செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.2

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[ஓபரா ஹவுஸ். சிட்னி. ஆஸ்திரேலியா பயணத்தின் போது]

பொதுவாக பல உரைகளில் சாங்கிய யோகம் என்ற தலைப்பு குறித்த ஒரு தடுமாற்றம் இந்த இடத்தில் வரக்காணலாம். கீதையின் தலைப்புகளில் கடைசித் தொகுப்புரையிலும் வரும் ‘யோகம்’ என்பது முரணியக்க அணுகுமுறையை குறிக்கிறது. ஆனால் இங்குள்ள யோகம் என்பது யோகம் என்னும் நடைமுறையைச் சுட்டுகிறது. அதாவது தியானத்தை உள்ளடக்கிய ஒரு யோகசாதனையைக் குறிக்கிறது. இப்பகுதியின் தலைப்பு இருபொருள் சுட்டும்படி இருக்கிறது என்று வேண்டுமானால் கொள்ளலாம். Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.1

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[மெல்பர்ன் அருகில் பலாரட் என்ற ஊரில். ஆஸ்திரேலியப்பயணத்தின் போது]

நந்தி சிலை நம் சிற்ப மரபின் முக்கியமான சாதனைகளில் ஒன்று. தமிழகத்தில் பிரம்மாண்டமான மாக்காளைகளை சுதைவடிவில்செய்து வைத்திருக்கிறார்கள். கல்லில் வடித்த அழகிய காளைகளும் உண்டு. சில ஆலயங்களில் வெண்கலச்சிலைகளையும் காணலாம். கர்நாடகத்தில் பல ஆலயங்களில் பிரம்மாண்டமான நந்தி சிலைகள் உண்டு. மைசூர் சாமுண்டி குன்றில் உள்ள நந்திதான் கர்நாடக மாநிலத்தின் இலச்சினையாக இருக்கிறது. Continue reading

கீதை கடிதங்கள்

கீதை கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[மோயாற்றுக் கரை  பானமரப்பட்டி. தெங்குமராட்டா பயணத்தின் போது]

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். தங்களின் வலைப்பக்கங்களைத் தொடர்ந்து படித்து வருபவன் நான். பொது, மற்றும் இலக்கியம் சார்ந்த விஷயங்களைவிடத் தத்துவம் சார்ந்த விஷயங்கள்தான் தங்களிடம் அதிகம் பரிமளிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளை இந்தத் தேடலில் கழித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த அளவுக்கான ஒப்புநோக்குப் பார்வை தங்களிடம் சாத்தியமாகிறது என்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்னால். கீதையைப்பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டே வருகிறீர்கள். குறிப்பாக அது ஒரு தத்துவநூல் என்பதை நிறுவுவதில் தாங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். அதுதான் உண்மையும்கூட. ஆனால் அதை ஒரு மத நூலாகப் புரிந்து கொண்டிருப்பவர்கள்தான் இங்கே  அதிகம். அதை அப்படிப் புரிய வைத்திருப்பதில் ன்மீகவாதிகளுக்கு நிறையப் பங்கு உண்டு.ஆன்மீகவாதிகள் தாங்கள் அறிந்தோ, அறியாமலோ ஒருவகையான அரசியலுக்கு  ட்பட்டுப்போகிறார்கள். ஆன்மீகம் மக்களின் ஒற்றுமைக்காகவும், ஒருமித்த சிந்தனையை வளப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்பட வேண்டும். அதுதான் சரியான ஆன்மீகம் என்று கருதுகிறேன் நான். எது மக்களின் ஒருமித்த சிந்தனையை, ஒற்றுமையை, மனித நேய சிந்தனையை, மேம்படுத்துகிறதோ அதுவே சிறந்த ஆன்மீகம் என்று எனக்குத் தோன்றுகிறது. Continue reading

சாங்கிய யோகம்:கடிதங்கள்

சாங்கிய யோகம்:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[தெங்குமராட்டா]

அன்புள்ள ஜெயமோகன்,

பகவத் கீதையை நீங்கள் அணுகியுள்ள விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. அந்நூலை எப்படி ஒரு முழுமைப்பார்வையில் அணுகவும் அத்துடன் நம் அகத்தேடலுக்கான ஒரு வலிமையான கருவியாக பயன்படுத்தவும் சொல்லிக்கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கும் தங்கள் குரு நித்ய சைதன்ய யதிக்கும் தனிப்பட்ட முறையிலேயே ஒரு வாசகனாக கடமைப்பட வைத்துள்ள உரை. சாங்கியம் குறித்த தங்கள் கட்டுரைகளை பலமுறை வாசித்தேன் – அது உருவாக்கிய மனக்கிளர்ச்சி அடங்கும் வரை. ஹென்றி பெர்கூஸனின் உயிர்வாதம் மற்றும் அதனை நிராகரிக்கும் எளிய பொருள்முதல்வாதம் ஆகிய இரட்டையில் விழாமல் ஆன்மாவினை அருமையாக விளக்கியுள்ளீர்கள். பொருள்முதல்வாதமும் எளிய இரட்டைநிலைகளைவிட்டு முன்னகர்ந்துள்ளது. Continue reading

