இரண்டு வானோக்கிய சாளரங்கள்

இரண்டு வானோக்கிய சாளரங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

ராமாயணம் பெரும் காவியம்தான். இந்திரஜித்தும், ஹனுமனும், லக்ஷ்மணனும், கும்பகர்ணனும், ராவணனும் மாபெரும் ஆளுமைகள்தான். ஆனால் மகாபாரதத்துக்கு அதை சமமாக சொல்ல முடியாது. உண்மையில் பாரதத்துக்கு ஈடான இலக்கியம் இது வரையில் வரவில்லை. யாரோ சொன்னது (நீங்கள்தானா?) நினைவுக்கு வருகிறது – இன்று வரை வந்த ஒவ்வொரு கதைக்கும் வேர் மகாபாரதத்தில்தான் இருக்கிறது!

RV
koottanchoru.wordpress.com

Continue reading

தருமன்

தருமன்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_0236

[வடகிழக்கு பயணத்தின்போது]

அன்பின் ஜெமோ,

கோபத்தால் பலவற்றை இழந்த எனக்குள் அவ்வப்போது எழும் கேள்வி இது. என்ன மாதிரியான மனிதன் இந்த தர்மபுத்திரன்? பலபேர் முன்னிலையில் தன் மனைவி மானபங்கப் படும்போது கூட கோபம் வராத கணவனாக இருக்கிறான். ஐவரில் இவன் மட்டும் சபதம் செய்யாதவனாக இருக்கிறான். ‘அறம்’ சிறுகதையைப் படித்து சில நாட்கள் அதை அசை போட்டபின் இந்தக் கேள்வி மறுபடியும் எனக்குள் வந்தது. ஆமாம், உங்கள் பார்வையில் என்ன மாதிரியான மனிதன் இந்த தர்மன்?

 – பாஸ்கி

Continue reading

தியானம்:கடிதங்கள்

தியானம்:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

JJ%2520362

[அந்தியூரில் அருவிக்கு மேலே]

வணக்கம் குரு.,

தியானம் என்ற சொல்லே மிகவும் வசீகரமானது! உங்கள் கட்டுரையில் (கடிதமே தற்போது கட்டுரை வடிவில் தானே அமைகிறது!!) உள்ள விளக்கம் மிகவும் பயனுள்ளது. தியானம், யோகம் சார்ந்து ஏற்படும் இவை போன்ற கேள்விகளுக்கு உங்களின் “பதஞ்சலி யோக சூத்திரத்திற்க்கு ஒரு எளிய விளக்கம்” ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தியது. தாங்கள் குறிப்பிட்டது போல் அதன் தொடர்ச்சியை ஆரம்பித்தால் மேலும் இவை போன்ற கேள்விகளுக்கு அதிலேயே பதில் கிடைக்கும். அதன் முன்னுரையில் குறிப்பிட்ட விளக்கமே பெரும் தெளிவை ஏற்படுத்தியது. நீங்கள் அளிக்கும் உரை வரும் தலை முறையினருக்கு நீங்கள் குறிப்பிட்டது போல் “யோகத்தை புரிந்து கொள்வதற்க்கும், யோகத்தை புரிவதற்க்கும்” பெரும் பயனுள்ளதாக அமையும்.

கீதை : முரண்பாடுகள் [தொடர்ச்சி]

கீதை : முரண்பாடுகள் [தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC_5410

[நூலகம். நாரயணகுருகுலம்]

மிக எளிமையான வினா ஒன்றை நாம் எழுப்பிக் கொள்ளலாம். கீதை இந்து ஞானமரபின் மூன்று தத்துவங்களில் (பிரஸ்தான த்ரயம்) ஒன்று. சாங்கியமும் யோகமும் இந்து ஞானமரபின் ஆறுதரிசனங்களில் அடங்கியவை. ஆறுமதம், ஆறுதரிசனம், மூன்று தத்துவம் அடங்கியதே இந்து ஞானம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட மரபு. இத்தனை நூற்றாண்டுக்காலம் இம்மரபு பயிலப்பட்டுள்ளது, விவாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரிசனங்கள் பிரஸ்தானத்திரயத்தில் ஒன்றாக உள்ள ஒரு மூலநூலில் முட்டாள்தனமாகச் சிதைக்கப்பட்டிருப்பதை உணரமுடியாதவர்களாகவோ உணர்ந்தாலும் நியாயப்படுத்துபவர்களாகவோ இருந்தார்களா நம் முன்னோர்? ஒருவர் இருவரல்ல, சங்கரர், ராமானுஜர் முதல் இன்று நித்ய சைதன்ய யதி வரை உள்ள அத்தனைபேரும்? இந்த மார்க்ஸிய ஆய்வாளர்கள் வந்துதான் அதைச் சுட்டிக்காட்ட வேண்டுமா? Continue reading

