌ட்ட‌ ரீதியான‌ வ‌ழிமுறைக‌ளில், எந்த‌ ஒரு த‌னிம‌னித‌னின் அடிப்ப‌டை உரிமைக‌ள் ம‌ற்றும் உடைமைக‌ளை மீறாம‌ல், ந‌சுக்காம‌ல், பொருளீட்ட‌ முனைவ‌தையே அவ‌ர் உல‌கின் மிக‌ சிற‌ந்த‌ விச‌ய‌மாக‌ கொண்டாடுகிறார். நாடு, இன‌ம், மொழி, ம‌த‌ம, சாதி போன்ற‌ அடையாள‌ங்க‌ளை அவ‌ர் ம‌றுக்கிறார். அதா‌வ‌து, அத‌ன் பெய‌ரால் (chauvinisim) வெறி கொண்டு, அவை ஃபாசிச‌மாக‌ மாறுவ‌தைதான் எதிர்க்கிறார். நாம், ந‌ம்மை முத‌லில் ம‌னித‌ர் என்று அடையாள‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ வேண்டும் என்ப‌தே அவ‌ரின் க‌ருத்து. ப‌ண்பாடு ப‌ற்றி அவ‌ரின் சிந்த‌னைக‌ள் சிக்க‌லான‌து. அதை ப‌ற்றி பிற‌கு பேச‌லாம். நீங்க‌ள் கூறிய‌ப‌டி அவ‌ர் க‌டைசி கால‌த்தில் ம‌ன‌ச்சிதைவு அடைந்து, ம‌ன்நோய் விடுதியில் இற‌க்க‌வில்லை. த‌ன் வீட்டில்தான், ந‌ல்ல‌ ம‌ன‌த்தெளிவோடு, 1982இல் கால‌மானார்.

மேலும் பார்க்க‌ :

அவரின் முக்கிய‌ ஆக்க‌ம் (ஆனால் அவரின் நாவல்கள் அளவு அதிக‌ம் அறிய‌ப்ப‌டாத‌து)

Capitalism: The Unknown Ideal:
http://www.aynrand.org/site/PageServer?pagename=objectivism_nonfiction_capitalism_the_unknown_ideal
http://capitalism.org/


Regards / அன்புடன்

K.R.Athiyaman  / K.R.அதியமான்

Chennai – 96

http://nellikkani.blogspot.com

http://athiyamaan.blogspot.com

http://athiyaman.blogspot.com

அன்புள்ள அதியமான்

உங்கள் கடிதம். அயன் ரான்ட் மனநல விடுதியில் இறந்தார் என நானும் எழுதவில்லை. மனந்லவிடுதியில் இருந்தார், இறந்தார் என்ற அவசரச்சொல்லாட்சி தவறாக அமைந்து விட்டாது. உங்க்ஜள் பெரும்பாலான கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன். மார்க்ஸியம் ஒரு திரள்வாதம் அலையை உருவாக்கியது. அயன் ரான்ட் அதற்கு எதிரான குரல். ஆனால் அதுவும் சமநிலை அற்றதே என்று நான் எண்ணுகிறேன்

ஜெ

அன்புள்ள் திரு ஜயமோஹநுக்கு,

அயன் ராண்ட் பற்றிய உங்கள் பதிவு மிகவும் சுவாரசியமானது. பொருள் செறிந்தது.  என்னுடய்ய மகள்  தன வலைப்பதிவில் அயன் ராண்டின் Atlass shrugged என்ற நூலைப்பற்றிய பதிவை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்

அன்புடன்
சங்கரநாராயணன்

http://atomhouse.wordpress.com/category/books/page/2/
Atlas shrugged

எனக்குப் பிடித்த அய்ன் ராண்ட் பற்றி எழுதியதற்கு நன்றி.  என் நல்ல வேளையாக, அய்ன் ராண்ட் படிக்கும் நட்பு வட்டத்தில் சிக்கினேன்.  அவருடைய ஃபவுன்டன் ஹெட் படித்து, தலைக்கனம் பிடித்து:) திரிந்த நாட்களும் உண்டு.  அறிவுஜீவிமய வாதம் (அல்லது, பைபிள் வாசகத்தை மாற்றி “The Geek shall inherit the earth?:-) அறியச் சுவையானது.  எதிர்காலத்துக்கு அவர்கள் முக்கியம் என்று சொன்னால், ஏழைகளும் மூடர்களும் முக்கியமில்லை என்றாகி விடுகிறது. இயற்கை/கடவுளின் வைபவத்தை மறு கேள்வி கேட்க நான் யார்?


