தீபாவளி யாருடையது?

தீபாவளி யாருடையது?

ஜெயமோகன்.இன் ல் இருந்து

100_3588

[பிக்கானீர். அருகர்களின் பாதை இந்திய நெடும்பயணத்தின் போது]

அன்புள்ள ஜெ

நலமா? இந்திய மரபு, ஆன்மிக சிந்தனைகள், தத்துவங்கள் என உங்களின் பல தரவுகளை படித்து இருக்கிறேன், படித்தும் வருகிறேன். வெகு நாட்களாக மன ஆழத்தில் இருக்கும் கேள்வி இது, ‘தீபாவளி’ தமிழர் பண்டிகை இல்லையா? இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில்? நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா? நரகன் என்பவனே , தேவ அசுர மோதல்கள் என புனையப்படும் ஆரிய திராவிட இன குழுக்களின் மோதல்களில் திராவிட இனச் சார்பாக நின்ற மாவீரனின் படிமமா? நமது இன அழிப்பை (தொன்ம வரலாறு அல்லது புராணத்தின் படி) நாமே கொண்டாடும் ஒரு இழிவான பண்டிகையா? அனைத்துக்கும் மேலாக, ஒருவனது இறப்பை நாம் கொண்டாடலாமா? நாம் பண்பட்டவர்கள் இல்லையா? என்றும் எனக்குள்ளும் எனக்கு வெளியேயும் கேள்விகள் பல, விடை தேடி உங்களிடம் மீண்டும் நான்.

அன்புடன்
சக்திவேல், சென்னை Continue reading

பௌத்தமும் வேதாந்தமும்

பௌத்தமும் வேதாந்தமும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெ,

அம்பேத்கரின் தம்மம் கட்டுரை அற்புதமாக இருந்தது. பௌத்த தரிசனத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது. சரளமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல சொற்களை நின்று கவனிக்க வைத்தது. இந்தக் கட்டுரையை ஒரே வீச்சில் படித்து விட முடியவில்லை. நிறுத்தி நிறுத்தி, படித்த வரிகளையே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொண்டு தான் தொடர்ந்து போக முடிந்தது. கட்டுரையின் பொருள் செறிவு ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம், கட்டுரை பேசும் முக்கியமான சில விஷயங்களைப் பற்றி ஏற்கனவே உங்கள் தளத்திலும் (முக்கியமாக கீதை உரை), வேறு நூல்களிலும் படித்துச், சிந்தித்து வைத்திருந்த கருத்துக்கள் இடைமறித்ததால். Continue reading

தம்மம்-கடிதங்கள்

தம்மம்-கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

ஊசி – நூல் – ஸ்வெட்டர் பற்றிய அந்த வரியைப் படித்ததும் எனக்குக் காளிதாசனின் கவிதை மின்னலிட்டது..

மணௌ வஜ்ர ஸமுத்கீர்னே ஸுத்ரஸ்யேவ அஸ்தி மே கதி:

முன்னிருந்த கவிஞர் செய்த சொல்லெனும் துளையில் என் மொழி செல்லும், ரத்தினத்தை ஊடுருவி வைரம் இட்ட துளை வழியே நூல் செல்வது போல்.

இந்தியப் பண்பாடு உருவாக்கிய சொற்களிலேயே மகத்தானது தர்மம் என்ற சொல்தான் போலும்…

இந்தச் சொல் மூன்று முக்கிய பரிணாமங்களைக் கடந்திருக்கிறது.. Continue reading

அம்பேத்கரின் தம்மம்- 4 [நிறைவு]

அம்பேத்கரின் தம்மம்- 4 [நிறைவு]

ஜெயமோகன்.காம் ல் இருந்து

பௌத்த மெய்யியலில் கர்மவினை என்பது முக்கியமான ஞானம். கர்மம் என்ற சொல் இந்திய ஞானப்பரப்பில் பலவாறாக பொருள்கொள்ளப்படும் ஒன்று. ஒவ்வொரு சிந்தனைமுறையும் அதற்கு ஒரு பொருள் அளிக்கிறது. வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அச்சொல் ஒரு பொருளை அளித்துள்ளது. இந்த வேறுபாடுகளை புரிந்துகொள்ளாமல் பொத்தாம்பொதுவான விவாதங்கள் நிகழ்வதும் நம்மூரில் மிக அதிகம். ஆகவேதான் ஏதேனும் ஒரு திட்டவட்டமான குருமரபைச் சேராதவர்களிடம் விவாதிக்கலாகாது என இங்கே விலக்கு இருந்தது.

