விஷ்ணுபுரமும் பிராமணர்களும்

விஷ்ணுபுரமும் பிராமணர்களும்

கேள்வி பதில் ஜெயமோகன்.இன் இல் இருந்து

அன்புள்ள ஜெயமோகன்,

நன்றி. இப்போது படித்து முடித்து ஒரு முழுமை மனதில் வந்து படிகிறது.

அலுவலகப் பணியில் கொஞ்சம் ஓய்வு கிடைத்ததால் விஷ்ணுபுரம் கௌஸ்துபம் முடிந்து மணிமுடியில் வந்து தங்கிவிட்டேன்.

சுடுகாட்டு சித்தன் மீண்டும் வருவாரா என்ற ஏக்கத்துடன் படிக்கிறேன் . அதற்குள் பிரளயம் வந்து விட்டதே.

எனக்கென்னவோ விஷ்ணுபுரம் இன்னும் கூட எழுதலாம் என்றே தோன்றுகிறது. ஸ்ரீ பாதத்தில் இருந்த வக்கணை கௌஸ்துபத்தில் இல்லை. ஆனால் தர்க்கங்கள் தத்துவ விசாரங்கள் நேரடியாக இருந்தது பிடித்திருந்தது. ஆனால் நீளம் போதவில்லை என்றே தோன்றுகிறது. தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதே மெய் ஞானம் எனும் போது அப்பாடா என்ற நிம்மதி வருகிறது (அதனால் தர்க்கம் வீண் என்று நான் பொருள் கொள்ளவில்லை. அதன் எல்லைகள் நான் புரிந்தது போலவே அமைந்தது மன நிறைவைக் கொடுக்கிறது). Continue reading

குருகுலமும் கல்வியும் – 3

குருகுலமும் கல்வியும் – 3 [நிறைவுப்பகுதி]

[எனி இன்டியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘குருவும் சீடனும், ஞானத்தேடலின் கதை’ -தமிழாக்கம் ப.சாந்தி -என்ற நூலுக்கான முன்னுரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கவிஞர் தேவதேவன் கவிதையரங்கு. திப்பரப்பு. குமரி மாவட்டம்]

மூன்று

நாராயண குருவின் குருகுல உரையாடல்கள் பற்றி ஓரளவே எழுதப்பட்டுள்ளது. மூர்க்கோத்து குஞ்சப்பா, குமாரன் ஆசான், ச்கோதரன் அய்யப்பன் போன்றோர் எழுதிய குறிப்புகள் முக்கியமானவை. நடராஜ குருவின் வகுப்புகளைப்பற்றி நித்யாவைப்போலவே சிதம்பரானந்த சுவாமி எழுதியிருக்கிறார். உண்மையில் அந்நூல் இந்த நூலைவிட சுவாரஸியமானது. அதையும் தமிழாக்கம்செய்யும் என்ணம் உள்ளது

ஆக்கப்பூர்வமான குருகுலம் எப்படி இருக்கும் என்பதற்கான விரிவான சித்தரிப்பை அளிக்கிறது நித்ய சைதன்ய யதி அவரது சிறுவயதில் எழுதிய இந்நூல்.இந்நூலை எழுதும்போது அவருக்கு முப்பத்தைந்து வயதுதான். அவர் பிற்காலத்தில் எழுதிய பெரும் தத்துவ நூல்களின் தொடக்கப்புள்ளிகள் இந்நூலில் உள்ளன.குருவும் சீடனும் சேர்ந்து பயணம் செய்கிறார்கள்.குரு பேசிக்கொண்டே இருக்கிறார். வேடிக்கையாக. திடீரென்று சினம் கொண்டவராக. பெரும்பாலான சமயங்களில் ஆழ்ந்த தத்துவ நோக்கு கொண்டவராக. எல்லா தருணங்களிலும் பிரபஞ்சக்கூரை வேய்ந்த வகுப்பறை ஒன்றில்தான் இருவரும் உள்ளனர். Continue reading

குருகுலமும் கல்வியும் – 2

குருகுலமும் கல்வியும் – 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[குரு நித்யா காவிய முகாமின் போது  வாசக நண்பர்களுடன்.

