செயலே விடுதலை:சாங்கிய யோகம் – 2

செயலே விடுதலை:சாங்கிய யோகம் – 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[அருகர்களின் பாதை – டோலாவீரா , நண்பர்களுடன் ]

நிரந்தரத்தன்மையின் தரிசனம்

அலைகள் கடலை மாற்றியமைப்பதில்லை. அலை கடல் என்றும் நிரந்தரத்தின் உள்ளே நிகழுபவை மட்டுமே உயிர்கள் ஆற்றும் அத்தனைச் செயல்களும், அவை ஆக்கமானாலும் சரி அழிவானாலும் சரி, பிரபஞ்சம் என்ற நிரந்தரத்தின் உள்ளே நிகழும் அலைகள் மட்டுமே. பிரபஞ்சம் என்பதை ஒரு ஒற்றைப் பெருநிகழ்வாகக் கொண்டால் இவையெல்லாம் அப்பெருநிகழ்வின் சிறு சிறு துளியே.

இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்குள் கோடானுகோடி செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என் செல்கள் உண்டு உயிர்த்து இயங்குகின்றன. என் மூளை நியூரான்கள் மின்னூட்டம் பெற்றும் அணைந்தும் செயல்படுகின்றன. எனக்குள் கோடானு கோடி வைரஸ்கள் பிறந்திருக்கின்றன. கோடானுகோடி பாக்டீரியாக்களுடன் வெள்ளை அணுக்கள் சமர்புரிகின்றன. அவையெல்லாம் என் இயக்கத்தில் துளியிலும் துளியினும் துளிகள். Continue reading

செயலே விடுதலை:சாங்கிய யோகம் – 1

செயலே விடுதலை:சாங்கிய யோகம் – 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

 [ பன்னஹல்க அஜய்குமார். ஆசிரியரின் இந்தியப்பயணத்தின் போது ]

ஒரு வேதாந்திக்கு வேதாந்தநூல்களுடன் உள்ள உறவென்பது ஏறிச்சென்றவனுக்கு ஏணி மீது உள்ள உறவுதான். படிபப்டியாக மிதித்துமேலேறி முற்றிலும் பிந்தள்ளி அவன் சென்றுவிடுகிறான். அப்படியானால் அவனுக்கு வேதங்களுடன் உள்ள உறவென்ன? அந்த ஏணிக்கு மூங்கில்களை அளித்த அந்தக் மூங்கில்காட்டுடன் உள்ள உறவுதான்.

வேதங்களுக்கு படிப்படியாக ஒரு முதன்மை இந்துமதக்கட்டமைப்பில் உருவாகி வந்தது. அதற்கான வரலாற்றுக்காரணங்கள் பல உள்ளன. முக்கியமான இரு காரணங்களைச் சொல்லலாம். இந்துஞான மரபை ஒரு மதமாக கட்டமைத்த சடங்கு- நம்பிக்கை அமைப்பானது வைதீகர்களால் உருவாக்கபப்ட்டது. அந்த உருவாக்கத்திற்கு வேதம் பெரும் பங்களிப்பை ஆற்றியிருக்கிறது.னாந்த கட்டமைப்புக்கு எதிரான குரல்களாக அவைதீக மதங்களான பௌத்தமும் வைணவமும் உருவாகி வந்தன. அவை அளித்த நூற்றாண்டுக்கால எதிர்ப்பு காரணமாக இந்து மதம் வேதங்களை தன் அச்சுத்தண்டாக நிறுவிக்கொண்டது. Continue reading

அரதி

அரதி

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[மேகமலை பயணத்தின் போது]

அன்புள்ள அண்ணணுக்கு,
நான் என்னுடைய 7 ஆம் வயதில் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.11 வயதில் ஆரம்பித்தது நீல பத்மநாபன்.20 வயதில் நீங்கள்.இப்போது 32 வயதில் எதை படித்தாலும் அதில் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கிறது.எல்லோருமே ஒரே விஷயத்தை பன்னிப் பன்னி எழுதுவது போல இருக்கிறது.