கீதை, கடிதங்கள்

கீதை, கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[பூட்டானின் பழைய மாளிகைகளில் ஒன்று. வடகிழக்கு பயணத்தின் போது]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கீதையைப் பற்றிய உங்களின் முந்தைய கட்டுரைகள் வெளிவந்த போது, நவீன வாசகர்களுக்கு ஏற்றவகையில் கீதைக்கு நீங்களே ஒரு மொழியாக்கமும் விளக்கவுரையும் எழுதினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது முதல் இரண்டு அத்தியாயங்களையும் படிக்கிறபோது, இதற்கு முன்னோடியாகத்தான் அந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. அர்ஜுன விஷத யோகமும் (மகத்தான மனத் தடுமாற்றம்), ஸாங்கிய யோகமும் (உலகாற்றும் நெறி) உங்கள் மொழி நடையில் படிப்பதற்குப் பரவசமாகவே இருக்கிறது. விளக்க உரையில் தரப்பட்டிருக்கும் ஏராளமான தகவல்களும் கருத்துக்களும் எனக்கு மிகப் புதியவை. Continue reading

செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.3 [நிறைவுப்பகுதி]

செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.3 [நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கங்கை]

ஆத்மாவும் பிற மதங்களும்

ஆத்மா குறித்த சாக்ரடீஸ் கூறியவற்றுடன் கீதையை இதற்குள் வாசகர்கள் ஒப்பிட்டிருப்பார்கள். கிரேக்க மரபில் மேலும் பற்பல உருவகங்களும் விவாதங்களும் உள்ளன. இந்து ஞானமரபு போலவே தொன்மையும் ஆழமும் உடைய கிரேக்க மரபில்தான் இவ்வாறு ஒப்பிடத்தக்க கருத்துக்கள் உள்ளன. செமிட்டிக் அல்லது ஆபிரகாமிய மதங்களில் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) எளிமையான நேரடியான  உருவகமே காணப்படுகிறது. மனித உடலுக்குள் பிரக்ஞை வடிவில் இருப்பது ஆத்மா. இது பாவத்தின் காரணமாக உடலில் குடியேறுகிறது.  இறைவனுக்கு நேர் எதிரான தீய சக்தியான சாத்தானின் தூண்டுதலால் பாவங்கள் செய்கிறது. உடலை நீத்தபின் நியாயத் தீர்ப்பு நாளுக்காக காத்திருந்து அந்த நாளில் தன் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவனால் நரகமோ சொற்கமோ அளிக்கப்பட்டு அங்கு செல்கிறது என்பது யூத, கிறிஸ்தவ மதத்தின் கருத்து. Continue reading

செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.2

செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கங்கைக்கரையில் நண்பர்களுடன்]

ஆத்மா எனும் கருத்துருவம்

ஆத்மா என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் என்ன? அது (அத:) என்ற மூலச்சொல்லில் இருந்து கிளைத்தது அச்சொல் என்பது ஏற்கத்தக்க ஒருவாதம். ”அதோ அது” என்று சுட்டிக்காட்டப்படுவது எதுவோ அதுவே ஆத்மா. இன்னொரு அர்த்தம் ‘சாராம்சம்’ என்பது. நாம் காணும் ஒவ்வொன்றிலும் உறையும் மையமான, சாரமான, ஒன்றுதான் ஆத்மா.

இந்து ஞான மரபில் பொருள்முதல்வாதிகளான சாங்கிய, யோக, வைசேஷிக, நியாய தரிசனத்தைச் சேர்ந்தவர்களும் ஏதோ ஒருவகை ஆத்மாவை உருவகம் செய்துள்ளனர். இந்திய ஞானமரபில் இரண்டு எல்லைகள் இதில் காணக்கிடைக்கின்றன. சமணர்கள் சர்வாத்மாவதம் என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். அனைத்திற்கும் ஆத்மா உண்டு என்பது இதன் கருத்து. மனிதர்கள் விலங்குகள் புழுப்பூச்சிகள் தாவரங்கள் மட்டுமல்லாது கல் மண் காற்று நீர் போன்ற அனைத்துக்குமே ஆத்மா உண்டு என்கிறார்கள். இவர்கள் கூறும் ஆத்மா என்பது சாராம்சமே. நீருக்கு நீர்த்தன்மையை அளித்து அதை நீராக நிலைநிறுத்துவது எதுவோ அதுவே அதன் ஆத்மா. Continue reading

செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.1

செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[போதிசத்வர் கோயில்முன் நண்பர் சிவா– பத்துநாள்தாடி களைப்புடன் ஆசிரியர்]

