ஆன்மீகம்,கடவுள், மதம்

ஆன்மீகம்,கடவுள், மதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கவி,கேரளா]

திரு ஜே அவர்களுக்கு,

வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை.

நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் எழுதிய ‘என் பெயர் சிவப்பு’ என்ற நாவலையும் ராபர்ட் கலைச்சோ எழுதிய ‘க’ என்ற நாவலையும் தற்பொழுது படித்து வருகிறேன். இவைகள் முடிந்த பிறகு கொற்றவை படிக்கலாம் என நினைக்கிறேன்.

தங்களுடய வலைத்தளத்தையும் ஓரிரு மாதங்களாகப் படித்து வருகிறேன். தங்களை கோவை புத்தகக்கண்காட்சியில் சந்தித்திருக்கிறேன். கை குலுக்கியிருகிறேன். எனது ஊர் குமரிமாவட்டம். Continue reading

அறிதல்-அறிதலுக்கு அப்பால்

அறிதல்-அறிதலுக்கு அப்பால்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கவி, கேரளா]

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களுடைய கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களுடைய பணி தமிழில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. உங்களுடைய ஒரு கருத்துடன் நான் மாறுபாடுகிறேன். இந்திய மதங்களில் தத்துவமே அதி கடைசி எல்லையாக அல்லது தத்துவமே அதனுடைய இறுதி லட்சியமாக முன்வைக்கப்படுகிறதாகத் தாங்கள் எழுதுவது (அல்லது நான் அப்படிப் புரிந்துகொள்கிறேனா என்று தெரியவில்லை) மிகவும் முரணாகத் தெரிகிறது.

இந்திய மதங்களின் சாரமே தத்துவத்தின் எல்லையை எப்படி மீறுவது என்பதே. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதே பிரமம் என்பதே இந்து சிந்தனையின் உச்சம். மகாபாரதத்தில் தருமத்தின் மறுஉருவாகச் சித்தரிக்கபடும் விதுரர் தன்னுடைய கடைசி காலத்தில் வார்த்தைகள் அற்ற மௌனத்தில் மறைந்துவிடுவதாகக் குறிக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணனும் “ரகசியங்களுள் நான் மௌனம்” என்று சொல்லுகிறார். தத்துவம் வார்த்தைகளின் விளையாட்டு, சத்தியத்தைத் தேடுபவர்கள் அந்த விளையாட்டில் ஈடுபடுவதில்லை. ரமணர் அவர்களும் “கற்றதெல்லாம் ஒருநாள் மறக்க வேண்டிவரும்” என்று சொல்லி இருக்கிறார். தத்துவம் மிக முக்கியமானதுதான், ஆனால் கீழை மரபில் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட சூனியத்தில் அல்லது பிரமத்தில் அல்லது பக்தியில் கரைந்து ஒன்றுவதே ஒரே லட்சியம். Continue reading

24.சாங்கியமும் பகவத் கீதையும்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

சாங்கியமும் பகவத் கீதையும்

[இலக்கிய முகாம், ஊட்டி நாராயண குருகுலம்.  நண்பர் ”விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்” அரங்கசாமியுடன்]

இன்றைய சூழலில் சாங்கியத் தரிசனத்தின் மிக விரிவான சித்திரத்தை தரும் பொதுநூல் பகவத் கீதையேயாகும் ஆகும். இன்னும் கூறப்போனால் சாங்கியம் எனும் போதே கீதையின் ‘சாங்கியோகம்’ பகுதிதான் பரவலாக நினைவு கூறப்படும். கீதையில் சாங்கியத்தரிசனம் சற்று உருமாறிய நிலையில் விரிவாகவே பேசப்படுகிறது. Continue reading

23. சாங்கியமும் லோகாயதமும்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

சாங்கியமும் லோகாயதமும்

[ஊட்டி இலக்கிய முகாம். ஒரு மாலை நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]

சாங்கியம் வேதகாலம் முதல் இருந்து வந்த லோகாயத மரபின் தர்க்கப்பூர்வமான மேலடுத்த நீட்சி என்று குறிப்பிடப்படுகிறது. இதைப்பற்றி இன்று அதிகாரப்பூர்வமாக விவாதிப்பது சாத்தியமில்லை. காரணம், லோகாயத நூல்களில் பெரும்பாலானவை அக்காலத்திலேயே அழிந்துவிட்டன. பிற பிற்காலத்தில் அழிந்தன. லோகாயதத் தரிசனம் இன்று பற்பல நூல்களாகச் சிதறிக் கிடக்கும் மேற்கோள்களில் இருந்தும், அதன் எதிரிகள் கூறும் மறுப்புகளில் இருந்தும் ஊகித்தறியப்படுகிறது. லோகாயத் தரிசனத்தை மீட்டதில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவிற்குப் பெரும்பங்கு உண்டு. Continue reading

22.வேதாந்தத்தின் அறைகூவல்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

சாங்கியம் – வேதாந்தத்தின் அறைகூவல்

[டோரொண்டோ, கனடா அருங்காட்சியகத்தில் பிரம்மாண்டமான அடிமரம் முன்பு.]

