தீராநதி நேர்காணல்- 2006 : 4

தீராநதி நேர்காணல்- 2006

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_5521[தெங்குமராட்டா]

தீராநதி:- ”தமிழில் நாவல்களே இல்லை” என்பதில் தொடங்கி, ”கருணாநிதி இலக்கியவாதி இல்லை” என்பது வரை உங்கள் கருத்து தொடர்ந்து சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்து வந்துள்ளன. இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

ஜெயமோகன்:- உலக இலக்கியத்தில் இன்றுவரை எழுதிய திறனாய்வாளர்களில் விவாதங்களை உருவாக்காத ஒருவருடைய பெயரை நீங்கள் சொல்ல முடியுமா? இலக்கியச்சூழலில் ஒருவகைக் கருத்துக்கட்டமைப்பு நிலவுகிறது. அதைநோக்கியே விமரிசகன் பேசுகிறான். அதை மாற்ற முயல்கிறான். அப்போது அது எதிர்வினையாற்றுகிறது. ஒரு விவாதம் உருவாகிறது. மெல்ல மெல்ல அவனுடைய கருத்தின் முக்கியப்பகுதி அக்கருத்துக் கட்டமைப்பால் ஏற்கப்படுகிறது. அப்போது அந்த விவாதம் சரித்திரத்தின் ஒருபகுதியாக மாறிவிடுகிறது. அடுத்த விவாதம் நிகழ்கிறது. இப்படித்தான் கருத்தியக்கம் முன்னகர்கிறது. Continue reading

தீராநதி நேர்காணல்- 2006 : 3

தீராநதி நேர்காணல்- 2006

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_5553[தெங்குமராட்டா]

தீராநதி:- தற்கால தமிழ்க் கவிதைப் போக்கு குறித்த உங்கள் விமரிசனம்?

ஜெயமோகன்:- கவிதை, என் நோக்கில் உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி. அன்றாடவாழ்க்கையை நாம் நம் உணர்வுகள் மற்றும் தேவைகள் சார்ந்து துண்டுதுண்டுகளாக அறிகிறோம். கவிதை, ஒட்டுமொத்தமான முழுமையான ஓர் அறிதலுக்காக முயல்கிறது. கைவிளக்கின் ஒளியால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்டை, மின்னலின் ஒளியால் காட்டித் தருகிறது. இதையே ஆன்மீகக் கூறு என்கிறேன். கவிதையின் ஆன்மீகமே அதை கவிதையாக ஆக்குகிறது. ஆகவே உலகியல் சார்ந்த மன எழுச்சிகளை நான் முக்கியமான கவிதையாக எண்ணுவதில்லை. உலகியல் சார்ந்த மனத்தூண்டல்களைக்கூட நல்ல கவிதை ஆன்மீக தளத்துக்குக் கொண்டுபோகும். ஒரு பெண்ணின் உதடுகளின் அழகைப் பற்றிய ஒரு கவிதை தன் கவித்துவ உச்சத்தை அடைகையில் பெண் மீதான ஆணின் ஈர்ப்பை, பூமி முழுக்கப் படர்ந்திருக்கும் உறவுகளின் வலையை அழகு என்ற கருத்தாக்கத்தை, அழகைத்தேடும் மனதின் உள்ளார்ந்த தாகத்தை எல்லாம் தொட்டு விரிந்தபடியே செல்லும்.அப்போதுதான் அது கவிதை. Continue reading

தீராநதி நேர்காணல்- 2006 : 2

தீராநதி நேர்காணல்- 2006

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_5559

[தெங்குமராட்டா]

தீராநதி:- இக்காப்பியத்தின் தொடக்கம் எப்படி உருவானது?

ஜெயமோகன்:- நான் என்றுமே பெருங்காவியங்களின் வாசகன். ஏற்கனவே மகாபாரதம் குறித்துப் பல கதைகள் எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தைப் படிக்கையில் ஒரு வரி என்னைக் கவர்ந்தது. கண்ணகியை ”வண்ணச்சீறடி மண்மகள் அறிந்ததிலள்” என்கிறார். மண்ணில் கால்படாது வாழ்ந்தவள். ஆனால் அவள் மதுரையில் பாண்டியன் அவைக்குச் செல்லும்போது அவளை வாயிற்காவலன் ”கொற்றவை” என்கிறான். இந்த மாற்றம் புகார் மதுரை பயணத்தில் நடந்தது. அது சிலப்பதிகாரத்திலும் ஓரளவு சொல்லப்பட்டுள்ளது. பயணம் தொடங்கும் கண்ணகி ஒரு பேதைப் பெண். முடிக்கும் கண்ணகி அமைதியும் ஆழமும் கொண்டவள். இந்தப் பயணத்தை அவள் ஐந்து நிலங்கள் வழியாகச் செல்கிறாள் என உருவகித்துக் கொண்டு. ஓர் அகவயப் பயணமாக சித்தரித்து நாவலாக எழுதவேண்டுமென எண்ணினேன். Continue reading

