கீதை : முரண்பாடுகள்

கீதை : முரண்பாடுகள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC_5615

[ஊட்டி இலக்கிய முகாமில்]

சுவாமி சித்பவானந்தரின் கீதை உரை தமிழில் மிகவும் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்ட நூல் அது. அதன் முன்னுரையில் அவர் – ‘கொலை நூலா?’ என்று ஒரு உபதலைப்பில் பகவத்கீதை கொலையை எடுத்துரைக்க்கும் நூலா என்ற வினாவுக்கு விரிவான பதிலைக் கூறுகிறார். தத்துவார்த்தமாகவும் நடைமுறை சார்ந்தும் கூறப்பட்ட கச்சிதமான விளக்கம் அது. கீதைக்கு உரைவகுத்த நவீன காலத்திய ஆன்மிகவாதிகள் அனைவருமே அந்த வினாவுக்கு ஏறக்குறைய அந்த வினாவினை அளித்துள்ளனர். உலகம் முழுக்க சைவ உணவுக்காகவும் கொல்லாமைக்காவும் அமைப்பு ரீதியாகப் பணியாற்றி வரும் ஹரே கிருஷ்ணா கிருஷ்ணபக்தி இயக்கம் (இஸ்கான்) தான் கீதையை உலகளாவ கொண்டு செல்கிறது. அகிம்சையை அரசியல் உள்பட வாழ்வின் அனைத்து மட்டத்திற்குமான செயல் முறையாக முன்வைத்த காந்தியின் மூலநூலாக இருந்ததும் கீதையே. Continue reading

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம் [ நிறைவுப்பகுதி]

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம் [ நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC_5583

[ஊட்டி இலக்கிய முகாம்]

இக்காரணத்தால் இந்து ஞானமரபில் உவமைகளை உவமிக்கப்படும் அக்கருத்தின் புற வடிவங்களாகவே கண்டு விவாதிக்கிறோம். இங்கு கீதை அளிக்கும் நான்கு உவமைகளையும் அவ்வாறே வாசகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கற்பனை மூலம் உவமையை விரித்து எடுக்கவேண்டும். கீதை 22 ஆம் பாடலில் ஆத்மா தன் உடல்களை கிழிந்த உடைகளை மாற்றுவது போல மாற்றிக் கொள்கிறது என்று கூறப்படுகிறது. மறுபிறப்புக் கோட்பாட்டின் அடிப்படை உவமையாக இன்றுவரை இது திகழ்ந்து வருகிறது. Continue reading

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-2

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-2

ஜெயமோகன்.இன் இல் இருந்து

DSC_5572

[ஊட்டி இலக்கிய முகாமில்]

பரத்தை கண்டறிதல்

புலனடக்கம் பற்றிய கீதையின் விளக்கத்தில் புலன்களை வெல்லும் வழி என்று கூறப்பட்டிருப்பது என்ன? பொதுவாக கீதை உரைகளில் ‘இறைவனை மையமாகக் கொண்டு மனதை குவித்தல்’ என்றே கூறப்படிருக்கும். கீதை பரம்பொருளால் கூறப்பட்ட வேதம் என்ற நம்பிக்கையில் இருந்து தொடங்கினால் அது இயல்பான ஒரு முடிவுதான். ஆனால் வேதாந்த நூலாக கீதையை எடுத்துக் கொணடால் அப்படிக் கூறமுடியாது.

கீதை 45 ஆம் பாடலில் முக்குணமயமான வேதங்களைத் தாண்டி நீ ‘ஆத்மவானாக’ இரு என்று கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். ஆத்மாவில் நிலைபெற்ற நோக்கு உடையவனை ‘ஸ்ருத பிரதிக்ஞன்’ என்கிறார். நிலைபேறு உடையவன் புலன்களை வெல்கிறான். தன் ‘ஆத்ம ஸ்வரூ ப’த்தை உணர்ந்து அதில் மனதின் நிலைநிறுத்தி அதனூடாக புலன்களை வெல்லுதலைப் பற்றியே கீதை பேசுகிறது என்பது தொடர்ந்துவரும் பாடல்களை கூர்ந்து வாசிப்பவர்களுக்குப் புரியும். கீதை 53ஆம்பாடலில் நேரடியாக இது கூறப்படுகிறது. ‘உன் அறிவு என்று ஆத்மாவில் உறுதி பெறுமோ அன்று நீ யோகம் அடைவாய்’ என்கிறார் கிருஷ்ணன். Continue reading

