அடிமைகளும் கலையும்

அடிமைகளும் கலையும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

3652-211430-Tanjore-temple-from-side

[தஞ்சை பெரிய கோயில்]

அன்புள்ள ஆசிரியருக்கு,

‘அருகர்களின் பாதை’ – வரலாறும் ஆன்மீகமும் கலையும் இலக்கியமான வர்ணனைகளும் கலந்த உன்னதமான அனுபவத்தில் தினமும் திளைத்தேன். உங்களைப் போன்றே ஆன்மஉணர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர்களால் இந்தியிலும் மற்ற மொழிகளிலும் மாற்றப்பட்டு மேலும் பல கோடி பேர் அனுபவிக்க வேண்டும் என்று ஆசையாகஇருக்கிறது !

அற்புதமான கோயில் கலைகளைப் பார்க்கையில் மனதோரம் களிம்பு போல ஒருசந்தேகம் ஒட்டிக் கொள்கிறது. (நீங்கள் சொல்லும் மனிதச் சிறுமையின்அடையாளமா என்று தெரியவில்லை). தங்கள் விளக்கம் என் பார்வையை விசாலமாக்கும் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்…

எகிப்து பிரமிடுகளைப் பற்றிய ஒரு காணொளியில் சில எலும்பு அகழ்வாராய்ச்சிகளைக் காட்டினார்கள் – குடும்பம் குடும்பமாக வருடக்கணக்கில் பிரமிடுக்கருகே வாழ்ந்து, டன் கணக்கில் கல் சுமந்து முதுகெலும்பு வளைந்தே போன பெயரற்ற அடிமைகளின் எலும்புகள்.

இதே போல இந்தியக் கோயில்களைக் கட்டவும் அடிமைகள் பயன்படுத்தப்பட்டார்களா? எனக்கு ராஜராஜன் மேல் இந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லை – ஆனால் குமாரபாலரும் ஆற்றிமாப்பியும் கட்டிய சமண ஆலயங்களிலும் இதே ரத்தக்கறை இருக்கிறதா ? அப்படி இருந்தால் அவற்றின் ஆன்மீகம் சற்று ஒளியிழக்கிறதா ?

நன்றி
மது Continue reading

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 3

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 3

jayamohan1_thumb4

[சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன்.  நன்றி: தீராநதி ]

நன்றி: அழியாச்சுடர்கள் தளம்

கே : துறவு நிலைக்கான தேடுதல் மனநிலை உங்களுக்கு இருப்பதை முதலில் தெரிவித்திருந்தீர்கள். துறவு நிலைக்கான அந்த தூண்டுதலும், வேகமும் படைப்பு நீதியாக நீங்கள் இயங்க ஆரம்பித்த பிறகு சமப்படுத்தப்பட்டிருக்கிறதா?”

ஜெயமோகன் : விஷ்ணுபுரம், எழுதுகிற நேரத்தில் ரொம்ப காலம் என்னை அலைக்கழித்த அடிப்படையான கேள்விகளையெல்லாம் அந்த நாவல் வழியாகப் பதிவு பண்ணிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அதன் கதா பாத்திரங்கள் எல்லாம் என்னுடைய கிளைகள் தான். நான் அலைந்து திரிந்த காலமெல்லாம் அதில் இன்னொரு விதத்தில் பதிவாகியிருக்கிறது. என்னுடைய படைப்புகள் எல்லாமே என்னுடைய விசாரணையும், என்னுடைய துக்கங்களும்தான். ஏதோ இலக்கியம் படைக்க வேண்டும் என்பதெல்லாம் என் நோக்கம் அல்ல. திரும்பத்திரும்ப நான் சொல்வது இதைத்தான். புத்தருக்குத் தியானம் எப்படியோ அப்படி எனக்கு எழுத்து. Continue reading

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 2

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 2

jayamohan1_thumb4

[சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன்.  நன்றி: தீராநதி ]

நன்றி: அழியாச்சுடர்கள் தளம்

கே : அப்போதிருந்த உங்களது மனநிலைக்கு நாவல் ஒத்திருந்ததா.

