முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.3

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.3

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

யோகத்தின் வரலாற்றுப் பின்னணி

யோகத்தின் வரலாற்றுப்பின்னணி என்ன என்று புரிந்துகொள்வது யோகத்தை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல யோகத்தை புரிவதற்கும் அவசியமானது. தற்காலத்தில் யோக சாதனைகளில் பலவகைகளிலும் ஈடுபடுபவர்களிடம் அப்படிப்பட்ட புரிதல் ஏதும் இல்லை என்பது நாமறிந்ததே. யோகத்தை ஒருவிதமான பக்தியாக ‘ காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்’ நிலையாக இவர்களில் சில விளக்கும் அபத்தமும் நமது சூழலில் நடந்துகொண்டுதான் உள்ளது. யோகம் எவ்விதமான மன எழுச்சிக்கும் எதிரான ஒன்று என்பதை அவர்கள் உணராமைக்கு காரணம் அதன் வரலாற்று இடத்தைப்பற்றிய அறிதல் இல்லாமையே.

பாரத தத்துவ மரபின் தொடக்கப்புள்ளி என்று வேதங்களை சொல்வது வழக்கம். குறிப்பாக ரிக் வேதம் .அதிலும் குறிப்பாக ரிக்வேதத்தில் உள்ள பத்தாம் மண்டிலம். அதில்தான் ஆன்மீக சிந்தனைக்கு அடிப்படையாக அமையக்கூடிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன . ஆதி தரிசனங்கள் பேசப்பட்டுள்ளன. வேதங்களில் பெரும்பகுதி தோத்திரப்பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் அடங்கியதே. அவற்றில் தத்துவத்துக்கு மிக குறைவாகவே பங்கு உள்ளது .அனுஷ்டானங்கள் , அதாவது வேள்வி மற்றும் வழிபாட்டுச் சடங்குகளுக்கு பாடப்படவேண்டிய மந்திரங்களாகவே அவை உள்ளன. அச்சடங்குகளின் நோக்கம் திட்டவட்டமான சில நன்மைகளே. அதிகாரம் ,செல்வம், வெற்றி, புகழ் முதலியவையே வேதங்களில் வேண்டப்படுகின்றன ஆகவேதான் கீதை முதலிய பிற்கால தத்துவ நூல்கள் வேதங்கள் உலகியல் நோக்கங்களை [சம்சாரத்தை] முன்வைப்பவை என்று சொல்லி நிராகரிப்பின் தொனியில் பேசுகின்றன. வேதங்கள் தத்துவ விவாதங்களுக்கு அடிப்படைகளாக அமைவதைப்பார்க்கிலும் வேள்வி மந்திரங்களாகவே பெரிதும் கருதப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. Continue reading

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.2

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.2

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

யோகம் மத வழிபாடா ?

தியானமே மதத்துடனும் கடவுளுடனும் பிரிக்கமுடியாத தொடர்பு உடையதல்ல என்றோம் .அப்படி இருக்க யோகம் மதத்துடனோ , கடவுளுடனோ தொடர்புடையது என்று சொல்ல வாய்ப்பே இல்லை .யோகம் முழுக்க முழுக்க உடல் , மனப்பயிற்சி மட்டுமே . யோகம் இந்தியமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று . அடிப்படையில் இது நாத்திக தரிசனமாகும் . வெகுகாலம் யோகம் லௌகீக தரிசனமாகவே கருதப்பட்டது .பிற்காலத்தில் , குறிப்பாக சொல்லப்போனால் பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன. அதை விரிவாக பிறகு காணலாம் .யோகத்தின் மூல நூல்கள் எதிலுமே கடவுளுக்கு இடமில்லை . பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூட யோகப் பயிற்சியாளன் தன்னை தயாரித்துக்கொள்ள மேற்கொள்ளும் மனப்பயிற்சிகளில் ஒன்றாக மட்டுமே இறைவணக்கம் சொல்லப்பட்டுள்ளது . மேலும் யோகம் தத்துவ அடிப்படையிலே கூட கடவுள் என்ற கருதுகோளுக்கு எதிரானதாகவே இருக்கிறது . அது ஆதி இயற்கை என்ற கருதுகோளை பிரபஞ்சத்தின் மூலகாரணமாக வைத்த சாங்கிய மெய்ஞான மரபின் ஒரு பகுதி. Continue reading

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.1

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.1

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற ஒரு புராதன நூலுக்குள் நுழைவதற்கு முன்பு வாசகர்களுக்கு வரக்கூடிய முக்கியமான ஐயங்கள் சிலவற்றை களைய வேண்டியுள்ளது. யோக சாதனை என்று கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும் கடவுளுடனும் தொடர்புபடுத்திக் கொள்வது பெரும்பாலோருக்கு இயல்பாக உள்ளது. யோகத்தை பற்றிய மிகத் தவறான புரிதல் அது.

நாம் வாழும் இச்சூழலில் இன்று தொடர்பு ஊடகங்கள் மிகவும் மலிந்துள்ளன. ஏராளமான விஷயங்களை தினமும் கேள்விப்பட்டபடி இருக்கிறோம். ஆனால் எவற்றையுமே உள்ளே சென்று ஆழத்தில் அறிவதற்கு நம்மால் முடிவதில்லை. அதற்கான அவகாசம் நமக்கில்லை. நம்முடைய லௌகீக ஆசைகள் முடிவற்றவை. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள செய்யவேண்டிய உழைப்பு ஒரு நாளும் ஓயாதது. ஆகவே அன்றாட அலுவல்கள் மற்றும் நாம் ஈடுபடும் தொழில் ஆகியவை தவிர அனைத்து விஷயங்களைப்பற்றியும் நாம் மேலோட்டமான சில பொதுப்புரிதல்களையே கொண்டுள்ளோம். அவற்றையே உண்மை என்று நம்பவும் செய்கிறோம். நமது வாழ்க்கையை உடனடியாக பாதிக்கும் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கூட நமது புரிதல்கள் பலசமயம் அபத்தமானவையாகவும், ஆபத்தான அளவுக்கு அரைகுறையானவையாகவும் உள்ளன. இந்நிலையில் ஆன்மீகம், தத்துவம், மதம் குறித்த விஷயங்களில் நமது புரிதல்கள் மிக மேலோட்டமானவையாக இருப்பதில் வியப்பில்லை . Continue reading