ஸாங்கிய யோகத்தில் நடைமுறை விவேகம் சார்ந்து செயலாற்றுவதற்கான காரணங்களை இவ்வரிகளில் தொடர்ந்து கண்ணன் சொல்கிறார். செயலாற்று உனக்கு புகழும் செல்வமும் வீரசொற்கமும் கிடைக்கும் என்கிறார். இந்த வரிகள் அனேகமாக எல்லாவகையான நீதிநூல்களும் சொல்வனவே. ஆனால் உன்செயல் ஒட்டுமொத்தமாக இப்பிரபஞ்சத்துக்கு எவ்வகையில் பொருட்டு என்ற கேள்வியை கீதை எழுப்புவதன் மூலம்தான் அது தத்துவத்தளத்தில் அவ்வினாவை எதிர்கொள்கிறது.

‘சின்னமீன் பெரியமீனிடம் கேட்டது, நியாயமா? பெரியமீன் சொன்னது: நியாயமில்லைதான், நீ என்னை விழுங்கு’ என்று ஒரு ஜென் கதை உண்டு. மீன்கள் ஒன்றையொன்று ஒவ்வொரு கணமும் உண்டுகொண்டிருந்தாலும் கடலில் மீன் அப்படியேதான் இருக்கும் என்று எண்ணி ஆழம் புன்னகைசெய்தது என்று என் நண்பர் கல்பற்றா நாராயணன் ஒருமுறை சொன்னார்.

Continue reading

கீதை வழிகள்

கீதை வழிகள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[இந்தியப்பயணத்தில்  நாளந்தா ஓர் அறை]

சில வருடம் முன்பு என் நண்பர் ஒருவரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த போது சென்று பார்த்தேன். குழந்தையின் தலைமாட்டில் ஒரு பழைய மலையாள பகவத்கீதை நூல் வைக்கப்பட்டிருந்தது. நான் ”இதை யார் படிக்கிறார்கள்?” என்று கேட்டேன். நண்பர், அவரது அம்மாதான் குழந்தை கெட்ட கனவுகள் காணாமலிருக்கும் பொருட்டு அதை வைத்திருப்பதாகச் சொன்னார். இது இந்தியாவில் சாதாரணம். கீதையை பூசையறையில் வைத்து தொட்டுக் கும்பிடுபவர்கள், அதில் ஒருசில சமஸ்கிருத சுலோகங்களைப் பொருள் உணராமல் முணுமுணுத்த பிறகு வணங்கி எழுபவர்கள், கீதை வரிகளைத் தாளில் எழுதி மெல்லிய வெண்கலக் குழல்களுக்குள் அடைத்து இடுப்பிலும் கழுத்திலும் தாயத்தாக அணிந்து கொள்பவர்கள், கீதை வரிகளை செம்புத்தகட்டில் பொறித்து வீடு கட்டும்போது பூமியில் புதைத்து விடுபவர்கள் என்று நம்மிடையே நம்பிக்கையின் முகங்கள் பல.

அங்கீகரிக்கப்பட்ட சடங்குகளும் சில உள்ளன. வைணவர்கள் (அதிகமும் ஐயங்கார்கள்) இறக்கும் நிலையில் உள்ளபோது அவர் காதில் கீதையில் உள்ள ‘சகல தர்மங்களையும் துறந்து என்னையே சரணடைக’ என்ற வரிகளை ஓதுவது ஒரு முக்கியமான சடங்காகும். இது ‘சரம சுலோகம்’ என்றே இக்காரணத்தால் கூறப்படுகிறது. மரணத்தறுவாயில் கிடப்பவர்முன் கீதை வாசிக்கும் பழக்கம் கேரளத்தில் சில இடங்களில் உள்ளது. Continue reading

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 4 [நிறைவுப்பகுதி]

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 4 [நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோதை]

சங்கரரும் வைதிகமும்

தமிழ்ச்சூழல் சார்ந்து யோசிப்பவர்கள் சிலருக்கு சங்கரரின் இந்தத் தரப்பு ஒரளவுக்கு அதிர்ச்சியை அளிக்கக் கூடும் என்பதனால் ஒரு சிறு விளக்கம். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பிறந்து வட இந்தியாவெங்கும் திக்விஜயம் (திசைவெற்றி) செய்து பெளத்தர்களை வாதத்தில் வென்று வேதாந்தத்தை நிறுவிய ஆதிசங்கரர் இந்து தத்துவமரபின் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர். சங்கரரின் வெற்றியை முரணியக்க அடிப்படையில் நாம் பார்க்க வேண்டும். சங்கரர் பெளத்த ஞானத்துடன் முரண்பாடு உரையாடி பெளத்த ஞானத்தின் தலைசிறந்த கூறுகளை உள்வாங்கிக் கொண்டு அத்வைத வேதாந்த மரபை தோற்றுவித்தார். Continue reading