இந்திய ஞானமரபும் காந்தியும்

இந்திய ஞானமரபும் காந்தியும்

[08-09-10 அன்று பினாங்கு [மலேசியா] தண்ணீர் மலை காந்தி மண்டபத்தில் ஆற்றிய உரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[ஒரு விவசாயி. கும்பமேளா பயணத்தின்போது]

காந்தியின் சுயசரிதையான எனது சத்தியசோதனையில் ஓர் இடம் வருகிறது. மராட்டிய மாநிலத்தில் இருக்கையில் ஒருமுறை அவருக்கு உடம்பு சரியில்லாமலாகிறது. அஜீரணமும், காய்ச்சலுமாக துன்பப் படுகிறார். அலோபதி மருத்துவம் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இந்நிலையில் அப்பகுதியில் யோகி என்று புகழ் பெற்றவரான ஒரு சாமியாரை அவருக்கு மருத்துவம் பார்க்க அழைத்து வருகிறார்கள். அவர் சில மர்மமான வழிமுறைகளை பயன்படுத்தி சிகிழ்ச்சை அளிப்பதாக சொல்லப் படுகிறது
Continue reading

கடவுள்நம்பிக்கை உண்டா?

கடவுள்நம்பிக்கை உண்டா?

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[பூடான். வடகிழக்கு பயணத்தின் போது]

அன்புள்ள ஜெ,

இந்து ஞான மரபு, தத்துவங்கள், பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் பல இதர நூல்களை விரிவாக, ஆழமாகக் கற்று உணர்ந்த நீங்கள், கோயில்களின் சூட்சுமங்களைப் பற்றிப் பேசும் நீங்கள், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாமல் இருப்பது பெரும் ஆச்சரியம் அளிக்கிறது.

மாபெரும் கோயில்களை, நூல்களை உருவாக்கியவர்களைச் செலுத்தியது கடவுள் நம்பிக்கை தான். கோயில்களில் பல மிக நுட்பமான, எளிதில் புரிந்து கொள்ள முடியாத சூட்சமங்கள் நிறைய உள்ளன. மூலவர் சிவலிங்கதிற்கு அடியில் சில ‘எந்திரங்களை’ப் (மந்திரிக்கப்பட்ட தகடுகள்) புதைத்திருக்கும் சூட்சமம் உள்ளது. ஆத்மார்த்தமாக வழிபடுபவர்களுக்கு ஏதோ ஒன்று கிடைக்கிறது.

எனது வாழ்வில், சில நம்ப முடியாத miracle like திருப்பங்களை, மாற்றங்களை பக்தியின் மூலம், கோயில்கள் மூலம் அடைந்திருக்கிறேன். ஜோதிடம் கற்றதும் இந்தப் பின்னணியில் தான். அசைவ உணவை அறவே விட்டு விட்டேன்.ராமாயணத்தின் ஒரு பகுதியான சுந்தர காண்ட பாராயணம் செய்து, பெரும்நற்பலனை அடைந்திருக்கிறேன். Medical miracle என்ற வகையில் !ஒரு பெரியாரிய குடும்பத்தில் பிறந்து, நாத்திகனாக வளர்ந்து, இன்று இப்படிமாற்றம் ! Continue reading

நூலகம் எனும் அன்னை

நூலகம் எனும் அன்னை

[24-11-2007 யில் அருமனை அரசு நூலகத்தின் வருட விழாவில் ஆற்றிய சிறப்புரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

arumanai

ருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இந்த நூலகத்தில்தான் நான் என் இளமைப்பருவத்தை செலவழித்தேன்.

என் அப்பா பாகுலேயன்பிள்ளை இங்கே உதவி பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடம் பணியாற்றினார். நாங்கள் இங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள முழுக்கோடு என்ற ஊரில் தங்கியிருந்தோம். அதன்பின் மறுபக்கம் ஐந்து கி.மீ தூரத்தில் உள்ள திருவரம்புக்கு சொந்த வீடு கட்டி மாறினோம். நான் படித்ததெல்லாம் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்தான். எங்கள் சந்தை அருமனையில் இருந்தது… திரையரங்கு இங்கேதான்- கிருஷ்ணப்பிரியா. ஓலைக்கொட்டகை. மளிகை வாங்குவது ராகவப்பணிக்கர் கடையில். என் இளமைப்பருவம் இந்த ஊரை மையப்படுத்தியது.

Continue reading

ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்

ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்

[ நவம்பர் 26, 2006 அன்று வர்க்கலை நாராயணகுருகுலத்தில் ஆற்றிய உரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

35mqqkh

[குரு நித்யா]

அன்புக்கும் வணக்கத்திற்கும் உரிய ஆசிரியர்களே, தோழர்களே,

அஜிதனை சின்னக்குழந்தையாக கையில் தூக்கிக்கொண்டு அலைந்த நாட்கள் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. அப்போது எனக்கு இரண்டு தலைகள். இரண்டு முகங்கள். ஒன்றுக்கு முப்பத்திரண்டுவயது. ஒன்றுக்கு ஒருவயது. ஒன்றில் இருந்து முப்பத்திரண்டுவரை நீண்டுபரந்த ஒரு மனம். ஆச்சரியமான ஓர் இணைவு. தெருவில் நான் செல்லும்போது என்னை ஒருவர் பின் தொடர்ந்து வந்தால் எனக்கு ஒருவயதா இல்லை முப்பத்திரண்டு வயதா என்ற சந்தேகம் எழும். அந்த உற்சாகத்தை அடைந்தபின் இன்றுவரை நான் அந்த ஒருவயதுக்குழந்தையை கீழே இறங்கவிடவில்லை.

