ஆத்மாவும் அறிவியலும்: ஒரு விவாதம்.2
ஜெயமோகன்.இன்.ல் இருந்து
[வாசகர் ஈரோடு விஜயராகவன் இல்லத்தில் ஒரு சந்திப்பு]
அன்புள்ள ஜெயமோகன்,
தங்கள் கடிதத்துக்கு நன்றி. முதலில் உங்கள் விரிவான கடிதத்துக்கு முதலாவதாக. இத்தனை விரிவான நல்ல கடிதத்தை இத்தனை விரைவில் எப்படி எழுத முடிகிறது என்று நான் வியக்கிறேன். உங்கள் கடிதம் சில தெளிவுகளை அளிக்கிறது. பிரபஞ்சமனம்– அபப்டி ஒன்று இருந்தால்– பற்றி மேலும் விவாதிக்க தூண்டுகிறது. பதஞ்சலி மற்றும் பௌத்தத்தின் மனம் பற்றிய விளக்கங்களை அறிய ஆவல் உண்டு.
நான் அமெரிக்காவில் கணிப்பொறி இயலில் முதுகலை படிக்கிறேன். மன-மூளை அறிவியல் சார்ந்து முனைவர் பட்டத்துக்கு ஆய்வுசெய்யும் நோக்கில் இருக்கிறேன். மனம் பற்றிய என் அறிதல் எல்லைக்குபட்டது என்பதும் நான் செல்லவேண்டிய தூரம் அதிகம் என்பதும் எனக்கும் தெரியும் Continue reading