தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 2
ஜெயமோகன்.இன் ல் இருந்து

[ கும்பமேளா பயணத்தின் போது]
தன்னறமும் பிறப்பும்
இதில் 31ஆவது பாடலில் வரும் வார்த்தையான ‘ஸ்வதர்ம’ என்பதை ‘தன்னறம்’ என்று நேரடியாக தமிழாக்கம் செய்துள்ளேன். பல மொழிபெயர்ப்புகளில் குலதர்மம், குலநெறி என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. ‘ஸ்வ’ அதாவது ‘சுய’ என்றால் அது குலத்தைக்குறிக்கக்கூடியதல்ல. அறம் என்ற சொல்லுக்கு ‘வாழ்க்கை நெறி’ என்ற பொருள் உண்டு. துறவறம் இல்லறம் ஆகியவற்றில் பின்னொட்டாக உள்ள அறம் இது.
தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம் என்று கூறலாம். சுயதர்மம் என்றும் இதை தமிழாக்கம் செய்யலாம். தன்னுடைய ஆளுமைக்கும் தன் அடிப்படை இச்சைகளுக்கும் ஏற்பவே ஒருவனின் மனநிலைகளும் செயல்பாடுகளும் அமைகின்றன. இதை எளிய உளவியல் தளத்தில் நின்று புரிந்து கொள்வதே போதும். எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக வெளிப்படுகிறது என்று ஒருவன் எண்ணுகிறானோ அதுவே அவனுடைய தன்னறம் ஆகும். அதில் ஈடுபட்டு, அதை வென்று, அதைக் கடந்து சென்றுதான் ஒருவன் தன் விடுதலையை அடைய இயலும். ஒருவன் போரை, பிறிதொருவன் வணிகத்தை, பிறிதொருவன் கல்வியை, பிறிதொருவன் தொழிலை, பிறிதொருவன் சேவையை தன்னறமாகக் கருதலாம். Continue reading →