கர்மம் என்ற சொல்லுக்கு உள்ள முக்கியமான விளக்கங்கள் இவை. பிராமண மதம் எனப்படும் பூர்வமீமாம்ச மரபில் கர்மம் என்பது இங்கே செய்யப்படும் வேள்விச்செயல்கள். எச்செயலுக்கும் அதற்குரிய விளைவுண்டு. வேள்விச்செயல்களுக்கான பயன் இப்பிறவியிலும் எஞ்சியது அடுத்த பிறவியிலும் தொடரும். தீயசெயல்களுக்கான பயன்களும் அப்படியே. நற்செயல்கள் மூலம் புண்ணியத்தை அடைந்து விடுதலை அடைவதே முழுமை Continue reading

அம்பேத்கரின் தம்மம்- 4 [தொடர்ச்சி]

அம்பேத்கரின் தம்மம்- 4 [தொடர்ச்சி]

ஜெயமோகன்.காம் ல் இருந்து

மேலே சொன்ன நிலையின்மை,சாரமின்மை,அறியமுடியாமை என்ற மூன்றும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை என்பதை சிந்தித்தால் அறியலாம். சாரமின்மையே நிலையின்மையை உருவாக்குகிறது. நிலையின்மை அறியமுடியாமையை உருவாக்குகிறது.

மனிதனின் இந்த அறியமுடியாமையை முன்னிறுத்தி மேலே சிந்தனைசெய்த பௌத்த ஞானிகள் சூனியவாதம் என்ற பௌத்ததரிசனத்தை உருவாக்கினார்கள். அதன் முதல்குரு நாகார்ஜுனர். சூனியவாதம் என்பது வெறுமைவாதம் அல்ல. அது அறியமுடியாமைவாதம்தான். தன்னை தானே விளங்கிக்கொள்ளமுடியாத நிலையையே சூனியம் என்ற சொல்லாம் பௌத்தம் சுட்டிக்காட்டுகிறது Continue reading

அம்பேத்கரின் தம்மம்- 4

அம்பேத்கரின் தம்மம்- 4

ஜெயமோகன்.காம் ல் இருந்துதேடலை கைவிடுதலே தர்மம் என்ற நான்காம் படிநிலை இன்றைய வாசகனுக்கு ஆச்சரியமளிக்கும். தேடல் என்பதை புனிதமானதாக, மனிதனுக்களிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதமாக நாம் அறிந்திருக்கிறோம். ’தேடலின் புனித துக்கம்’ என்ற சுந்தர ராமசாமியின் புகழ்மிக்க வரி நினைவுக்கு வருகிறது. எது தர்மம் என்ற வினாவுக்கு ‘தேடலைகைவிட்ட செயல்பாடு’ என்று பதில் சொல்லப்படும்போது அப்படி ஒருசெயல்பாடு இருக்கமுடியுமா, இருந்தால் அதற்கு என்ன பயன் என்ற வினா மனதில் எழுகிறது.

புத்தர் தம்மபதத்தில் சொல்லும் ஒரு வரியை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். ’ஆரோக்கியத்தைவிட சிறந்த நன்மை ஒன்றில்லை. ஆகவே நிறைவுமனநிலையை விட மதிப்பானது ஏதுமில்லை’. இந்தவரியைச் சுட்டியதுமே அம்பேத்கர் அதுசார்ந்துவரும் தவறான புரிதல்களை விளக்க ஆரம்பிக்கிறார். நிறைவுமனநிலை என்பது ஆர்வமின்மையோ சலிப்போ அல்ல. சூழலுக்குப்பணிந்து சும்மா இருப்பது அல்ல. உலகியலில் ஒட்டாத துறவுமனநிலையும் அல்ல Continue reading

அம்பேத்கரின் தம்மம்- 3

அம்பேத்கரின் தம்மம்- 3

ஜெயமோகன்.காம் ல் இருந்து

இரண்டாவது படிநிலையாக அம்பேத்கர் சொல்வது வாழ்க்கையின் முழுமையை அடைவதே அறம் என. முழுமை என்பது மொழியாக்கம் மூலம் பலபடிகளாக மாற்றப்பட்டுவிட்ட வார்த்தை. பௌத்த மூலச்சொல் பூர்ணம். சரியானபடி அமைந்த முழுமை என்று அதை மொழியாக்கம் செய்யலாம்.

