நியாய தரிசனம் : பதார்த்தங்கள்

நியாய தரிசனம் : பதார்த்தங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

P1080924

[அருகர்கள் பாதை, இந்திய நெடும்பயணத்தின் போது . ஜெய்சாலமர்.]

பிரபஞ்ச இயல்பை முழுக்க திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேஷம் என் வைசேஷிகம் வகுத்தது என நாம் அறிவோம். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பிரமேயம் (அறிபடுபொருள்) என்ற பதார்த்தமாக வகுத்து விடுகிற நியாயம், பதினாறு பதார்த்தங்களைப் பற்றிப் பேசுகிறது. பிரமேயம் அதில் ஒன்று மட்டுமே. மற்ற பதினைந்து பதார்த்தங்களும் அதை அறிவதற்கான படிநிலைகளும் வழிமுறைகளும் ஆகும்.

பிரமாணம், பிரமேயம், சம்சயம்,பிரயோசனம், திருஷ்டாந்தம்,சித்தாந்தம், அவயவம், தர்க்கம், நிர்ணயம், வாதம், ஜல்பம், விதண்டம், ஹோதாபியாசம், சலம், ஜாதி,  நிக்ரஹஸ்தானம் எனப் பதார்த்தங்களை நியாயம் வகுக்கிறது. Continue reading

நியாயம் உருவகிக்கும் பிரபஞ்சவியல்

நியாயம் உருவகிக்கும் பிரபஞ்சவியல்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

11jyr9y

[நாளந்தா இடிபாடுகள்]

வைசேஷிகத்தைப் போலவே நியாயமும் பிரபஞ்ச இயக்கத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமையால்தான் மனிதனுக்குத் துக்கங்கள் ஏற்படுகின்றன என்று கருதியது. அறியாமையே துக்கத்தின் ஊற்றுக்கண். அறிவு துக்கத்தை அகற்றுகிறது. சரியானபடி இப்பிரபஞ்சத்தைப் புரிந்துகொண்டு நாம் அடையும் சமனிலையை நிஸ்ரேயஸம் என்று நியாயம் உருவகித்தது. Continue reading

தருக்கமே தரிசனம்: நியாயம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தருக்கமே தரிசனம்: நியாயம்

100_2380

[அருகர்கள் பாதை. இந்திய நெடும்பயணத்தின்போது பெல்காமில்]

நியாயம் என்ற வார்தை நம்முடைய அன்றாட வாழ்வில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒன்று. தருக்கப்பூர்வமானது, நீதிபூர்வமானது, சமனிலைப்படுத்தப்பட்டது, யுக்திக்கு உகந்தது என்ற அர்த்தங்களில் நாம் இச்சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்தி வருகிறோம். (நியாயமான பேச்சு, எல்லாவற்றுக்கும் நியாயம் வேண்டும், நியாயம் செய்வதாகும். நியாயவிலைக்கடை…)

இச்சொல் இந்து ஞானமரபின் ஆதி தரிசனங்களில் ஒன்றான ‘நியாய மரபில்’ இருந்து வந்ததாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல நியாய தரிசனமானது வைசேஷிக தரிசனத்தின் துணைத் தரிசனம். அடிப்படையில் வைசேஷிகத்தின் பிரபஞ்சப்பார்வையே நியாய மரபிலும் தொடர்கிறது. வைசேஷிகத் தரிசனங்களுக்குத் தருக்க அடிப்படையினை உருவாக்கித் தரும் ஒரு தருக்க சாஸ்திரமாகவே வெகு காலம் நியாயம் விளங்கி வந்திருக்கிறது. Continue reading

தத்துவத்தைக் கண்காணித்தல்

தத்துவத்தைக் கண்காணித்தல்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

Picture 031

[கவி மழைப்பயணம்]

அன்புள்ள ஜெ…சார்,

1980-90 களில் ரஜ்னீஷ் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை படித்துவிட்டு நண்பர்களிடம் விவாதித்துக்கொண்டிருப்போம். ஒரு நெருங்கிய நண்பர் திடீரென்று ஒரு நாள் மொட்டையடித்துக்கொண்டு வெள்ளை ஜிப்பா, வேஷ்டி அணிந்துகொண்டு வந்தார். ‘நான் இன்றுதான் பிறந்திருக்கிறேன். என்னை நான் diseducate செய்து கொண்டேன்.‘ என்றார்.  (அச்சில் வருவதை…பாடப்புத்தகங்கள் உள்பட…உண்மை என்று என்று நம்பிக்கொண்டுருந்த கால கட்டம் அது) சிறிது நேரம் கழித்து ‘பசிக்கிறது…மசால் வடை சாப்பிடலாமா‘ என்றார். மற்றொரு நண்பர் ‘மசால் வடையை diseducate செய்யவில்லையா‘ என்று கேட்டார். அவ்வளவுதான்..அந்த நண்பர் சட்டென்று எழுந்து சென்று விட்டார். அவரை மீண்டும் பழய நிலைக்கு கொண்டு வர 5 வருடங்கள் ஆனது. Continue reading

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-3 [நிறைவுப் பகுதி]

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-3 [நிறைவுப் பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01192

[கவி மழைப்பயணம்]

