விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்

vishnupuram elakiyavattam_AW02

vishnupuram elakiyavattam_AW02

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் இவ்வருடத்தைய இலக்கியவிருது மூத்த படைப்பாளி வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. 25-12-206 ஞாயிறு அன்று மாலை ஆறு மணிக்கு கோவை பாரதீய வித்யாபவன் கலையரங்கு [ஆர் எஸ் புரம் கோவை]யில் விழா நிகழ்கிறது. கன்னடத்தின் மூத்தபடைப்பாளி எச்.எஸ்.சிவப்பிரகாஷ், நடிகர் நாஸர், மருத்துவர் கு.சிவராமன், இரா முருகன், பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

விழாவில் வண்ணதாசன் பற்றிய நூல் ஒன்றும் அவரைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த நதியின் பாடல் என்னும் ஆவணப்படமும் வெளியிடப்படும்

முந்தையநாள் , 24-1-2016 சனிக்கிழமை காலைமுதல் நண்பர்கள் வந்துகூடுவார்கள். கோவை குஜராத்திபவனில் வரும் அனைவருக்குமே தங்குமிடம், உணவு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. காலைமுதலே இலக்கியச்சந்திப்புகளும் படைப்பாளிகளுடன் உரையாடலும்  நிகழும். பல எழுத்தாளர்கள் என் தனிப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க வருகை தருகிறார்கள். முறைப்படுத்தப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிகமாக வாசகர்கள் விரும்பினால் படைப்பாளிகளுடன் தனியுரையாடலும் நிகழ்த்தலாம்

அனைத்துநண்பர்களையும் விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் அழைக்கிறேன். வருகை தந்து கௌரவிக்கவேண்டுமென கோருகிறேன்

ஜெயமோகன்

விஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்

டிசம்பர் 27 ஆம் தேதி கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கான அழைப்பிதழ். 26 ஆம்தேதி முதல் சந்திப்பு நிகழ்ச்சிகள் நிகழும்.vishnupuram vizha 2015

 

வெண்முரசு நூல்கள் அறிமுக விழா

10712482_1564747160414097_4389790215810145740_o

வெண்முரசு நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் அறிமுகம்- வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது.

நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள் அசோகமித்திரன், பி.ஏ.கிருஷ்ணன், பிரபஞ்சன், நாஞ்சில்நாடன் மற்றும் திரைத் துறைச் சாதனையாளர்கள் கமல்ஹாசன், இளையராஜா, வசந்தபாலன் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும்.

விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

-விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

நாள் : நவம்பர் 9, 2014, ஞாயிற்றுக்கிழமை.
இடம் : சென்னை ம்யூசியம் தியேட்டர் அரங்கம்
நேரம் : மாலை 5 மணி

தொடர்புக்கு:
பாலா: m_bala_s@hotmail.com

மேலும் விவரங்களுக்கு, ஃபேஸ்புக் பக்கம்

https://www.facebook.com/events/718581131563039/

வெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்

Venmurasu poster
மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில்
 
10 வருடங்கள் – தினமும் இணையத்தில் 
2014 புத்தாண்டு முதல்…

விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்

விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். . நான் பனராஸ் பல்கலைகழகத்தில் பொறியியல் படித்து முடித்து இப்போது மேற்க்கில்  உள்ளேன்.(ஜெர்மனி). உங்கள்   இணையதளத்தை தினமும் பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொள்கிறென்.