மிக இயல்பாக தூய்மை என்ற முதல் படிநிலை இரண்டாவது படிநிலைக்குக் கொண்டுவருகிறது. ஐந்து நெறிகள் மூலம் தன்னை தூய்மைப்படுத்திக்கொண்ட ஒருவன், உடலையும் வாக்கையும் மனதையும் தூய்மையாக்கிக்கொண்ட ஒருவன் இயல்பாக உடலை உடலாகவும் உணர்வுகளை உணர்வுகளாகவும் மனதை மனமாகவும் கருத்துக்களை கருத்துக்களாகவும் காண ஆரம்பிக்கிறான். அதன் பின் அவனுக்கிருக்கும் அறைகூவல் என்பது தன்னால் சாத்தியமான முழுமை நோக்கிச்செல்வது மட்டுமே. Continue reading

அம்பேத்கரின் தம்மம்- 2

அம்பேத்கரின் தம்மம்- 2

ஜெயமோகன்.காம் ல் இருந்து

அம்பேத்காரின் புத்தரும் அவரது தம்மமும் என்ற பெருநூலில் மூன்றாம் பகுதி மூன்றாம் அத்தியாயத்தின் தலைப்பு ‘தம்மம் என்பது என்ன?’ தர்மம் என்பதைப்பற்றி பல்வேறு கோணங்களில் வாசிக்கிறோம். ஆனால் இந்த ஒரு சிறிய அத்தியாயத்தில் உள்ள வரையறை அளவுக்குச் செறிவான வரையறையை எங்கும் காணமுடியாது.

அம்பேத்கர் அதற்கு ஆறு வரையறைகளை அளிக்கிறார். இந்த அத்தியாயம் பௌத்த மூலநூல்களை அடியொற்றியதாயினும் இது அமைந்திருக்கும் முறை பேரழகு கொண்டது. அந்த வைப்புமுறையிலேயே அம்பேத்கரின் தரிசனம் வெளிப்படுகிறது. Continue reading

அம்பேத்கரின் தம்மம்- 1

அம்பேத்கரின் தம்மம்- 1

ஜெயமோகன்.காம் ல் இருந்து

புத்தகங்களைப் பூஜையறையில் வைத்து வாசிப்பதற்காக ஒரு ஸ்டேண்ட் உண்டு. கத்திரி போன்ற வடிவில் இருக்கும். அதற்கு எங்களூரில் கிரந்தகாவடி என்று பெயர். பெரும்பாலான குமரிமாவட்டப் பழங்கால வீடுகளில் அது சந்தன மரத்தில் செய்யப்பட்டிருக்கும். நான் சிறுவயதாக இருக்கும்போது அப்படி ஒரு ஸ்டேண்டை எடுத்துக்கொண்டு வந்து அதில் வைத்து அலக்ஸ்டாண்டர் டூமாவின் த்ரீ மஸ்கிட்டீர்ஸ் என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். கனமான நூல். அதாவது பக்க அளவில்.

ஜோதிடரான என் பெரியப்பா அங்கே வந்தார். ‘அது என்ன நூல்?’ என்று கேட்டார். சொன்னேன். கடும் கோபத்துடன் ‘அதற்கு எதற்காக கிரந்த காவடி? எடுத்துக் கொண்டுபோ அந்த புத்தகத்தை’ என்று கத்தினார். நான் நடுங்கிப்போனேன். கொஞ்சநேரம் கழித்து சாந்தமாகி ஒருவாய் வெற்றிலை போட்டுத் துப்பியபின் அவர் விளக்கினார். ஒரு நூலுக்கு கிரந்தகாவடி வைப்பது என்பது ஒரு பெரிய கௌரவம். அதை எல்லா நூல்களுக்கும் கொடுக்கக்கூடாது. Continue reading

துயரம்

துயரம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெ,

மானுட துக்கம் பெரும் துக்கம் அல்லவா? மானுடம் தனது பரிணாமத்தின் ஒரு புள்ளியில் தவறான அடி எடுத்து வைத்துவிட்டது. அல்லது இந்த துக்கம் எல்லாம் நம்மால் விளைந்ததுதான் என்று என்ன சொன்னாலும் நமது துக்கம் பெரும்துக்கம் அல்லவா ? அறியாமையின் துக்கம், அறியவவே இயலாதவை அளிக்கும் துக்கம். என்னெனவோ ? உதாரணமாக சீதையின் துக்கம். கிறிஸ்து மானுட பாவத்தால் சிலுவை சுமந்து செல்வதில் உள்ள துக்கம். Continue reading