ஜெயமோகன் : ஆமாம். உதாரணமாக, `குடிக்கிறேன்-அதுவும் தற்காலிகத் தற்கொலைதான்’ என்று அந்த நாவலில் வரும் வாக்கியம் என்னை உலுக்கியெடுத்துவிட்டது. நான் உணர்கிற உலகத்திற்கு நெருக்கமானதாக அந்த நாவல் இருந்தது. சுந்தர ராமசாமியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். ரொம்பவும் சகிப்புத் தன்மையுடன் இருந்தார் அவர். நான்தான் அதிகம் பேசுவேன். “உங்களிடம் ஒரு கலை இருக்கிறது. நீங்கள் எழுதவேண்டும். `ஆர்டிவெய்ங்’ என்கிற சைக்கியாட்ரிஸ்ட் “வேலை செய்வதுதான் மனநெருக்கடிக்குப் பெரிய சிகிச்சை’ன்னு சொல்றார். அதனால் எழுதுங்கள்” என்று சொன்னார். உடனே அவருக்குக் கத்தை கத்தையாகக் கடிதங்கள், சிறு கதைகள், குறுநாவல்கள் எழுதி அனுப்பினேன். இதில் ஒரு கவிதை அப்போது வெளிவந்து கொண்டிருந்த `கொல்லிப்பாவை’ என்கிற சிறு பத்திரிகையில் வெளியானது. மறுபடியும் எழுத்துலக பிரவேசம் ஆரம்பித்துவிட்டது.” Continue reading

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 1

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன்

jayamohan1_thumb4

[சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன்.  நன்றி: தீராநதி ]

நன்றி: அழியாச்சுடர்கள் தளம்

பத்து வருஷங்களுக்கு முன் வெளிவந்த `ரப்பர்’ நாவலிலிருந்து சமீபத்தில் வெளிவந்த `கன்னியாகுமரி’ நாவல் வரை தமிழ் இலக்கிய உலகில் அதிகச் சர்ச்சைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர் ஜெயமோகன். 1991ல் `கதா’ விருதும், 1993ல் சமஸ்கிருதசம்மான் என்கிற தேசீய விருதும் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது.

 கதை, நாவல், விமர்சனம் என்று இதுவரை பதினொரு தொகுப்புகளைத் தமிழில் தந்திருக்கிற ஜெயமோகனது தாய்மொழி மலையாளம். நாகர்கோவிலுக்கு அருகில் தக்கலை என்னும் ஊரில்   தொலைபேசித் துறையில் வேலை செய்துவருகிறார். Continue reading

உருவமும் அருவமும்

உருவமும் அருவமும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

nitya

[குரு நித்ய சைதன்ய யதி அவர்களுடன் ஆசிரியர்]

உருவம் இல்லாதவற்றுக்கு உருவம் தருவதுதான் புராதனமான இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் தனித்தன்மை. ஆனால் வேதகாலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட வகையில் தங்கள் கற்பனையைச் செலுத்தியிருந்தார்கள். நாம் ஆராய வேண்டியது இதைத்தான்.

ரிக் வேதத்தின் முதல் குறிப்பு அக்கினியைப் பற்றியதாகும். கண்முன் எரியும் அக்னி உரு யதார்த்தம். ஆனால் வேதங்களில் உள்ள அக்னி முற்றிலும் அருவமானது. அதாவது உருவத்திலிருந்து உருவின்மைக்கு, பருண்மையிலிருந்து சூட்சுமத்திற்குப் போவதற்கான யத்தனத்தை நாம் வேதங்களில் காண்கிறோம்.

அக்னியிலிருந்து அக்னித்துவத்திற்கு நகர்கிறது அக்கற்பனை.

நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்களுக்காக நண்பர் சீனிவாசன் நடத்திவரும் இணையதளம்

http://gurunitya.wordpress.com

தீராநதி நேர்காணல்- 2006 : 5

தீராநதி நேர்காணல்- 2006

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_5510

[தெங்குமராட்டா]

தீராநதி:- உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா?

ஜெயமோகன்:- இல்லை. மதம் வாழ்க்கை சார்ந்த கவலைகளும், ஆன்மீகமான குழப்பங்களும் கொண்டவர்களுக்கு, திட்டவட்டமான விடைகள் மூலம் ஆறுதலும் வாழ்க்கைநெறிகளும் அளிக்கும் ஓர் அமைப்பு. நம்பிக்கை, சடங்குகள், முழுமுற்றான சில கோட்பாடுகள் ஆகியவை கலந்தது மதம். அது சிந்திப்பவர்களுக்கு நிறைவு தராது. உண்மையான ஆன்மீகத்தேடல் கொண்டவன், அத்தேடல் தொடங்கிய கணமே, மதத்தைவிட்டு வெளியே செல்ல ஆரம்பித்துவிடுவான். என் பதினைந்து வயது முதலே நான் மதம், கடவுள், சடங்குகள் அனைத்திலும் முற்றாக நம்பிக்கை இழந்துவிட்டேன். எனக்கிருப்பது ஆன்மீகத்தேடல், ஆன்மீக நம்பிக்கை அல்ல. நான் யாரையும் எதையும் வழிபடவில்லை. நித்ய சைதன்ய யதியைக் கூட ! நான் உரையாடுகிறேன் உள்வாங்க முயல்கிறேன். Continue reading