தீராநதி நேர்காணல்- 2006 : 1

தீராநதி நேர்காணல்- 2006

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_5508-1[தெங்குமராட்டா பயணம்]

எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய ஒரு படைப்பு. இந்தியக் காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல். பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளான நாவல் இது. ”ரப்பர்”, ”பின்தொடரும் நிழலின் குரல்”, ”கன்னியாகுமரி”, ”ஏழாம் உலகம்” ஆகியவை ஜெயமோகனின் மற்ற குறிப்பிடத்தகுந்த நாவல்கள். நாவல்கள் மட்டுமல்ல. ஜெயமோகனின் சிறுகதைகளும் விமர்சனக் கருத்துகளும்கூடத் தற்கால இலக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாதவை. இவரது சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் மொத்தத் தொகுப்பை ”உயிர்மை” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விமர்சன நூல்களை ”தமிழினி” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இனி ஜெயமோகனுடனான நேர்காணல். Continue reading

புராணமயமாதல்

புராணமயமாதல்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

Narayana_Guru

[நாராயண குரு]

ஜெயமோஹன சார்,

ஒரு சந்தேகம். நாராயண குரு குறித்து ஒரு புத்தகம் படித்தேன் ( கிழக்கு பதிப்பகம், ஒரு சிறிய அறிதலுக்கு மட்டுமே பயன்படும்). அதில நாரயண குருவை ஒரு கடவுள் மட்டத்திற்குக் கொண்டு சென்றிருந்தார் ஆசிரியர் (சில அற்புதங்கள் புரிந்தார் என்று). இவரைப் போல் பலர்..

என்னைப் பொறுத்த அளவில் குரு என்பவர் நிச்சயமாக மதிக்கப் பட வேண்டியவர். என்னை விட மேலானவர். உதாரணமாகத் தமிழ் இலக்கியத்தில் எனக்கிருந்த ஒரு சுவையை மறுபடியும் உங்கள் தளம் மூலம்தான் பெற்றேன். அவ்விஷய்த்தில் உங்களை குருவாக நான் மதிப்பேன். ஆனால் நீங்களும் ஒரு மனிதர்,, விருப்பு வெறுப்பு நிறைந்தவர் என்ற ஒரு கோணமும் என்னிடம் இருக்கும். Continue reading

விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்

விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். . நான் பனராஸ் பல்கலைகழகத்தில் பொறியியல் படித்து முடித்து இப்போது மேற்க்கில்  உள்ளேன்.(ஜெர்மனி). உங்கள்   இணையதளத்தை தினமும் பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொள்கிறென்.

 கடந்த 5 வருடங்களாக தமிழ் நவீன இலக்கிய புத்தகங்களை படிக்கிறேன்.( இதர்கு முன் ஆங்கில இலக்கியம் தீவிரமாக படித்திருக்கிறென்).சமீபத்தில் உங்களின் விஷ்னுபுரம் நாவல் படித்தவுடன் என்ன சொல்வது என்பது புரியாமல் ஒரு நீண்ட மொளனத்தில் உள்ளே போகிரேன்( trance????).இந்த நூற்றாண்டில் வந்த ஒரு மிகச்சிறந்த நாவல் என்று சொல்லமுடியும். குறிப்பாக பொளத்த உரையாடல்கள்.
இந்திய கலாச்சாரத்தையும்/பண்பாடுகளையும் இவ்வளவு  விரிவாக எந்த கதையிலும்  சொல்லப்படவில்லை.இந்நாவலை பற்றி கூடிய விரைவில் உங்களுக்கு விமர்சனமாக எழுதி அனுப்பிகிறேன்.