 கடந்த 5 வருடங்களாக தமிழ் நவீன இலக்கிய புத்தகங்களை படிக்கிறேன்.( இதர்கு முன் ஆங்கில இலக்கியம் தீவிரமாக படித்திருக்கிறென்).சமீபத்தில் உங்களின் விஷ்னுபுரம் நாவல் படித்தவுடன் என்ன சொல்வது என்பது புரியாமல் ஒரு நீண்ட மொளனத்தில் உள்ளே போகிரேன்( trance????).இந்த நூற்றாண்டில் வந்த ஒரு மிகச்சிறந்த நாவல் என்று சொல்லமுடியும். குறிப்பாக பொளத்த உரையாடல்கள்.
இந்திய கலாச்சாரத்தையும்/பண்பாடுகளையும் இவ்வளவு  விரிவாக எந்த கதையிலும்  சொல்லப்படவில்லை.இந்நாவலை பற்றி கூடிய விரைவில் உங்களுக்கு விமர்சனமாக எழுதி அனுப்பிகிறேன்.

  மேலும் காந்தி/அம்பெத்கார் பற்றிய உங்களின் நெடிய கட்டுரையையும் வாசித்தேன். இதிலும் உங்களின் நேர்மையான பதிவு ( எந்த விமரிசனத்திற்கும் கவலைப்படாமல்)என்னை பிரமப்பில் ஆழ்த்துகிறது. கொற்றவை நாவல் இன்னும் படிக்கவில்லை. Continue reading

பூவிடைப்படுதல்-5

பூவிடைப்படுதல்-5

ஜெயமோகன்.இன் ல் இருந்து

palappoo 003

[கள்ளிப்பாலை]

சங்கக்கவிதை மரபின் ஆரம்பத்திலேயே நம் கவிதை அகத்தையும் புறத்தையும் பிரித்துக்கொண்டது. சங்கப்பாடல்களின் தலைவாயிலான குறுந்தொகை ஓர் அகத்துறை இலக்கியம். இந்தப் பிரிவினையை நமக்கு நாம் நம் மரபைக் கற்க ஆரம்பித்தபோதே கற்றுத்தர ஆரம்பிப்பார்கள்.

ஆனால் பிரித்த கணத்தில் இருந்தே அகத்தையும் புறத்தையும் நம் கவிதை இணைக்க ஆரம்பித்துவிட்டது என்பதை நாம் பலசமயம் அறிவதில்லை. கூந்தலை இரு புரிகளாகப் பிரித்து அவற்றைப் பின்னிப்பின்னிச்செல்வது போலப் பிரபஞ்ச அறிதலை அகம் புறம் எனப் பிரித்தபின் அவ்விரண்டையும் பின்னிப் பின்னித் தன் அறிதல்களை நிகழ்த்துகிறது சங்கக்கவிதை. அவ்வாறு அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது அது. Continue reading

சயன்ஸே சொல்லுது!

சயன்ஸே சொல்லுது!

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

அன்புள்ள ஜெ,

காந்தியின் சனாதனம்-4 இல் சீர்திருத்த அணுகுமுறையின் செயல்பாட்டை அடிப்படை விதிகளாக சுருக்கிச் சொல்லியிருந்தீர்கள்.

ஆனால் மதப்பற்று காரணமாகத் தங்கள் மதம் ஐரோப்பிய சிந்தனையையும் அறிவியலையும் விட ஆழமானதும் உயர்ந்ததுமாகும் என வாதிடுவார்கள். அதற்கான விளக்கங்கள் எல்லாமே ஐரோப்பிய தத்துவத்தையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும்.

‘உருவ வழிபாடு’ திரியில் சுட்டப்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் ‘சிலை வழிபாடு பிரசெண்டேஷனில்’ நான் கண்டது நீங்கள் மேல் சொன்ன வரிகள்தான் என்று நினைக்கிறேன். மேலும் சிக்கல் என்னவென்றால் சில ஐரோப்பிய விஞ்ஞானிகளே அறிவியலையும் மதத்தையும் இணைத்து ‘அறிவியலுக்கு வெளியே கருத்து’ கூறுகிறார்கள். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் காட்டி மதத்தில் எதையாவது நிறுவ முயல்வது போல் ஆபத்தானது வேறொன்றுமில்லை. அது போல் செய்பவர்கள் மதத்தின் அறிவியலின் அடிப்படைகளை உண்மையில் உணர்ந்தவர்களா என்பது சந்தேகமே.