நாராயணகுருகுலம், பெர்ன் ஹில், ஊட்டி ]

இரண்டு

நம் சமகால இந்தியாவில் தொடர்ச்சியாக நான்காவது தலைமுறையை எட்டியிருக்கும் ஒரு தத்துவ சிந்தனை மரபு என்று நாராயணகுருவின் சீடபாம்பரையைச் சொல்லலாம். தமிழ் சித்தர் மரபு இந்திய நவீனமயமாதலுக்கு அளித்த பங்களிப்புகள் என்று நாராயணகுரு , ராமலிங்க வள்ளலார் இருவரையும் கூற இயலும். கேரளத்தில் 1854 ல் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் கள் இறக்கும் ஈழவர் என்னும் சாதியில் பிறந்தவர் நாராயணகுரு. தந்தை மாடன் ஆசான். தாய் குட்டியம்மா. அச்சாதி அன்று தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டது. சிறுவயதிலேயே தமிழ் கற்று நூல்களை வாசிக்க ஆரம்பித்த நாராயணகுரு அன்று திருவனந்தபுரம் சாலைத்தெருவில் இருந்த தைக்காடு அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். பின்னர் இருபத்து மூன்றாம் வயதில் ஊரைவிட்டு கிளம்பி துறவு பூண்டு தமிழகத்தில் அலைந்தார். இக்காலகட்டத்தில் பல சித்தர்களை இவர் கண்டதாக ஊகிக்க முடிகிறது. பிற்காலத்தில் கேரள அறிவுத்துறையின் தலைமைப்பேரறிஞராக நாராயணகுருவை நிலைநாட்டிய சாஸ்திரக்கல்வி இக்கலத்தில் அவர் பெற்றதேயாகும். வேதங்கள் , உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மதங்கள், பௌத்த சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள் ஆகியவற்றில் நிகரற்ற கல்வி அவருக்கு இருந்தது. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பெரும்புலமை பெற்றார். Continue reading

முழுமையறிவும் கென் வில்பரும்

முழுமையறிவும் கென் வில்பரும்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

[மேக மலையில் நண்பர்களுடன்]

பலவருடங்களுக்கு முன்னர்  சி.பி.ஸ்நோ எழுதிய கட்டுரை ஒன்றை நான் மொழியாக்கம் செய்தேன். அதில் அவர் அறிவியலையும், கலைகளையும் ஏதேனும் ஒருவகையில் இணைப்பதைப்பற்றிப் பேசியிருந்தார். அந்த எண்ணம் என் மனதை அப்போது வெகுவாக ஆட்கொண்டு பலகாலம் கூடவே வந்திருக்கிறது.

அறிவியல் தர்க்கத்தை அடிப்படை அலகாகக் கொண்டது. கலைகள் கற்பனையை அடிப்படை அலகாகக் கொண்டவை. அவை உலகையும் வாழ்க்கையையும் தங்கள் நோக்கில் காண்கின்றன. அவ்விரு நோக்குகளும் தங்கள் அளவில் வளர்ந்து பல எல்லைகளைத் தொட்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டில் மானுட அறிவு  துறைகள் சார்ந்து பிரிந்து அதி நுண்மைகளை நோக்கி வெகுவாகச் சென்றுவிட்டிருக்கிறது. ஒரு துறையின் அதி நுண்ணிய உண்மைகளை தொட்டு அறியும் வல்லமை கொண்ட ஒருவர் பிறிதொரு துறையின் அடிப்படைகளையே அறியமுடியாமல் இருக்கும் நிலை  உருவாயிற்று. இதன்மூலம் மானுட அறிவானது பயன்கருதி ஒரு புள்ளியில் தொகுக்கப்பட முடியாத நிலை உருவாகி விட்டிருக்கிறது என்கிறார் ஸ்நோ. இந்த காலகட்டத்தின் ஆகப்பெரிய அறிவார்ந்த நெருக்கடி இதுவே என்கிறார். Continue reading