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-1

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-1

ஜெயமோகன்.இன் இல் இருந்து

DSC_5374

[ நாராயணகுரு சிலை. ஊட்டி நாராயண குருகுலம் ]

 நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் சேர்ந்து பயணம் செய்யும்போது ஒரு குருத்வாராவுக்குள் செல்கிறார்கள். அங்கே இருக்கும் கியானிகள் நடராஜகுருவுக்கு குரு கிரந்த சாஹிபை வாசித்துக்காண்பிக்கிறார்கள். நடராஜ குரு அந்த நூலை அதற்கு முன்னதாக கேடதில்லை. அது குர்முகி மொழியில் இருக்கிறது. ஆனால் கேட்கக் கேட்க நடராஜகுரு அந்நூலின் வரிகளுக்கு பொருள்சொல்லிக்கோண்டே இருக்கிறார். நித்யாவுக்கு ஆச்சரியம். ‘இதில் ஒன்றுமில்லை. இந்நூலின் அடிப்படைக் கலைச்சொற்கள் எல்லாமே சம்ஸ்கிருத மூல்த்தின் சிறிய உச்சரிப்புவேறுபாடுகள் மட்டுமே ‘ என்று நடராஜகுரு சொல்கிறார். Continue reading

நான்கு அடிப்படை பேசுபொருட்கள்…

நான்கு அடிப்படை பேசுபொருட்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_6025

[ நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஊட்டி இலக்கிய முகாமில்]

இந்திய சிந்தனை மரபு

இந்திய சிந்தனை மரபை அறிவதற்கு நான்கு மையமான பேசுபொருட்களை தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம். அவற்றில் இருந்து இந்திய தத்துவ சிந்தனையின் தரப்புகளுக்குள் செல்வது ஒரு கயிறைப்பற்றிக் கொண்டு காட்டுக்குள் செல்வதுபோன்றது.

1. விடுதலை

இந்திய சிந்தனையின் தரப்புகள் அனைத்திலுமே அடிப்படையான முதல் வினாவாக உள்ளது இதுதான், இச்சிந்தனையின் பயன் என்ன? இதை ஏன் நான் படிக்கவேண்டும், ஏன் இதன்படி வாழவேண்டும்? எல்லா சிந்தனைகளும் இதற்கான ஒரு பதிலை நமக்கு அளித்தபின்னரே ஆரம்பிக்கின்றன. அவை அளிக்கும் பதிலை ஒட்டுமொத்தமாக ஒரே சொல்லில் விடுதலை என்று சொல்லலாம். முக்தி, மோட்சம்,வீடுபேறு என்றெல்லாம் பல சொற்களில் இது குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு சிந்தனைக்கும் இச்சொற்கள் ஒவ்வொரு விதமாக பொருள்கொள்கின்றன. ஆனால் சிந்தனை என்பது விடுதலை என்ற பயனை அளிப்பதாக இருக்கவேண்டும் என்பது எல்லா தத்துவத்தரப்புகளுக்கும் பொதுவாக உள்ளது. Continue reading

அயன் ராண்ட் ஒரு கடிதம்

அயன் ராண்ட் ஒரு கடிதம்
ஜெயமோகன்.இன் ல் இருந்து
அன்புள்ள ஜெ
நான் இதை மிகப் பணிவாகத்தான் எழுதுகிறேன்.  ஒரு விவாதமாக அல்ல. நீங்கள் ayn rand ஐ முழுதாக அலசாததாகவே  எண்ணுகிறேன். மற்ற விஷயங்களில் உள்ள நடு நிலை இதில் இல்லாமல் போனது போலத் தோன்றுகிறது. தயவு செய்து சோர்வு கொள்ளாமல் predetermined notion அல்லாமல் படிக்க வேண்டுகிறேன், Continue reading

அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் [தொடர்ச்சி]

அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் [தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அயன் ராண்ட் பற்றிய என் கட்டுரையை தொடர்பு படுத்தி இக்கடிதத்தை வாசிக்கலாம். கோபத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அது முழுக்க முழுக்க நியாயமானதே. அயன் ராண்ட் குறித்து நம் சூழலில் இருக்கும் வழிபாட்டுணர்வுக்கு இப்படி ஒரு கோபம் எழாமல் இருந்தால்தான் ஆச்சரியம். மேலும் என்னைப்பொறுத்தவரை தத்துவத்தை தன் தளமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் மீது இருக்கும் பிடிப்பு என்பது ஒரு தொடக்கம் என்ற நிலையில் மிக ஆரோக்கியமான ஒன்றே.

