தியானம்:கடிதங்கள்

தியானம்:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

JJ%2520362

[அந்தியூரில் அருவிக்கு மேலே]

வணக்கம் குரு.,

தியானம் என்ற சொல்லே மிகவும் வசீகரமானது! உங்கள் கட்டுரையில் (கடிதமே தற்போது கட்டுரை வடிவில் தானே அமைகிறது!!) உள்ள விளக்கம் மிகவும் பயனுள்ளது. தியானம், யோகம் சார்ந்து ஏற்படும் இவை போன்ற கேள்விகளுக்கு உங்களின் “பதஞ்சலி யோக சூத்திரத்திற்க்கு ஒரு எளிய விளக்கம்” ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தியது. தாங்கள் குறிப்பிட்டது போல் அதன் தொடர்ச்சியை ஆரம்பித்தால் மேலும் இவை போன்ற கேள்விகளுக்கு அதிலேயே பதில் கிடைக்கும். அதன் முன்னுரையில் குறிப்பிட்ட விளக்கமே பெரும் தெளிவை ஏற்படுத்தியது. நீங்கள் அளிக்கும் உரை வரும் தலை முறையினருக்கு நீங்கள் குறிப்பிட்டது போல் “யோகத்தை புரிந்து கொள்வதற்க்கும், யோகத்தை புரிவதற்க்கும்” பெரும் பயனுள்ளதாக அமையும்.

தியானம்

தியானம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

JJ%2520265

[அந்தியூர் டீக்கடையில். எதிரே விஜயராகவன். சிரிப்புடன் கடலூர் சீனு]

மதிப்பிற்குரிய ஜெ,

நீங்கள் பயணத்தில் இருக்கும் போது உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்.
தியானம் செய்வது எப்படி என்று எளிய முறையில் ஒரு செயல்முறை விளக்கம் கூறினீர்களென்றால் அது என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நேரம் கிடைக்கும்போது இதையும் கவனத்தில் கொண்டு எழுதலாமே? ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நல்ல புத்தகங்கள் இருப்பின் அவற்றை எனக்கு பரிந்துரை செய்யுங்கள்.
இப்படிக்கு
கிறிஸ்

ஆத்மாவும் அறிவியலும்:கடிதங்கள்

ஆத்மாவும் அறிவியலும்:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

JJ%2520171

[அறம்  நூல் வெளியீட்டு விழா. ஈரோடு]

அன்புள்ள ஜெ,

செந்தில் அவர்களுக்கு நீங்கள் எழுதிய இரு கடிதங்களும் எனக்கு நிறையவே தெளிவினை அளித்தன. நான் நெடுநாட்களாகவே இந்த மாதிரி சந்தேகங்களைக் கொண்டிருந்தேன். கீதையிலும் உபநிஷத்துக்கள் எல்லாவற்றிலும் ஆத்மாவைப்பற்றிய பேச்சு உள்ளது. ஆனால் எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பாடாக காணப்படுகின்றது. ஆத்மா உடலை விட்டு நீங்குவதும் வானத்தில் மிதந்து கொண்டிருப்பதையும் இன்னொரு உடலை அது எடுப்பதையும் எல்லாம் நாம் ஒரு இடத்திலே காண்கின்றோம். மற்ற இடத்தில் ஆத்மா மனிதனுக்குள் இருந்து கொண்டு ஜாக்ரம் ஸ்வப்னம் துரியம் ஆகிய முந்நிலைகளில் தன்னை கண்டுகொண்டிருக்கும் ஒரு அகம் மட்டிலுமே என்ற சிந்தனை உள்ளது  என்பதைக் காண்கின்றோம். நம்முடைய நூல்கள் இரண்டையுமே மாறி மாறிச் சொல்கின்றன.

Continue reading

ஆத்மாவும் அறிவியலும்: ஒரு விவாதம்.2

ஆத்மாவும் அறிவியலும்: ஒரு விவாதம்.2

ஜெயமோகன்.இன்.ல் இருந்து

JJ%2520039

[வாசகர் ஈரோடு விஜயராகவன் இல்லத்தில் ஒரு சந்திப்பு]

அன்புள்ள ஜெயமோகன்,

தங்கள் கடிதத்துக்கு நன்றி. முதலில் உங்கள் விரிவான கடிதத்துக்கு முதலாவதாக. இத்தனை விரிவான நல்ல கடிதத்தை இத்தனை விரைவில் எப்படி எழுத முடிகிறது என்று நான் வியக்கிறேன். உங்கள் கடிதம் சில தெளிவுகளை அளிக்கிறது. பிரபஞ்சமனம்– அபப்டி ஒன்று இருந்தால்–  பற்றி மேலும் விவாதிக்க தூண்டுகிறது. பதஞ்சலி மற்றும் பௌத்தத்தின் மனம் பற்றிய விளக்கங்களை அறிய ஆவல் உண்டு.