  மேலும் காந்தி/அம்பெத்கார் பற்றிய உங்களின் நெடிய கட்டுரையையும் வாசித்தேன். இதிலும் உங்களின் நேர்மையான பதிவு ( எந்த விமரிசனத்திற்கும் கவலைப்படாமல்)என்னை பிரமப்பில் ஆழ்த்துகிறது. கொற்றவை நாவல் இன்னும் படிக்கவில்லை. Continue reading

ஏன் நாம் அறிவதில்லை? [தொடர்ச்சி]

ஏன் நாம் அறிவதில்லை? [தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

07092012443

[நமீபியா பயணத்தின் போது]

நான் நெடுங்காலம் நம் உயர்தொழில்நுட்பக் கல்விக்கூடங்கள் அப்படிப்பட்டவை என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் இன்று என் வாசகர்களில் பலர் ஐஐடிகளிலும் ஐஐஎம்களிலும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கும் இதே வகையான தகவல்திணிப்புக்கல்வியே உள்ளது என்கிறார்கள். இன்னும் அதி உக்கிர தகவல்திணிப்பு, அவ்வளவுதான் வேறுபாடு. சிறுவயதிலேயே தகவல்களைத் திணித்துக்கொள்ளப் பழக்கப்படுத்தப்பட்ட மூளைகளே அவற்றுக்குள் நுழைய முடியும். அதிகமான தகவல்களைத் திணித்துக்கொண்டவர்கள் முதன்மைபெற்று அறியாமை மட்டுமே அளிக்கும் அபாரமான சுயபெருமிதத்துடன் வெளியே செல்கிறார்கள். Continue reading

ஏன் நாம் அறிவதில்லை?

ஏன் நாம் அறிவதில்லை?

ஜெயமோகன்.இன் ல் இருந்து

06092012327

[நமீபியா பயணத்தின் போது]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 2011 ஆம் வருடம் இயற்பியலுக்காக நோபெல் பரிசு சால் பெர்ல்முட்டேர்,ப்ரைன் மற்றும் ஆடம்ஸ் கிடைத்திருகிறது. அவர்கள் ” Discovery of theaccelerating expansion of the universe through observation of distantsupernovae ” என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று சேர்ந்தகருத்து இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதுவும்accelerating mode phase . அவர்கள் இதைத் தொடங்கியது பிரபஞ்சம் விரிவடைதல்decelarting phase என்று நிரூபிப்பதற்காக. அப்படியே 180 degree turn ஜெயமோகன். அபோது அவர்களுக்கு என்ன மனநிலை இருந்திருக்கும் என்று
நினைத்துப் பாருங்கள். ஜெ கீழே இணைத்துள்ள வீடியோ வையும் பாருங்கள். Continue reading

குறுந்தொகை-கடிதம்

குறுந்தொகை-கடிதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

அன்புள்ள ஜெயமோகன்,

எப்படி நெல்லி தின்று தண்ணீர் அருந்திய ஆட்டிற்குக் கொம்பு முதல் குளம்பு வரை இனித்ததோ உங்கள் உரை கேட்டு என் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது.

இலக்கியம் இவ்வளவு சுவையோ? காதலை விட சுவை அதிகமோ எனத் தோன்றுகிறது 🙂

அக உணர்வுகளை இயற்கை என்னும் பூதக் கண்ணாடி கொண்டு விளக்கினார்களோ, குறுந்தொகையை உங்கள் உரை அழகாக விளக்கியது.

என்னுடைய பத்தாம் வகுப்பில் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் படித்த பசலை நோய், அதனால் வளையல் ஒட்டியாணம் ஆகும் அளவிற்குத் தலைவி மெலிந்த கற்பனை அப்போதே பிடித்தது. உங்கள் உரைக்குப் பிறகு எல்லாவற்றையும் படிக்கவேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது. Continue reading

உரை; கடிதங்கள்

உரை; கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

அன்புள்ள ஜெ,

கோதை ஆற்று வெள்ளம் பாய்ந்து வந்து சென்னையில் எங்களை நிலை குலையச் செய்தது. குறுந்தொகை மூலம் கவிதையை மட்டும் அல்ல, வாழ்வையும் மீண்டும் புதிதாக அறிமுகம் செய்து வைத்தது உங்கள் உரை. ‘காடு’ தந்த பேரெழுச்சியை விட இன்னும் தீவிரமானதாக இருந்தது என்றே சொல்வேன். தொடக்கத்தில் இருந்தே உவமைகளும் படிமங்களும் கொட்டியபடியே இருந்தன. எதுவுமே வலிந்து புனைந்ததாக இல்லாமல் வெகு இயல்பாக அமைந்தன. இவ்வளவு உணர்ச்சிகரமான ஒரு உரையை நான் என் வாழ்நாளில் கேட்டதில்லை. ஒரு பத்து நிமிடங்கள் கடந்த பின் ‘யோவ் தாங்கலை! நிறுத்துய்யா’ என்று கூவத் தோன்றியது. Continue reading