நாராயணகுருவின் தத்துவம்

நாராயணகுருவின் தத்துவம்

ஜெயமோகன்.இன்  ல் இருந்து தொகுத்தது

[Copyright:Thinnai.com ]

[நாராயணகுரு]

தமிழ்ச் சூழலில் நாராயணகுருவின் செய்தியை புரிந்துகொள்ள சிரமங்கள் உள்ளன. இங்கே ஓர் எதிர்மறையான சிந்தனைப்போக்கு மிக வலுவாக வேரூன்றியுள்ளது. மரபையே நிராகரிக்கும் போக்காக அது மாறியுள்ளது . மேலும் மிக எளிமைப்படுத்தபட்ட ஒரு இரட்டைஎதிர்மை [binary opposition] கற்பிதம் செய்யப்பட்டுள்ளது . ஆரிய X திராவிட வாதம் , உயர் சாதி X கீழ்சாதி வாதம் , ஆதிக்கப்போக்கு X அடிமைப்படுத்தப்பட்ட போக்கு என்றெல்லாம் அப்பிரிவினை தொடர்ந்து செய்யப்படுகிறது . அந்த இரட்டைஎதிர்மைத்தன்மை தமிழ்ப்பண்பாட்டாய்வில் வெள்ளையர்களால் [உதாரணமாக கால்டுவெல்] அக்கால மேற்கத்திய சிந்தனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது . அது அன்றைய மேற்கத்திய சிந்தனையின் சாரமாக காணப்பட்டமையால் அவ்வாறு உருவாக்கப்பட்டமை இயல்பானதேயாகும் . அப்போக்கு மார்க்ஸியத்துடனும் ஒத்துப்போனதனால் அது வலுவாக நம் சிந்தனையில் வேரூன்றி அதுவே ஒரே சிந்தனைமுறை என கருதப் படுகிறது .நாராயணகுருவை புரிந்துகொள்ள மிகுந்த தடையாக அமைவது அதுவே. உண்மையில் நாராயண குருவின் பிரதான சீடர்கள் சிலர் கூட அவ்வடிப்படையில் நாராயணகுருவை மறுத்தனர் . முக்கியமாக சகோதரன் அய்யப்பன். Continue reading