Continue reading

அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்

அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அயன் ராண்ட் குறித்த என்னுடைய கட்டுரைக்கு வந்த ஒரு  கடிதம் என்னை மிகவும் சிந்திக்கச் செய்தது. இப்போது அமெரிக்காவில்,நியூயார்க்கில்,  இருக்கிறேன். ஊரில் இருந்திருந்தால் இக்கடிதத்தை பொருட்படுத்தியிருக்க மாட்டேன். நானல்ல,  எந்த ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் பொருட்படுத்தி பதில் சொல்லத்தக்க கடிதம் அல்ல இது. ஆனால் இங்கே அமெரிக்க கல்விமுறை பற்றி மேலும் மேலும் உற்சாகமாக இங்குள்ள நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். மேலும் இக்கடிதம் வந்தநாளில் நான்  எம் ஐ டி – ஹாவார்ட் சென்றிருந்தேன்.

Continue reading

அயன் ரான்ட்,மேலும் கடிதங்கள்

அயன் ரான்ட்,மேலும் கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

ஜெயமோகன்,

“இந்நிலையில் நம் சூழலில் எப்போதும் நிகழும் ஒன்று உண்டு. தகவல்பிழைகளைக் கண்டடைந்து அதன் அடிப்படையில் விவாதத்தை முன்னெடுப்பது. ஒரு கட்டுரையை கூர்ந்து கவ,னித்து தகவல்பிழை ஒன்றை கண்டுபிடித்து ‘இதைக்கூட தெரியாமல் எழுதிய இவனெல்லாம் பேசலாமா’ என்ற தோரணையில் எழுதப்படும் கட்டுரைகளை நாம் சர்வசாதாரணமாக தமிழில் காணலாம். சமயங்களில் அது தட்டச்சுப்பிழையாகவோ அல்லது வாசகரின் புரிதல்பிழையாகவோ இருக்கும். ஒரு கட்டுரையின் தகவல்பிழை ஒருபோதும் அதன் மையமான வாதத்தை நிராகரிக்க காரணமாகாது என்பது எல்லா விவாதங்களிலும் உள்ள அடிப்படைவிதி” மேற்கண்ட கருத்தை சொல்லிய நீங்களே “யாருடைய காலில் வேண்டுமானாலும் விழும் தமிழர்கள்” என்ற அரவிந்தன் கண்ணையனின் கருத்தை திரித்து “காலில் விழும் தமிழ்க்குணத்தைப் பற்றிய நக்கல் அயன் ராண்டின் ரசிகருக்கு உகந்ததே. காலில் விழுவதென்பது இந்தியப்பண்பாட்டின் மிக மிக உயர்ந்த ஒரு ஆசாரம்.” என்று கூறியிருக்கிறீர்கள். அவர் எந்த காலில் விழும் கலாச்சாரத்தை குறிப்பிடுகிறார் என்பது எனக்குப்புரியும்போது தங்களுக்கு புரியாமலா இருக்கும். உன்னதனமான காலில் விழும் கலாச்சாரம், தற்போதைய சந்தர்ப்பவாத தமிழினத்தினால் எந்தளவுக்கு கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தாங்கள் அறியாததா?

மணிவண்ணன் Continue reading

அயன் ரான்ட் கடிதங்கள்

அயன் ரான்ட் கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெ,

அயன் ராண்டின் சிந்தனைகள் அவ்வளவு எளிமையானவை அல்ல. சுயநலத்தை பற்றிய அவரது கருத்துக்கள் மிக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளன். மனிதநேயத்தையும், தர்ம‌ சிந்தனையையும் அவர் மறுக்கவில்லை / வெறுக்கவில்லை. ஆனால் மனிதனேயம் ‘மட்டுமே’ அறம் என்பதை அவ்ர் ஏற்பதில்லை. உற்பத்தியை பெருக்கும், தொழில் முனைவோரின் அடிப்படை அறங்களே உலகில் மிக மிக முக்கியமான அறம் என்பதே அவர் கோட்பாடு. தொழில் முனைவோர்களின் ஊக்கம், உழைப்பு மற்றும் லாபநோக்கங்களே நம் உலகை மாற்றி, வறுமையை பல மடங்கு குறைத்து, வாழ்க்கை தரத்தை மிக மிக உயர்த்தி உள்ளது. Continue reading