சமணம் வைணவம் குரு – கடிதங்கள்

சமணம் வைணவம் குரு – கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

feet

[சமணப்பாதங்கள்]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். உங்களுடைய சிறுகதைத் தொகுப்பு, விஷ்ணுபுரம் படித்திருக்கிறேன். ப்ளாக்-ஐ நான்கு வருடங்களுக்கும் மேலாகப் படித்தும் வருகிறேன். நீங்கள் அமெரிக்கா வந்தபோது உங்களை கலிபோர்னியாவில் (Fremont) சந்தித்துப் பேசிய அனுபவமும் உண்டு. உங்களுக்கு நன்றி கூறி எழுத வேண்டும் என நிறைய நாள், பல முறை யோசித்தது உண்டு, ஆனால் என் சோம்பேறித்தனமே ஒவ்வொரு முறையும் வென்றது. Continue reading

இரண்டு வானோக்கிய சாளரங்கள்

இரண்டு வானோக்கிய சாளரங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

ராமாயணம் பெரும் காவியம்தான். இந்திரஜித்தும், ஹனுமனும், லக்ஷ்மணனும், கும்பகர்ணனும், ராவணனும் மாபெரும் ஆளுமைகள்தான். ஆனால் மகாபாரதத்துக்கு அதை சமமாக சொல்ல முடியாது. உண்மையில் பாரதத்துக்கு ஈடான இலக்கியம் இது வரையில் வரவில்லை. யாரோ சொன்னது (நீங்கள்தானா?) நினைவுக்கு வருகிறது – இன்று வரை வந்த ஒவ்வொரு கதைக்கும் வேர் மகாபாரதத்தில்தான் இருக்கிறது!

RV
koottanchoru.wordpress.com

Continue reading

தருமன்

தருமன்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_0236

[வடகிழக்கு பயணத்தின்போது]

அன்பின் ஜெமோ,

கோபத்தால் பலவற்றை இழந்த எனக்குள் அவ்வப்போது எழும் கேள்வி இது. என்ன மாதிரியான மனிதன் இந்த தர்மபுத்திரன்? பலபேர் முன்னிலையில் தன் மனைவி மானபங்கப் படும்போது கூட கோபம் வராத கணவனாக இருக்கிறான். ஐவரில் இவன் மட்டும் சபதம் செய்யாதவனாக இருக்கிறான். ‘அறம்’ சிறுகதையைப் படித்து சில நாட்கள் அதை அசை போட்டபின் இந்தக் கேள்வி மறுபடியும் எனக்குள் வந்தது. ஆமாம், உங்கள் பார்வையில் என்ன மாதிரியான மனிதன் இந்த தர்மன்?

 – பாஸ்கி

Continue reading

தல்ஸ்தோயின் கலைநோக்கு

தல்ஸ்தோயின் கலைநோக்கு

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெயமோகன்,

டால்ஸ்டாயுடைய ‘what is art’ http://www.archive.org/details/whatisart00tolsuoft படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.  ஒரு எழுத்தாளராக அந்தக் கட்டுரையை நீங்கள் எப்படி அறிந்து கொள்கிறீர்கள்  என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

ஓப்லா விஸ்வேஷ்

Continue reading

பௌத்தமும் வேதாந்தமும்

பௌத்தமும் வேதாந்தமும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெ,

அம்பேத்கரின் தம்மம் கட்டுரை அற்புதமாக இருந்தது. பௌத்த தரிசனத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது. சரளமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல சொற்களை நின்று கவனிக்க வைத்தது. இந்தக் கட்டுரையை ஒரே வீச்சில் படித்து விட முடியவில்லை. நிறுத்தி நிறுத்தி, படித்த வரிகளையே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொண்டு தான் தொடர்ந்து போக முடிந்தது. கட்டுரையின் பொருள் செறிவு ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம், கட்டுரை பேசும் முக்கியமான சில விஷயங்களைப் பற்றி ஏற்கனவே உங்கள் தளத்திலும் (முக்கியமாக கீதை உரை), வேறு நூல்களிலும் படித்துச், சிந்தித்து வைத்திருந்த கருத்துக்கள் இடைமறித்ததால். Continue reading

துயரம்

துயரம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெ,

மானுட துக்கம் பெரும் துக்கம் அல்லவா? மானுடம் தனது பரிணாமத்தின் ஒரு புள்ளியில் தவறான அடி எடுத்து வைத்துவிட்டது. அல்லது இந்த துக்கம் எல்லாம் நம்மால் விளைந்ததுதான் என்று என்ன சொன்னாலும் நமது துக்கம் பெரும்துக்கம் அல்லவா ? அறியாமையின் துக்கம், அறியவவே இயலாதவை அளிக்கும் துக்கம். என்னெனவோ ? உதாரணமாக சீதையின் துக்கம். கிறிஸ்து மானுட பாவத்தால் சிலுவை சுமந்து செல்வதில் உள்ள துக்கம். Continue reading

