விஷ்ணுபுரம் by ”ஈரோடு” கிருஷ்ணன்

 விஷ்ணுபுரம் by ”ஈரோடு” கிருஷ்ணன்

அதிக பட்சமாக ஒரு படைப்பு நம்மை என்ன செய்யும் ? படிக்கும் நாட்களில் எப்போதாவது நமது பணிகளுக்கிடையே நினைவுக்கு வரும், படிக்கும் பொழுது நமது வாழ்வனுபவங்கள் நினைவுக்கு வரும். சில பகுதிகள் மனதில் தங்கும் , காலக் காற்று தேய்த்து தேய்த்து அவை சில வரிகளாக சுருங்கும் , பின் ஆண்டுகள் கடந்தபின் ஒரு தொலை தூர ஞாபகமாக அதன் விளிம்புகள் மட்டும் எஞ்சும் . எவ்வளவு தான் உற்சாகத்துடன் ஒரு ஆக்கத்தைப் படித்தாலும் அடுத்த புத்தகங்கள் வரிசையாக காத்துநிற்கும் புதுமையின் கவர்ச்சியில் அந்த ஆக்கம் இன்னொரு வாசிப்பை பெறுவது இல்லை . எண்ணிப் பார்க்கையில் நாமாக ஒரு படைப்பை மீண்டும் படிப்பதில்லை , நமக்கு  ஒரு நெருக்கடியின் ஆணை தேவை.

Continue reading

விஷ்ணுபுரம் by கடலூர் சீனு

விஷ்ணுபுரம்

by கடலூர் சீனு

இனிய J.M,

இந்தப் பதிவினை ஓர் அறிமுக வாசகனின் எளிய பதிலாகவே முன்வைக்கிறேன். கடலின் ஆழமோ, விரிவோ, ஓய்வற்ற அலைநாவுகளின் தழலாட்டமோ, உலாடக்கிய உயிர்ச் சுழலோ இருக்காது, இது கரைமணலில் கிடக்கும் சங்கினில் அலை நிரப்பிய கடல் மட்டுமே.

உதிரத்தால் எரியும் சுடர்

தந்தை தனயன் உறவினை உள்ளார்ந்து இணைக்கும் உணர்வு எது? பிரியமா? துவேஷமா? தன் ஆளுமையை கடக்கும் மகன் மீது தந்தை கொள்ளும் பிரியம் அதன் ஆழத்தில் தன் தோல்வியின் வெறுப்பாக கனன்று கொண்டிருக்கிறதா? பவதத்தரின் விருப்பக் கனவு தானே விஷ்ணுதத்தன். ஞானத் தேட்டத்தில் பவதத்தரால் ஒருபோதும் தொடமுடியாத சிகரமல்லவா விஷ்ணுதத்தன் தொட்டது. பவதத்தர் அனுபவிக்கும் புத்திர சோகம் வரமாகி வந்த ஒன்றே சாபமாக மாறிப் போன துயரம் தானே? வேத ஞான வேள்வியில் அவிசாகிப் போனவன் விஷ்ணுதத்தனுக்காக வாழ்நாளின் இறுதிவரை வேத ஞானத்தை சிதையாக்கி எரிந்து கொண்டிருக்கிறார்

Continue reading

ஞானத்தின் பேரிருப்பு, விஷ்ணுபுரம் – சில குறிப்புகள் by வேணு தயாநிதி

ஞானத்தின் பேரிருப்பு

விஷ்ணுபுரம் – சில குறிப்புகள்

by வேணு தயாநிதி

Venu

2006-ஆம் ஆண்டு மதுரை புத்தகத்திருவிழாவில் தான் ஜெ.யை அறிமுகம் செய்துகொண்டேன். அவரின் சில சிறுகதைகள் சிற்றிதழ்களில் வெளிவந்த விவாதங்கள், கட்டுரைகள், நேர்முகங்கள் மற்றும் கன்னியாகுமரி நாவல் இவை மட்டுமே அப்போது படித்திருந்தேன்.