Continue reading

தீபாவளியும் சமணமும்:கடிதம்

தீபாவளியும் சமணமும்:கடிதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

திரு ஜெய மோகன்

மீண்டும் நான. தீபாவளி என் வரையில் சமண வேர் கொண்டது. ஒரு நிஜமான நிகழ்ச்சி அன்று நடந்தது. மகாவீரரின் மகா பரி நிர்வாணம் அன்று தான் நிகழ்ந்தது.

நரகாசுர வதம் புராண கதை. சாக்தமும் புராண கதையையே சொல்கிறது. தமிழ் சமணம் வலைப் பதிவில் எழுதி வரும் பானு குமார், சமணத்தின் மிச்ச மீதி அடையாளத்தைத் தொலைக்கவே இந்த புராணக் கதை வேண்டுமென்றே வெள்ளாளர்களாலும் , பிராம்மணர்களாலும் பரப்பப் பட்ட சதி என்றே வாதிட்டு வருகிறார். இதில் உண்மை சற்று இருப்பது போல் தோன்றுகிறது. வட நாட்டிலும் மகாவீர நிர்வாண நாள் அது தான். சமணம் தமிழகத்தில் மறைந்த பின் இந்த தினத்தை வேறு விதத்தில் கொண்டாட நம் முன்னோர் முடிவெடுத்திருப்பார் போலும்.

நரகாசுரன் கதை தென்னாட்டில் அதுவும் தமிழகத்தில் மட்டுமே பரவலாக வழங்கப் பட்டு வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் அது ராமர் வன வாசம் முடித்து திரும்பி வந்த நாளாக கொண்டாடப் படுகிறது. கேரளாவில் தீபாவளி இல்லவே இல்லை. விடுமுறை கூட இல்லை.

வேங்கடசுப்ரமணியன் Continue reading

தியானம்:கடிதங்கள்

தியானம்:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

JJ%2520362

[அந்தியூரில் அருவிக்கு மேலே]

வணக்கம் குரு.,

தியானம் என்ற சொல்லே மிகவும் வசீகரமானது! உங்கள் கட்டுரையில் (கடிதமே தற்போது கட்டுரை வடிவில் தானே அமைகிறது!!) உள்ள விளக்கம் மிகவும் பயனுள்ளது. தியானம், யோகம் சார்ந்து ஏற்படும் இவை போன்ற கேள்விகளுக்கு உங்களின் “பதஞ்சலி யோக சூத்திரத்திற்க்கு ஒரு எளிய விளக்கம்” ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தியது. தாங்கள் குறிப்பிட்டது போல் அதன் தொடர்ச்சியை ஆரம்பித்தால் மேலும் இவை போன்ற கேள்விகளுக்கு அதிலேயே பதில் கிடைக்கும். அதன் முன்னுரையில் குறிப்பிட்ட விளக்கமே பெரும் தெளிவை ஏற்படுத்தியது. நீங்கள் அளிக்கும் உரை வரும் தலை முறையினருக்கு நீங்கள் குறிப்பிட்டது போல் “யோகத்தை புரிந்து கொள்வதற்க்கும், யோகத்தை புரிவதற்க்கும்” பெரும் பயனுள்ளதாக அமையும்.

தியானம்

தியானம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

JJ%2520265

[அந்தியூர் டீக்கடையில். எதிரே விஜயராகவன். சிரிப்புடன் கடலூர் சீனு]

மதிப்பிற்குரிய ஜெ,

நீங்கள் பயணத்தில் இருக்கும் போது உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்.
தியானம் செய்வது எப்படி என்று எளிய முறையில் ஒரு செயல்முறை விளக்கம் கூறினீர்களென்றால் அது என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நேரம் கிடைக்கும்போது இதையும் கவனத்தில் கொண்டு எழுதலாமே? ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நல்ல புத்தகங்கள் இருப்பின் அவற்றை எனக்கு பரிந்துரை செய்யுங்கள்.
இப்படிக்கு
கிறிஸ்