Continue reading

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? [தொடர்ச்சி]

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? [தொடர்ச்சி]

[16–1–07 அன்று பாளையங்கோடை தூய சவேரியார் கல்லூரி தமிழ்துறை சார்பில் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[வட கிழக்குப் பயணத்தின் போது. சிக்கிம் ]

சார்த்ரும் காம்யூவும் இருத்தலியத்தின் பிதாமகர்கள். முன்னர் நான் சொன்ன சொற்றொடர்கள் இருத்தலியத்தின் மூலவரிகள் போன்றவை. முன்னர் நான் சொன்ன படைப்பாளிகலின் வரிசையை ஒட்டுமொத்தமாக நவீனத்துவர்கள் என்று அடையாளம் காட்டலாம்.

நான் வாசிக்க வந்த காலத்தில் நவீனத்துவத்தின் கொடி பறந்தது. இருத்தலியமே எங்கும் முழங்கும் தத்துவமாக இருந்தது. இந்திய மொழிகளில் நம் உடனடி முன்னோர்கள் அனைவருமே நவீனத்துவர்களாக இருந்தனர். அசோகமித்திரன் சுந்தர ராமசாமி சா கந்தசாமி இந்திரா பார்த்த சாரதி … மலையாளத்தில் ஓ.வி.விஜயன், எம் டி வாசுதேவன் நாயர் ,எம் முகுந்தன் ,புனத்தில் குஞ்ஞப்துல்லா கன்னடத்தில் யு ஆர் அனந்தமூர்த்தி, பி.லங்கேஷ், வங்காளத்தில் சுனில் கங்கோபாத்யாய அதீன் பந்த்யோபாத்யாய…
Continue reading

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

[16-1-07 அன்று பாளையங்கோடை தூய சவேரியார் கல்லூரி தமிழ்துறை சார்பில் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[வடகிழக்கு பயணத்தின் போது சிக்கிமின் ஜீவநதி “தீஸ்தா”]

நண்பர்களே,

பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும் மதிப்பிடத்தெரியாது. ஆகவே அங்கே நுண்மையான அவமதிப்புகளுக்கு நாம் ஆளாகவேண்டியிருக்கும். இங்கு என்னை அழைத்த நண்பருக்காக ஒத்துக்கொண்டேன். அவருக்காகவும் என் பேச்சை சிலராவது எதிர்பார்க்கக் கூடும் என்பதற்காகவும் வந்தேன். என் மனநிலை சரியாக இல்லை என்பதனால் உரை சிறப்பாக அமையாவிட்டால் மன்னிக்கவும்

*

Continue reading

யாதெனின் யாதெனின்…

யாதெனின் யாதெனின்…

ஜெயமோகன். இன் ல் இருந்து

100_2622

[அருகர்களின் பாதை, இந்திய நெடும்பயணத்தில். ஃபெட்சா குகைவிகாரம். பூனா அருகே]

இரண்டு நாட்களுக்கு முன்னர் கெ.பி.வினோத் என்ற நண்பர் பார்க்க அலுவலகம ்வந்திருந்தார். நல்ல வாசகர். கணிப்பொறித்துறையில் ஒரு நிறுவன மேலாளராக இருக்கிறார். ரயில் டிக்கெட் எடுப்பதற்கான என்னுடைய சிரமங்கள் பற்றிய பேச்சு வந்தது. இணையம் மூலம் பதிவுசெய்யலாமே என்றார் வினோத். அதற்கு கடன் அட்டை வேண்டுமே என்றேன். ”என்னது, கடன் அட்டை இல்லையா?” என்று பிரமித்தபின் ”சரி பரவாயில்லை. ஒரு வைப்பு அட்டை பெற்றுக்கொள்ளுங்கள். எல்லா வங்கிகளிலும் கொடுப்பார்கள்”.நான் ”அதற்கு வங்கியில் பணம் போடவேண்டுமே..”என்றேன். அவர் சற்றுநேரம் வியந்து மாய்ந்துகொண்டிருந்தார். பொதுவாக கணிப்பொறி துறையில் இருப்பவர்களிடம் பிறர் எப்படி உயிர்வாழ்கிறார்கள் என்பதை சொல்லிப் புரியவைப்பத கஷ்டம்.