கன்னியாகுமரி நாவல் பற்றி பாராட்டு சொல்லிவிட்டு அதை ஃபெலினியின் 81/2 படத்துடன்2 ஒப்பிட்டுச் சொல்வதற்காக எண்ணங்களளைத் திரட்டிக்கொண்டிருந்தபோது, ”விஷ்ணுபுரம் படித்தீர்களா?” என்றார். “இல்லை” என்றதும் “அது படிக்க கொஞ்சம் கஷ்டமான புத்தகம் தான்” என்றார். விஷ்ணுபுரம் நூலை அப்போது நான் உண்மையிலேயே வாசித்திருக்கவில்லை என்பதால் என்னிடம் சொல்ல ஏதும் இருக்கவில்லை. ஆனால் அவரே அப்படிச்சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு வேறு விஷயங்களை விவாதித்தோம்.

Continue reading

விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… -பிரகாஷ் சங்கரன்

விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து…

-பிரகாஷ் சங்கரன்

மண்ணில் ஓடும் நதிகளெல்லாம் கடலையே அடைகின்றன. மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களுமெல்லாம் இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன. (சாந்தோக்ய உபநிடதம்)

*

முழுமை

உயர்ந்த மலையின் வெவ்வேறு சிகரங்களில் ஊற்றெடுத்த நீர் சிற்றோடைகளாகவும் குறு நதிகளாகவும் பாய்ந்து ஓரிடத்தில் சங்கமித்துப் பெருநதியாகப் பெருகி  மீண்டும் கிளைத்து துணைநதிகளாகவும் வாய்க்கால்களாகவும் ஓடி இறுதியில் கடலை அடைகின்றன.

Continue reading

விஷ்ணுபுரம் எனும் காவியம் – ராதாகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் எனும் காவியம்  

by ராதாகிருஷ்ணன்

இந்நூலின் மீதான என் முதல் வாசிப்பின் பின் நான்  உணர்ந்தது , விஷ்ணுபுர நகரின் கதை வழியாக ஒரு யுகத்தின் மனிதவாழ்வின் உச்ச சாத்தியங்களிருந்து அதன் பேரழிவு வரை  தரிசனமும் ,பல்வேறு மனங்கள் மூலம்  பிரபஞ்சம் தன் நிகழ்வினை நிகழ்த்தும் தரிசனமுமே,  அதுவே என்னை இந்நூல் ஒரு மகத்தான காவியமாக காண வைக்கிறது.

Continue reading

விஷ்ணுபுரம் – ஒரு துவக்க விமரிசனம்.by சுரேஷ்

விஷ்ணுபுரம் – ஒரு துவக்க விமரிசனம்.

 by சுரேஷ்

 சுமார் பத்து வருடங்களுக்குமுன் முதன்முறையாக விஷ்ணுபுரம் வாசித்ததில் விஷ்ணுபுரம் அதன் பிரம்மாண்டத்தாலும் வீச்சாலும் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. . அது அள்ளி வழங்கும் தகவல்கள்.-சிற்ப சாஸ்திரம், தத்துவம், விலங்குகளின் அங்க லட்சணங்கள்,  அவற்றுக்குச் சூட்டப்படும் அணிகலன்கள், ஆண்களும் பெண்களுமாய் மனிதர்கள் அணியும் ஆபரணங்கள், கோயிலின் விவரிப்பு, அதில் சொல்லப்படும் ஏராளமான மூர்த்திகள், யட்சர்கள், யட்சிகள் – இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொள்ளவே ஒரு வாசிப்பு சரியாய்ப் போய் விடுகிறது.பின்னர் விஷ்ணுபுரம் பற்றிய விதவிதமான வரலாறுகள் – நாமதேவரின் கோணம்,மகாவைதீகரின் கோணம், நிஷாதர்களின்  கோணம், ஸ்ரீபாதமார்க்கிகளின் கோணம் என்று பற்பலக் கோணங்களில் விஷ்ணுபுரம் விரிகிறது.

Continue reading