உங்களுடைய எழுத்துக்கள் அதிலும் இந்தியா மற்றும் நகைச்சுவை பற்றி மட்டுமே படிக்க பிடிக்கிறது.தினமும் உங்களை படிக்கிறேன்.இப்போது நான் என்ன செய்வது?
அன்புடன் நடராஜன்

*** Continue reading

கீதைத்தருணம்

கீதைத்தருணம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[வீட்டு  நூலகம்]

அன்புள்ள ஜெயமோகன்,கீதையைப்பற்றி எழுதியிருந்த கட்டுரைகளை விரும்பிப்படித்தேன். நான் சிறுவயதிலிருந்தே கீதையை பாராயணம் செய்திருக்கிறேன். அவ்வப்போது படித்ததும் உண்டு. கீதை ஓர் அழகிய நூல் என்று தோன்றியிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் முக்கியத்துவம் மனதில் பட்டதில்லை. நீங்கள் எந்தக் கோணத்தில் கீதையை படிக்கிறீர்கள் என்ற ர்வம் எனக்கு உள்ளது.

ஆர்.சங்கர நாராயணன், மும்பை

அன்புள்ள சங்கர நாராயணன்,

கீதையை வாசிப்பதற்கு உரிய தருணத்தை கீதையே உருவாக்கும் என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. அதையே ‘கீதா முகூர்த்தம்’ என்கிறார்கள். Continue reading

கேள்வி பதில்

கேள்வி பதில்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

வேதங்களையும் அவற்றின் உட்பொருளையும், கவித்துவத்தையும் காண விரும்புவோர்க்குத் தாங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) எவையாக இருக்கும்?

– பி.கே.சிவகுமார்.

வேதங்களை நான் படித்தது மலையாள மொழிபெயர்ப்புகளில். மலையாள மொழி மேற்கட்டுமானத்தில் சம்ஸ்கிருதமேதான். ஆகவே மொழிபெயர்ப்பு மிக உண்மையானதாகவும் நேர்த்தியானதாகவும் இருக்கும். மேலும் மொழிபெயர்ப்புகளைக் கேரள தேசியப் பெருங்கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனன் செய்திருக்கிறார். வேதங்கள் குறித்த அரிய ஆய்வுகளும் மலையாளத்தில் உள்ளன. Continue reading

3.நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!

நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!

ஜெயமோகன்.இன் ல் இருந்து

சிலநாட்களுக்கு முன்னர் திருவையாறு  ஐயாறப்பன் ஆலயத்தில் சென்றுகோண்டிருந்தபோது வழிபாட்டுணர்வுடன் சென்றுகோண்டிருந்த மக்களைப் பார்த்துவிட்டு மலையாள இலக்கியத்திறனாய்வாளர் கல்பற்றா நாராயணன் என்னிடம் சொன்னார் ”பக்தியில் மட்டும்தான் ஒரு சிறப்பு உள்ளது, அதில் மூழ்கி மூழ்கிச் செல்வதற்கான இடம் இருக்கிறது”

நான் சொன்னேன் ”பக்தி என்பது உண்மையில் ஒற்றைப்படையான ஓர் உணர்வே…பக்தியை இந்திய பக்தி இயக்கங்கள்தான் மூழ்கிச்செல்லவேண்டிய கடலாக மாற்றின. பக்தியை முழு வாழ்க்கையளவுக்கே பெரிதாக்கிக் கொண்டன அவை. பக்தியில் வாழ்க்கையின் எல்லா கூறுகளையும் கொண்டுவந்துசேர்த்துக் கொண்டன. நம்முடைய பக்தியில் தத்துவம் இருக்கிறது, இலக்கியமும் இசையும் இருக்கிறது. எல்லா கலைகளும் பக்தியே. சுவையான சமையல், கட்டிடக்கலை ஆகியவையும் பக்தி சார்ந்தவையே. நம்முடைய களியாட்டங்கள் கொண்டாடங்கள் ஆகியவையும் பக்திசார்ந்தவையே. நம் வாழ்க்கையில் பக்தி ஊடுருவாத எந்த வெற்றிடமும் இல்லை என்ற நிலையை உருவாக்கினார்கள் முன்னோர்” Continue reading

2.மறைந்து கிடப்பது என்ன?