நான் அமெரிக்காவில் கணிப்பொறி இயலில் முதுகலை படிக்கிறேன். மன-மூளை அறிவியல் சார்ந்து முனைவர் பட்டத்துக்கு ஆய்வுசெய்யும் நோக்கில் இருக்கிறேன். மனம் பற்றிய என் அறிதல் எல்லைக்குபட்டது என்பதும் நான் செல்லவேண்டிய தூரம் அதிகம் என்பதும் எனக்கும் தெரியும் Continue reading

ஆத்மாவும் அறிவியலும்:ஒரு விவாதம்.1

ஆத்மாவும் அறிவியலும்: ஒரு விவாதம்.1

ஜெயமோகன்.இன்.ல் இருந்து

JJ%2520233

[அறம்  நூல் வெளியீட்டு விழாவின் போது ஓட்டல் அறையில் ஓர் உரையாடல்]

அன்புள்ள ஜெயமோகன்,

கீதை, சாங்கிய யோகம் குறித்த உங்கள் பதிவை படித்தேன். நீங்கள் செவ்வியல் நோக்கில் ஆத்மா குறித்த கேள்வியை அணுகுவதை நான் வரவேற்கிறேன். அந்தக் கட்டுரையில் நீங்கள் ஆத்மாவின் பொருளை விளக்க பல வழிகளை கையாள்கிறீர்கள். ஆனால் அறிவியல் சார்ந்த அணுகுமுறைகளைப்பற்றிய உங்கள் கருத்து முன் தீர்மானம் கொண்டதாக உள்ளது. அறிவியலின் விளக்கங்களை நீங்கள் மேலோட்டமாக விளக்குகிறீர்கள். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ  இந்து மத கோட்பாடுகளை பிற கோட்பாடுகளுக்கு மேலாக ஆதரித்து வாதிடுகிறீர்கள் என்று படுகிறது. உங்கள் கட்டுரை ஒரு விஷயத்தை தெளிவாகவே காட்டுகிறது. உங்களால் தத்துவ, ஆன்மீக கோணத்தில் விஷயங்களை விளக்க முடிகிறது, அறிவியல் சார்ந்து முடியவில்லை. Continue reading

கீதை : முரண்பாடுகள் [தொடர்ச்சி]

கீதை : முரண்பாடுகள் [தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC_5410

[நூலகம். நாரயணகுருகுலம்]

மிக எளிமையான வினா ஒன்றை நாம் எழுப்பிக் கொள்ளலாம். கீதை இந்து ஞானமரபின் மூன்று தத்துவங்களில் (பிரஸ்தான த்ரயம்) ஒன்று. சாங்கியமும் யோகமும் இந்து ஞானமரபின் ஆறுதரிசனங்களில் அடங்கியவை. ஆறுமதம், ஆறுதரிசனம், மூன்று தத்துவம் அடங்கியதே இந்து ஞானம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட மரபு. இத்தனை நூற்றாண்டுக்காலம் இம்மரபு பயிலப்பட்டுள்ளது, விவாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரிசனங்கள் பிரஸ்தானத்திரயத்தில் ஒன்றாக உள்ள ஒரு மூலநூலில் முட்டாள்தனமாகச் சிதைக்கப்பட்டிருப்பதை உணரமுடியாதவர்களாகவோ உணர்ந்தாலும் நியாயப்படுத்துபவர்களாகவோ இருந்தார்களா நம் முன்னோர்? ஒருவர் இருவரல்ல, சங்கரர், ராமானுஜர் முதல் இன்று நித்ய சைதன்ய யதி வரை உள்ள அத்தனைபேரும்? இந்த மார்க்ஸிய ஆய்வாளர்கள் வந்துதான் அதைச் சுட்டிக்காட்ட வேண்டுமா? Continue reading

கீதை : முரண்பாடுகள் [தொடர்ச்சி]

கீதை : முரண்பாடுகள் [தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC_5413