பிற்கால வேதாந்தம், குறிப்பாக, சங்கரரின் அத்வைத தரிசன மரபு சாங்கியத்தை மிகக் கடுமையாக மறுத்து தருக்க பூர்வமாக நிராகரித்தது. இன்றைய சூழலில் இந்திய மரபு குறித்துப் பயிலும் ஒருவர் சங்கரர் கூறிய எதிர்க்கருத்துக்களை அறிந்த பிறகுதான் சாங்கிய மரபு குறித்து அறியப்புகுவார். Continue reading

விசிஷ்டாத்வைதம்

விசிஷ்டாத்வைதம்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

[ஊட்டி இலக்கிய முகாம். ஒரு மாலை நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]

அன்புள்ள ஜெ,

தமிழில் அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் சம்பந்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே என்னுடைய சிக்கல் என்னவென்றால் தமிழில் அத்வைதம் பற்றி நல்ல நூல்களே அனேகமாக இல்லை. விசிஷ்டாத்வைதம் பற்றி நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாமே வைணவ பக்தி நோக்கிலே எழுதப்பட்டுள்ளன. விஷ்ணுவிடம் சரணாகதி அடைவதுதான் விசிஷ்டாத்வைதம் என்ற அளவில்தான் அவை பெரும்பாலும் காணப்படுகின்றன.தத்துவார்த்தமாக தூயநிலையில் நாம் அதை அறியவே முடிவதில்லை. வைணவனாக நின்றுதான் அறியமுடிகிறது. அந்நூல்களில் சங்கரரின் தத்துவங்கள் சாதாரண தளத்தில் நின்று கண்டிக்கப்படுகின்றன. பெரும்பாலான நூல்களில் சங்கரருக்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் உறவே இல்லை என்ற அளவில்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் சாதாரண வாசகனாக நான் வாசிக்கும்போது ஒரே தத்துவதரிசனத்தின் இரு பார்வைகள் அவை என்ற எண்ணமே ஏற்படுகிறது. இந்த தத்துவங்களை நான் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு என் மனதில் வரையறைசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் இவற்றை எங்காவது வரையறை செய்து எழுதியிருக்கிறீர்களா?

ஆர். வெள்ளியங்கிரி Continue reading

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2

[ஆசிரியர் ஜெயமோகன் 10-3-2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆற்றிய உரையின் நிறைவுப் பகுதி. ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

[தாமிரபரணி ஆறு. திருநெல்வேலி. புகைப்படம் உதவி:வாசகர் ராஜன் சடகோபன்]

 [ 3 ]

தொன்மையான சம்ஸ்கிருத மரபைப் பார்க்கும்போது விவாதம் அதன் அடிபப்டை இயல்பாக இருப்பதைக் காணமுடிகிறது. ‘சதஸ்’ என்னும் சபை எப்போதுமே முரண்படும் கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று மோத வழியமைக்கும் இடமாக இருந்துள்ளது. இதன் விளைவாக இரண்டு அறிவுத்துறைகள் சம்ஸ்கிருதத்தில் பெரும் வளர்ச்சி பெற்றன. ஒன்று, சொல்லாராய்ச்சி செய்யும் மீமாம்சை. விவாதத்துக்கான பொதுத்தளமான மொழியை துல்லியமாக வகுத்துக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டதனால்தான் இவ்வளர்ச்சி. அடுத்ததாக விவாதத்தின் மெய்காணும்முறைகளை வகுத்துரைக்கும் நியாய சாஸ்திரம்.

இந்த இரு துறைகளும் தொன்மையான கிரேக்க மரபிலும் பெரும் வளர்ச்சி கொண்டிருந்ததைக் காணலாம். காரணம் கிரேக்க மரபும் சம்ஸ்கிருத மரபைப்போலவே அடிப்படையில் உரையாடல்தன்மை விவாதத்தன்மை கொண்டது. ஆனாலும் கிரேக்கமரபின் ஆகப்பெரிய சாதனையாக இருப்பது அது தர்க்கவியலை வளர்த்து எடுத்த விதம்தான். Continue reading