கீதை : முரண்பாடுகள் [தொடர்ச்சி]

கீதை : முரண்பாடுகள் [தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC_5413

[ஊட்டி இலக்கிய முகாமில்]

முரண்பாடல்ல முரணியக்கம்

அடுத்தவகை முரண்பாடு கீதையின் முரண்பாட்டியக்க அணுகுமுறையின் விளைவாகும். ஒன்றோடொன்று முரண்படும் இருகூறுகள் தங்களுக்குள் மோதி முயங்கி முன்னகர்ந்து புதியதை உருவாக்குதலே முரணியக்க இயக்கவியல். டைலடிக்ஸ் என்று கிரேக்க மெய்யியலில் கூறப்பட்ட இந்த தத்துவ நோக்கு ஹெகல் மூலம் வரலாற்றுக்கு பயன்படுத்தப்பட்டது – அதுவே முரணியக்கப் பொருள் முதல்வாதம். கார்ல் மார்க்ஸ் அதை பொருளியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வளர்த்தெடுத்தார். இன்றுவரை வரலாற்று சக்திகளையும் சமூகவியல் சக்திகளையும் புரிந்து கொள்வதற்கான சிறந்த வழிமுறையாக இது உள்ளது. இது உண்மையா இல்லையா என்ற வினாவே தவறு. இது ஒரு நல்ல கருவி, அவ்வளவுதான். Continue reading

கீதை : முரண்பாடுகள்

கீதை : முரண்பாடுகள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC_5615

[ஊட்டி இலக்கிய முகாமில்]

சுவாமி சித்பவானந்தரின் கீதை உரை தமிழில் மிகவும் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்ட நூல் அது. அதன் முன்னுரையில் அவர் – ‘கொலை நூலா?’ என்று ஒரு உபதலைப்பில் பகவத்கீதை கொலையை எடுத்துரைக்க்கும் நூலா என்ற வினாவுக்கு விரிவான பதிலைக் கூறுகிறார். தத்துவார்த்தமாகவும் நடைமுறை சார்ந்தும் கூறப்பட்ட கச்சிதமான விளக்கம் அது. கீதைக்கு உரைவகுத்த நவீன காலத்திய ஆன்மிகவாதிகள் அனைவருமே அந்த வினாவுக்கு ஏறக்குறைய அந்த வினாவினை அளித்துள்ளனர். உலகம் முழுக்க சைவ உணவுக்காகவும் கொல்லாமைக்காவும் அமைப்பு ரீதியாகப் பணியாற்றி வரும் ஹரே கிருஷ்ணா கிருஷ்ணபக்தி இயக்கம் (இஸ்கான்) தான் கீதையை உலகளாவ கொண்டு செல்கிறது. அகிம்சையை அரசியல் உள்பட வாழ்வின் அனைத்து மட்டத்திற்குமான செயல் முறையாக முன்வைத்த காந்தியின் மூலநூலாக இருந்ததும் கீதையே. Continue reading

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம் [ நிறைவுப்பகுதி]

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம் [ நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC_5583

[ஊட்டி இலக்கிய முகாம்]

இக்காரணத்தால் இந்து ஞானமரபில் உவமைகளை உவமிக்கப்படும் அக்கருத்தின் புற வடிவங்களாகவே கண்டு விவாதிக்கிறோம். இங்கு கீதை அளிக்கும் நான்கு உவமைகளையும் அவ்வாறே வாசகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கற்பனை மூலம் உவமையை விரித்து எடுக்கவேண்டும். கீதை 22 ஆம் பாடலில் ஆத்மா தன் உடல்களை கிழிந்த உடைகளை மாற்றுவது போல மாற்றிக் கொள்கிறது என்று கூறப்படுகிறது. மறுபிறப்புக் கோட்பாட்டின் அடிப்படை உவமையாக இன்றுவரை இது திகழ்ந்து வருகிறது. Continue reading

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-2

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-2

ஜெயமோகன்.இன் இல் இருந்து

DSC_5572

[ஊட்டி இலக்கிய முகாமில்]

பரத்தை கண்டறிதல்

புலனடக்கம் பற்றிய கீதையின் விளக்கத்தில் புலன்களை வெல்லும் வழி என்று கூறப்பட்டிருப்பது என்ன? பொதுவாக கீதை உரைகளில் ‘இறைவனை மையமாகக் கொண்டு மனதை குவித்தல்’ என்றே கூறப்படிருக்கும். கீதை பரம்பொருளால் கூறப்பட்ட வேதம் என்ற நம்பிக்கையில் இருந்து தொடங்கினால் அது இயல்பான ஒரு முடிவுதான். ஆனால் வேதாந்த நூலாக கீதையை எடுத்துக் கொணடால் அப்படிக் கூறமுடியாது.