இரண்டு மனிதர்கள் எப்போது கூடிவாழ ஆரம்பிக்கிறார்களோ அப்போதே உளக்கட்டுப்பாடு தொடங்கி விடுகிறது. கூட்டாக வாழும் எல்லா உயிர்களும் உளக்கட்டுப்பாடும் படிக்க வரையறையும் அச்சமூகத்தால் வலியுறுத்தப்படுகின்றன. ஜேன் குடால் போன்ற நவீன ஆய்வாளர்கள் சிம்பன்ஸி சமூகத்தில் பலவிதமான பாலியல் கட்டுபாடுகள் உள்ளதை எடுத்துக்காட்டியுள்ளனர். பாலியல் கட்டுபாடு இல்லாத பழங்குடிச் சமூகம் ஏதும் கண்டடையப்பட்டதில்லை. அப்படியானால் •பிராய்டியக் கோட்பாடுகளை சிம்பனிஸிக்களுக்கும் போட்டுப் பார்க்கலாமா என்ன? Continue reading

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-2

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01191

[கவி மழைப்பயணம்]

நிலைபெற்றவன்

ஆத்மவான் என்ற சொல்லின் செயல்தள விரிவாக்கம் ‘ஸ்திதப்பிரதிக்ஞன்’ என்ற சொல்லாகும். ஆத்மாவாக தன்னை உணர்ந்து தத்துவார்த்தமான தெளிவை அடைந்தவன் செயல்களில் ஈடுபடும்போது சிதறாத உள்ளம் கொண்டவனாக நிலைத்த பிரக்ஞை கொண்டவானக இருப்பான். அவனே நிலைபெற்றவன். கீதையில் உள்ள இக்கலைச் சொல் இந்து ஞானமரபில் பலதளங்களில் மீளமீள விவாதிக்கப்படும் ஒன்றாகும். Continue reading

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-1

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01173

[கவி மழைப்பயணம்]

பாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு சொன்னார்’’ தூங்காதே’’ பலநாள் தூங்காமலிருக்க முயன்று உடல் மெலிந்து மனம் குலைந்த நிலையில் மீண்டும் குருவிடம் வந்து சிவானந்தர் சொன்னார் ‘’தூங்காமலிருக்க என்னால் முடியவில்லை’’ Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.4 [நிறைவுப்பகுதி]

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.4 [நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[சிட்னி]

வேதங்களும் கருமங்களும்

இப்பகுதியில் வேதங்களுக்கு கீதை அளிக்கும் மறுப்பு இந்து ஞான மரபில் கடந்த இருபது நூற்றாண்டுகளாக தத்தளிப்பை உருவாக்கிவருவதாகும். நித்ய சைதன்ய யதி ஒர் உரையாடலில் இவ்வண்ணம் குறிப்பிட்டார். ”வாளை அதன் எதிரே வரும் ஒவ்வொன்றும் மழுங்கடிக்க முயல்கின்றன. வேதாந்தத்தை அத்துடன் உரையாடும், அதற்கு உரையளிக்கும், அதை விரித்துப் பேசும் ஒவ்வொரு தரப்பும் ஏதோ ஒருவகையில் மழுங்கடிக்கவே முயல்கின்றன.” நான் ‘சங்கரர் கூடவா?’ என்று கேட்டேன். “ஆம், சங்கரரும் நாராயண குருவும் கூடத்தான்” என்றார் நித்யா. நான் வியப்பில் பேச்சிழந்தேன். Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.3

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.3

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[போர்நினைவிடம் ,கன்பெரா]

பயன்கருதா செயல்

யோகம் என்பது குவிந்த நிலை, நிலை கொண்ட நிலை, அந்நிலையில் அலைபாய்தல் இல்லை, உளவல்லமை சிதறுவதில்லை என்று கூறும் கிருஷ்ணர் அதை யோகத்தின் பயனாகவும் யோகத்திற்கான வழிமுறையாகவும் கூறுகிறார் என்பதை பிற பாடல்கள் மூலமாக அறியலாம். இது சாங்கிய யோகமாதலால் கிருஷ்ணன் இப்பகுதியில் அன்றாட நடைமுறை வாழ்வின் செயல்களை எப்படி யோகமாக ஆக்குவது என்றுதான் பேசுகிறார். Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.2

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[ஓபரா ஹவுஸ். சிட்னி. ஆஸ்திரேலியா பயணத்தின் போது]

பொதுவாக பல உரைகளில் சாங்கிய யோகம் என்ற தலைப்பு குறித்த ஒரு தடுமாற்றம் இந்த இடத்தில் வரக்காணலாம். கீதையின் தலைப்புகளில் கடைசித் தொகுப்புரையிலும் வரும் ‘யோகம்’ என்பது முரணியக்க அணுகுமுறையை குறிக்கிறது. ஆனால் இங்குள்ள யோகம் என்பது யோகம் என்னும் நடைமுறையைச் சுட்டுகிறது. அதாவது தியானத்தை உள்ளடக்கிய ஒரு யோகசாதனையைக் குறிக்கிறது. இப்பகுதியின் தலைப்பு இருபொருள் சுட்டும்படி இருக்கிறது என்று வேண்டுமானால் கொள்ளலாம். Continue reading