Continue reading

துறவு-கடிதம்

துறவு-கடிதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

Swami-Ootty

[சுவாமி வியாசப்பிரசாத்,. நித்ய சைதன்ய யதியின் மாணவர்]

அன்பு ஜெயமோஹன்,

வணக்கம். ஆன்மீகம் பற்றிய தங்கள் கேள்வி பதிலில் ஒரு பாரம்பரியம் பற்றிய அதாவது இந்திய ஆன்மீகத்தின் வழி முறைகள் மீது தங்களுக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும்படியான ஒரு பதிவைக் கண்டேன். இது இந்த மண்ணில் பிறந்தவருள் நடக்கும் உரையாடல் என்னும் அளவில் வேண்டுமென்றால் பொருந்தும். ஆனால் ஆன்மீகம் இந்த அணுகுமுறைக்குள் அடங்காத அளவு ஆழ்ந்தது. ஆன்மீகம் ஒரு தாயின் ஒவ்வொரு குழந்தையும் தாயன்பைத் தனக்கு என்ற ஒரு அந்தரங்க, தனித்த பேறாகக் கருதி வளருவது போன்றது. எனவே எந்தப் பாரம்பரியத்தில் பிறந்திருந்தாலும் முன்னோடிகள் எத்தனை பேர் இருந்தாலும் தானே விண்டு தானே கண்டு உணர வேண்டியதே அது. புருஷார்த்தங்களான தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் நான்கும், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்னும் மூன்றும் இந்திய மண்ணின் ஆன்மீக அணுகு முறைக்கான புரிதலுக்கு உதவும். ஆனால் ஆன்மீகம் ஐன்ஸ்டீனுக்கும் வாய்த்தது. இந்த மண்ணிலிருந்து துவங்குபவருக்கு சாத்திரங்கள் இந்தப் புரிதலுக்கு அன்னியமானவற்றையும் அடக்கியவையே. சாத்திரங்களை ஒப்பிடுகையில் உபநிடதங்களில் பகவத் கீதையும் கடோபநிஷதமும் வாதப் பிரதிவாதமாக அமைந்தமையால் புரிதலுக்கான துவக்கத்துக்கு மிக ஏற்றவை.

Continue reading

நியாய தரிசனம் : பதார்த்தங்கள்

நியாய தரிசனம் : பதார்த்தங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

P1080924

[அருகர்கள் பாதை, இந்திய நெடும்பயணத்தின் போது . ஜெய்சாலமர்.]

பிரபஞ்ச இயல்பை முழுக்க திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேஷம் என் வைசேஷிகம் வகுத்தது என நாம் அறிவோம். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பிரமேயம் (அறிபடுபொருள்) என்ற பதார்த்தமாக வகுத்து விடுகிற நியாயம், பதினாறு பதார்த்தங்களைப் பற்றிப் பேசுகிறது. பிரமேயம் அதில் ஒன்று மட்டுமே. மற்ற பதினைந்து பதார்த்தங்களும் அதை அறிவதற்கான படிநிலைகளும் வழிமுறைகளும் ஆகும்.

பிரமாணம், பிரமேயம், சம்சயம்,பிரயோசனம், திருஷ்டாந்தம்,சித்தாந்தம், அவயவம், தர்க்கம், நிர்ணயம், வாதம், ஜல்பம், விதண்டம், ஹோதாபியாசம், சலம், ஜாதி,  நிக்ரஹஸ்தானம் எனப் பதார்த்தங்களை நியாயம் வகுக்கிறது. Continue reading

தீபாவளியும் சமணமும்:கடிதம்

தீபாவளியும் சமணமும்:கடிதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

திரு ஜெய மோகன்

மீண்டும் நான. தீபாவளி என் வரையில் சமண வேர் கொண்டது. ஒரு நிஜமான நிகழ்ச்சி அன்று நடந்தது. மகாவீரரின் மகா பரி நிர்வாணம் அன்று தான் நிகழ்ந்தது.

நரகாசுர வதம் புராண கதை. சாக்தமும் புராண கதையையே சொல்கிறது. தமிழ் சமணம் வலைப் பதிவில் எழுதி வரும் பானு குமார், சமணத்தின் மிச்ச மீதி அடையாளத்தைத் தொலைக்கவே இந்த புராணக் கதை வேண்டுமென்றே வெள்ளாளர்களாலும் , பிராம்மணர்களாலும் பரப்பப் பட்ட சதி என்றே வாதிட்டு வருகிறார். இதில் உண்மை சற்று இருப்பது போல் தோன்றுகிறது. வட நாட்டிலும் மகாவீர நிர்வாண நாள் அது தான். சமணம் தமிழகத்தில் மறைந்த பின் இந்த தினத்தை வேறு விதத்தில் கொண்டாட நம் முன்னோர் முடிவெடுத்திருப்பார் போலும்.

நரகாசுரன் கதை தென்னாட்டில் அதுவும் தமிழகத்தில் மட்டுமே பரவலாக வழங்கப் பட்டு வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் அது ராமர் வன வாசம் முடித்து திரும்பி வந்த நாளாக கொண்டாடப் படுகிறது. கேரளாவில் தீபாவளி இல்லவே இல்லை. விடுமுறை கூட இல்லை.

வேங்கடசுப்ரமணியன் Continue reading