[ஊட்டி இலக்கிய முகாமில்]

முரண்பாடல்ல முரணியக்கம்

அடுத்தவகை முரண்பாடு கீதையின் முரண்பாட்டியக்க அணுகுமுறையின் விளைவாகும். ஒன்றோடொன்று முரண்படும் இருகூறுகள் தங்களுக்குள் மோதி முயங்கி முன்னகர்ந்து புதியதை உருவாக்குதலே முரணியக்க இயக்கவியல். டைலடிக்ஸ் என்று கிரேக்க மெய்யியலில் கூறப்பட்ட இந்த தத்துவ நோக்கு ஹெகல் மூலம் வரலாற்றுக்கு பயன்படுத்தப்பட்டது – அதுவே முரணியக்கப் பொருள் முதல்வாதம். கார்ல் மார்க்ஸ் அதை பொருளியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வளர்த்தெடுத்தார். இன்றுவரை வரலாற்று சக்திகளையும் சமூகவியல் சக்திகளையும் புரிந்து கொள்வதற்கான சிறந்த வழிமுறையாக இது உள்ளது. இது உண்மையா இல்லையா என்ற வினாவே தவறு. இது ஒரு நல்ல கருவி, அவ்வளவுதான். Continue reading

கீதை : முரண்பாடுகள்

கீதை : முரண்பாடுகள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC_5615

[ஊட்டி இலக்கிய முகாமில்]

சுவாமி சித்பவானந்தரின் கீதை உரை தமிழில் மிகவும் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்ட நூல் அது. அதன் முன்னுரையில் அவர் – ‘கொலை நூலா?’ என்று ஒரு உபதலைப்பில் பகவத்கீதை கொலையை எடுத்துரைக்க்கும் நூலா என்ற வினாவுக்கு விரிவான பதிலைக் கூறுகிறார். தத்துவார்த்தமாகவும் நடைமுறை சார்ந்தும் கூறப்பட்ட கச்சிதமான விளக்கம் அது. கீதைக்கு உரைவகுத்த நவீன காலத்திய ஆன்மிகவாதிகள் அனைவருமே அந்த வினாவுக்கு ஏறக்குறைய அந்த வினாவினை அளித்துள்ளனர். உலகம் முழுக்க சைவ உணவுக்காகவும் கொல்லாமைக்காவும் அமைப்பு ரீதியாகப் பணியாற்றி வரும் ஹரே கிருஷ்ணா கிருஷ்ணபக்தி இயக்கம் (இஸ்கான்) தான் கீதையை உலகளாவ கொண்டு செல்கிறது. அகிம்சையை அரசியல் உள்பட வாழ்வின் அனைத்து மட்டத்திற்குமான செயல் முறையாக முன்வைத்த காந்தியின் மூலநூலாக இருந்ததும் கீதையே. Continue reading

அயன் ராண்ட் ஒரு கடிதம்

அயன் ராண்ட் ஒரு கடிதம்
ஜெயமோகன்.இன் ல் இருந்து
அன்புள்ள ஜெ
நான் இதை மிகப் பணிவாகத்தான் எழுதுகிறேன்.  ஒரு விவாதமாக அல்ல. நீங்கள் ayn rand ஐ முழுதாக அலசாததாகவே  எண்ணுகிறேன். மற்ற விஷயங்களில் உள்ள நடு நிலை இதில் இல்லாமல் போனது போலத் தோன்றுகிறது. தயவு செய்து சோர்வு கொள்ளாமல் predetermined notion அல்லாமல் படிக்க வேண்டுகிறேன், Continue reading

அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் [தொடர்ச்சி]

அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் [தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அயன் ராண்ட் பற்றிய என் கட்டுரையை தொடர்பு படுத்தி இக்கடிதத்தை வாசிக்கலாம். கோபத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அது முழுக்க முழுக்க நியாயமானதே. அயன் ராண்ட் குறித்து நம் சூழலில் இருக்கும் வழிபாட்டுணர்வுக்கு இப்படி ஒரு கோபம் எழாமல் இருந்தால்தான் ஆச்சரியம். மேலும் என்னைப்பொறுத்தவரை தத்துவத்தை தன் தளமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் மீது இருக்கும் பிடிப்பு என்பது ஒரு தொடக்கம் என்ற நிலையில் மிக ஆரோக்கியமான ஒன்றே.

Continue reading