கீதை 45 ஆம் பாடலில் முக்குணமயமான வேதங்களைத் தாண்டி நீ ‘ஆத்மவானாக’ இரு என்று கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். ஆத்மாவில் நிலைபெற்ற நோக்கு உடையவனை ‘ஸ்ருத பிரதிக்ஞன்’ என்கிறார். நிலைபேறு உடையவன் புலன்களை வெல்கிறான். தன் ‘ஆத்ம ஸ்வரூ ப’த்தை உணர்ந்து அதில் மனதின் நிலைநிறுத்தி அதனூடாக புலன்களை வெல்லுதலைப் பற்றியே கீதை பேசுகிறது என்பது தொடர்ந்துவரும் பாடல்களை கூர்ந்து வாசிப்பவர்களுக்குப் புரியும். கீதை 53ஆம்பாடலில் நேரடியாக இது கூறப்படுகிறது. ‘உன் அறிவு என்று ஆத்மாவில் உறுதி பெறுமோ அன்று நீ யோகம் அடைவாய்’ என்கிறார் கிருஷ்ணன். Continue reading

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-1

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-1

ஜெயமோகன்.இன் இல் இருந்து

DSC_5374

[ நாராயணகுரு சிலை. ஊட்டி நாராயண குருகுலம் ]

 நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் சேர்ந்து பயணம் செய்யும்போது ஒரு குருத்வாராவுக்குள் செல்கிறார்கள். அங்கே இருக்கும் கியானிகள் நடராஜகுருவுக்கு குரு கிரந்த சாஹிபை வாசித்துக்காண்பிக்கிறார்கள். நடராஜ குரு அந்த நூலை அதற்கு முன்னதாக கேடதில்லை. அது குர்முகி மொழியில் இருக்கிறது. ஆனால் கேட்கக் கேட்க நடராஜகுரு அந்நூலின் வரிகளுக்கு பொருள்சொல்லிக்கோண்டே இருக்கிறார். நித்யாவுக்கு ஆச்சரியம். ‘இதில் ஒன்றுமில்லை. இந்நூலின் அடிப்படைக் கலைச்சொற்கள் எல்லாமே சம்ஸ்கிருத மூல்த்தின் சிறிய உச்சரிப்புவேறுபாடுகள் மட்டுமே ‘ என்று நடராஜகுரு சொல்கிறார். Continue reading

தத்துவத்தைக் கண்காணித்தல்

தத்துவத்தைக் கண்காணித்தல்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

Picture 031

[கவி மழைப்பயணம்]

அன்புள்ள ஜெ…சார்,

1980-90 களில் ரஜ்னீஷ் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை படித்துவிட்டு நண்பர்களிடம் விவாதித்துக்கொண்டிருப்போம். ஒரு நெருங்கிய நண்பர் திடீரென்று ஒரு நாள் மொட்டையடித்துக்கொண்டு வெள்ளை ஜிப்பா, வேஷ்டி அணிந்துகொண்டு வந்தார். ‘நான் இன்றுதான் பிறந்திருக்கிறேன். என்னை நான் diseducate செய்து கொண்டேன்.‘ என்றார்.  (அச்சில் வருவதை…பாடப்புத்தகங்கள் உள்பட…உண்மை என்று என்று நம்பிக்கொண்டுருந்த கால கட்டம் அது) சிறிது நேரம் கழித்து ‘பசிக்கிறது…மசால் வடை சாப்பிடலாமா‘ என்றார். மற்றொரு நண்பர் ‘மசால் வடையை diseducate செய்யவில்லையா‘ என்று கேட்டார். அவ்வளவுதான்..அந்த நண்பர் சட்டென்று எழுந்து சென்று விட்டார். அவரை மீண்டும் பழய நிலைக்கு கொண்டு வர 5 வருடங்கள் ஆனது. Continue reading