கெ. பி.

http://kekkepikkuni.blogspot.com

ஜெ..
உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல் கல்லூரிக் காலத்தில் அறிமுகமானவர்தான் அயன் ராண்ட்.  நான் ‘அட்லஸ் ஷரக்ட்’ படித்தேன் முதலில். அதன் பின் மற்றவற்றைப் படிக்கத் தோன்றவில்லை.  சொன்னது போல் முதிரா மனத்தைக் கவரும் எழுத்து. புத்திசாலித்தனமான விவாதங்கள். சுவையான நடை.இந்தப் புத்தகத்தில் ரோர்க்குப் பதிலாக ஜான் கால்ட். கட்டிடக் கலைக்குப் பதிலாக ரயில்/தாதுச் சுரங்கத் தொழில்கள். உலகின் மிக வல்லவனான, புத்திசாலியான ஜான் கால்ட், ரயில் கம்பெனியில் ஒரு கூலியாளாக வேலை செய்கிறான். ரயில் கம்பெனியின் முதலாளி டகார்ட். அவன் சகோதரி டாக்னி. அவளும் மிக வல்லமை கொண்ட பெண். அவளால்தான் கம்பெனி பல inefficiencies இருந்த போதிலும் ஓடிக் கொண்டிருக்கின்றது. Inefficiency ஐ எதிர்த்துப் போராடும் அவள் வாழ்க்கையில் குறுக்கிடும் நான்கு வல்லவர்கள் – அவள் இளம் பருவத் தோழன் ஃப்ரான்சிஸ்கோ,  இரும்புத் தொழில் வல்லுநன் ஹாங்க் , கடல் கொள்ளையன் (பெயர் மறந்துவிட்டது) மற்றும் ஜான் கால்ட்.

டாக்னி ஒவ்வொருவருடனும் தன் தொழில் நிமித்தமாக உறவாடி இறுதியில் ஜான் கால்ட்டிடம் சேருகிறார்.  அவர் தோழர்கள் அனைவரும் திடீரெனெத் தம் வாழ் நாள்க் கனவான தொழில்களை அழித்து விட்டுத் தலைமறைவாகின்றனர். இறுதியில் டாக்னியின் முறை.

அவரது தோழர்கள் அனைவரும். தங்களது உழைப்பை, ஒட்டுண்ணிகளாக வாழும் பிற மனிதர்களுக்குச் செலவு செய்வதை விட, அவர்களைத் தத்தம் inefficient ஆன உலகத்தில் அழிய விட்டு விட்டு,  efficiency மட்டுமே அளவுகோலாக ஒரு உலகம் சமைக்கச் செல்ல அழைக்கின்றனர். வழக்கம் போலவே, அந்த inefficient சமூகம் ஜான்கால்ட்டை அரெஸ்ட் செய்து மக்கள் முன் நிறுத்த, அவர் ஒரு பிரசங்கம் செய்கிறார் – 30 பக்கத்துக்கு. (கஷ்டம்)என்னால் உங்கள் போல் பல்வேறு தளங்களில் யோசித்து எழுத முடியவில்லை.
ஆனால் இது, கம்யூனிஸத்தினால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணின் reaction என்பது என்னுடைய ஒரு கோணம். அது மட்டுமின்றி, அது அவரின் தனிப்பட்ட, துணை தேடும் fantasyயின் எழுத்து வடிவம் போலவும்fantasyயின் எழுத்து வடிவம் போலவும் தோன்றுகிறது.

புத்திசாலிகளும், மேதைகளுமே நிறுவனங்களை நடத்த வேண்டும் என்பதான வாதம் அவருடையது.  அப்படிப் பட்ட காம்பினேஷன் உள்ள தலைவர்கள் மிகச் சிலரே.   ஆனால் தலைமைப் பண்பு பல மேதைகளுக்கு இல்லையென்பதே உண்மை – they can be really painful as leaders – எல்லாச் சமூகத்திலும் free riders உண்டு.  உழைப்பாளிகளுக்கு அவர்கள் மேல் ஏற்படும் கோபம் நியாயப்படுத்த முடியும் corporate rat race அதிகமான சமூகத்தில். ஆனால்  மேதைகள் ஊதியத்தை எண்ணி உழைப்பதில்லை.

நான் மேதையல்ல. ஒட்டுண்ணியும் அல்ல. ஊதியத்தின் மேலேயே கண் வைத்திருக்கும் rat race ல் இருக்கும் ஒரு மேலாளண். எனவே என்னைப் பொறுத்த வரையில் rate race ன் தொந்தரவுகள் அதிகமாகும் போது ஆசுவாசப் படுத்திக் கொள்ள உதவும் புத்தகங்கள்தாம் இவைகள்.  ரொம்ப மன வருத்தத்தில் இருக்கும் போது பழைய பைண்ட் செய்யப் பட்ட பொன்னியின் செல்வன் படிப்பதில்லையா.. அது போல..

அன்புடன்

பாலா

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s