கடவுளை நேரில் காணுதல்

கடவுளை நேரில் காணுதல்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

[“தேசத்தின் முகம்” ஷிண்டே, மஹாராஷ்டிர மாநிலம் நானேகட் அருகில் காட்கர் கிராமம். இந்திய நெடும்பயணத்தின் போது]

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம் , சில சமயம் அபத்தமாகவும் உள்ளது, சில சமயம் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அதாவது இந்து புராணங்களில் திரும்ப திரும்ப வருவது ‘தவம் செய்தான் , கடவுள் தரிசனம் தந்தார்’ என்ற காட்சி. புத்தரின் சரித்திரத்தில் அவர் நிர்வாண நிலை அடைவதற்கு முன்பு 5 பேருடன் சேர்ந்து உக்கிரமான தவத்தில் ஈடுபட்டார் என்றும் , மிகக்குறைந்த உணவினால் ஏறக்குறைய சாகும் நிலைக்கு வந்து பிறகு வேறு பாதைக்கு மாறினார் என்றும் படித்தேன். புராணங்களில் இப்படி இருக்கிறது என்றால் , அதற்கு முன்பே இது போலக் கடவுளை நேரில் கண்ட தொனமங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

இது போன்ற தொனமங்கள் தோன்றுவதற்கு அடிப்படை அதீதக் கற்பனையா,இல்லை உண்மையிலேயே தியானத்தில் / ஒரே சிந்தனையில் பல நாள் இருந்ததினால் ‘கடவுளை’ காண முடிந்த ஒரு பிரம்மையா அல்லது தவத்தை முடிக்க வேண்டிய கட்டாயமா அல்லது ஒருவித மனத்திருப்தியா அல்லது ஒருவிதமான illusion or hallucination or delusion தோன்றி இருக்குமா?

இது பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்களா என்று தேடினேன் , கிடைக்கவில்லை.இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். புராணங்கள் எப்போதோ நடந்தவை என்ற என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கேள்வி இல்லை, மாறாக அப்படி எழுத/கற்பிக்கத் தூண்டிய psychological feature பற்றியே எனது ஆவல்.

பணிவன்புடன்
கோகுல் Continue reading

முடிவின்மையின் தொடர்பு : கார்ல் சகன், ‘தொடர்பு’

முடிவின்மையின் தொடர்பு

[ஜெயமொகன்.இன் இல் இருந்து தொகுத்தது]

[கார்ல் சகன்]

‘எல்லி அரோவே’ யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான தேடலை அறிவியலாளரான அவள் தந்தை கணிதத்தையும் அறவியலையும் நோக்கித் திருப்பினார். தந்தையுடன் அவளுக்கிருந்த உணர்வுப்பூர்வமான நுட்பமான உறவு அந்த தேடல் வலுப்பெற்று அதை மட்டுமே மையமானதாகக் கொண்டு அவளது ஆளுமை உருவாகக் காரணமாக அமைந்தது. இளமையின் சபலங்களுக்கோ உலகியல் ஆர்வங்களுக்கோ அவள் ஆளாகவில்லை. அவளது தேடல் அவளை வானவியல் ஆய்வாளராக ஆக்கியது.

Continue reading

பதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்

பதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து]

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் பதஞ்சலி யோகம் கட்டுரை படிக்கும் சூழல் ஏற்பட்டது. மிக அருமையான விளக்கம். ஒரு எழுத்தார்வலர் பதஞ்சலியை படிப்பது என்பது அரிதான ஒன்று.பதஞ்சலி யோக சூத்திரம் என்பது மதம், இனம் மற்றும் ஆன்மிகம் கடந்த விஷயம் என நீங்கள் விளக்கியதிலிருந்து உங்கள் புரிதல் மற்றும் அதன் ஆழம் உணர முடிகிறது.

கட்டுரையில் சில முரண்பட்ட தகவல்களை காண முடிந்தது. பாராட்ட விருப்பம் கொண்ட எனக்கு இதை சுட்டிக்காட்டவும் உரிமை உண்டு என நினைக்கிறேன்.

“பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன” என்று கூறுவது எதன் அடிப்படையில்?

ஐந்தாம் நூற்றாண்டில்தான் என்பதற்கு ஆதாரம் என்ன? Continue reading