பௌத்தமும் அகிம்சையும்

பௌத்தமும் அகிம்சையும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

‘ஒரு அதிர்வு இருக்குதுங்க!’ என்ற கட்டுரையில் தாங்கள் புத்தர் மிருக பலி இல்லாமல் வைதீக சடங்கு செய்யச் சொன்னது பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஆனால் புத்த மதம் உண்மையிலே கொல்லாமையை வலியுறுத்துகிறதா? புத்தம் தழைத்துள்ள திபெத், மியான்மர், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் அசைவம் சாப்பிடுகின்றனர் . அதைக் காட்டிலும் இலங்கையில் புத்த பிட்சுகள் பலரே சிங்கள இனவாதத்தைத் தூண்டுபவர்களாகவும் இருகின்றனர். இப்படி இருக்கையில் ஏன் வைதீகச் சடங்கின் உயிர்க்கொலையை மட்டும் புத்தர் மறுக்க வேண்டும் . உணவிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கொல்லாம் ஆனால் வேதச் சடங்கிற்காக கொல்லக் கூடாது. இதில் என்ன நியாயம் இருக்கிறது

நன்றி,

ராம்குமரன்

Continue reading

பொம்மையும் சிலையும்

பொம்மையும் சிலையும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அ ன்புள்ள ஜெயமோகன்,

இந்து மதத்தின் வழிபாட்டுச் சிலைகளை ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றியபடி விளக்கிக்கொள்ளலாம் என்று நீங்கள் சொல்கிறீர்களா? அவ்வாறு ஆளுக்காள் அதை மாற்றுவார்கள் என்றால் அதன் பின்னர் நம்முடைய விக்ரகங்கள் எப்படி இருக்கும்? வழிபடுவதற்கு சாமிகளே இருக்காதல்லவா? ஒருமதத்தின் அடிப்படைகளை மாற்றிக்கொண்டே இருப்பது எப்படி சரியானதாக ஆகும்? Continue reading

ஒரு அதிர்வு இருக்குதுங்க!. [தொடர்ச்சி.]

ஒரு அதிர்வு இருக்குதுங்க!.[தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

தமிழ்வரலாற்றில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் தாந்த்ரீகத்தை பக்தியால் விளக்கும் இந்தப் போக்கு நிகழ்ந்து வருகிறது. மிகச்சிறந்த உதாரணம் திருமந்திரம், சித்தர்பாடல்கள் போன்றவற்றுக்கு எழுதப்பட்ட உரைகள். அந்த மூல ஆக்கங்கள் சென்றகால தாந்த்ரீகமரபைச் சேர்ந்தவை. அவற்றின் பெரும்பகுதி எவருக்கும் பொருள்புரியாதபடி மூடுண்டது. திருமந்திரத்தின் இரண்டாம் இருநூறுபாடல்களில் பெரும்பாலானவை மர்மமானவை. சித்தர்பாடல்களில் கம்பிளிச்சட்டைநாயனார் போன்றவர்களின் பாடல்கள் நமக்கு என்னவென்றே தெரியாதவை. அவற்றை எல்லாம் பக்திநோக்கில் மிகமிக எளிமைப்படுத்திப் பொருள்கொண்டு இந்த உரைகள் எழுதப்பட்டுள்ளன. Continue reading

ஒரு அதிர்வு இருக்குதுங்க!.1

ஒரு அதிர்வு இருக்குதுங்க!.1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். இந்து மதத்தைப் பற்றிய உங்கள் பல ஆக்கங்கள் என் மதத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ளப் பெரிதும் உதவி இருக்கிறது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. சில விஷயங்களைப் பற்றி உங்கள் கருத்துகளைத் தெளிவுபடுத்தினால் வசதியாக இருக்கும். உங்கள் இணையதளம் முழுவதும் தேடிப்பார்த்து பதில் கிடைக்கவில்லை என்பதாலேயே இங்கே கேட்கிறேன். நீங்கள் பொதுவாகவே வைதீகம் சம்பந்தப்பட்ட பழக்கங்களைத் தேவையற்றதென ஒதுக்குவதாகவே புரிந்துகொள்கிறேன். கோவில்களை இந்து மதத்தின் குறியீடுகளாக நீங்கள் பார்க்கிறீர்கள். அங்கு நடக்கும் பூசைகளிலேயோ வழிபாட்டு முறைகளிலேயோ எந்தவிதத் திட்டவட்டமான பயன்களும் இல்லை, ஆனால் ‘அவை நம் பண்பாட்டின் நுட்பமான பன்மைத்தன்மையின் சின்னங்கள், அவை தொன்மங்கள், குறியீடுகள், அவை அளிக்கும் ஆழ்மனப்பதிவு முற்றிலும் தனித்தன்மை கொண்டது’ என்பதாகவே நீங்கள் சொல்கிறீர்கள். வீட்டில் சடங்குகளின்போது கடைப்பிடிக்கப்படும் ஆச்சாரங்களைப் பற்றியும் உங்கள் கருத்து இதுவே என நான் நினைக்கிறேன்.

Continue reading