மறைந்து கிடப்பது என்ன?

ஜெயமோகன்.இன் ல் இருந்து

சாந்தோக்ய உபநிடதத்தில் ஆருணியாகிய உத்தாலகன் தன் மகன் ஸ்வேதகேதுவுக்குச் சொல்கிறான், மண்ணில் ஓடும் நதிகளெல்லாம் கடலையே அடைகின்றன. மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களுமெல்லாம் இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன.

ஐநூறுவருடத்துக்கு மேல் காலப்பழக்கமுள்ள  ஏதாவது ஒரு மதத்தில், ஒரு தத்துவசிந்தனைமரபில் இதற்கிணையான ஒரு முழுமைநோக்கு பதிவாகியிருக்கின்றதா? உலகசிந்தனைகளை இன்று நாம் இணையம் மூலம் எளிதாக தொட்டுச்செல்லமுடிகிறது. நீங்களே இதற்கான விடையைத்தேடிக்கொள்ளலாம். Continue reading

இந்திய சிந்தனை:கடிதங்கள்

இந்திய சிந்தனை:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெயமோகன்;

வணக்கம் தங்களுடைய இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புத்தகம் படித்தேன்.

அதிலே முதலாவதாக நீங்கள் சொல்லியிருந்தீர்கள் இந்த விளக்கங்களை எளிதாக அமைப்பதற்கே என்னுடைய மொழித்திறனை பயன்படுத்துகிறேனென்று முற்றிலும் உண்மை. காரணம் இன்றைக்கு நீங்களே குறிப்பிடிருப்பதை போன்று இவற்றை பற்றியே தகவல்களை எல்லாம் வேதாந்த  நூல்களிலிருந்தே பெற முடிகிறது ஒன்று இரண்டாவாதாக அங்கே வெறும் மொழித்திறன் மாத்திரமே பயன்படுத்தப்படுவதால் கடுமையான பொருள் மயக்கம் ஏற்படுகிறது. விளைவு அதை படிக்கிற விருப்பமே அகன்று விடுகிறது.காரணம் சந்திர கிரகணத்தை பற்றிய விளக்கம்  அந்த நிகழ்வை விளக்க வேண்டுமே அன்றி சந்திரனுடைய அழகை விளக்க வேண்டிய அவசியமென்ன?

மொழியை  இவ்வளவு திட்டவட்டமாகவும் துல்லியமாகவும் நீங்கள் பயன்படுத்தியதே இந்த புத்தகத்தை இவ்வளவு தூரம் புரிந்து கொள்ள உதவியது. உயிர்மையில் சமீபத்திய பேட்டியில் சந்தைப்படுத்துதலை பற்றிய உங்கள் கருத்து எனல்லும் உடன்பாடானதே. இருப்பினும் இவ்வளவு முக்கியமான புத்தகம் மறுபதிப்பு செய்யப்படாதது ஒரு வாசகனின் மனநிலையிலிருந்து மிகவும் துரதிர்ஷ்டமானது. உங்கள் பார்வையில் எங்களையும் ஒரு அங்கமாக கொல்லலாம். இந்த புத்தகத்திற்கான தனி பிரதி எனக்கு எங்கும் கிடைக்கவில்லை.காடு நாவல் குறித்து தனியாக ஒரு கடிதம் எழுத வேண்டும்.

அன்புடன்
சந்தோஷ் Continue reading

உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!

உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோவை புத்தக விழாவில் வாசக நண்பர்களுடன்]

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூகத்துக்கு நாகரீகத்திலும் மேலாதிக்கத்திலும் மேல்நிலை காணப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய சமூகம் இன்றுவரை அதற்கு இருக்கும் உயர்பண்பாட்டையும் வணிகமேலாதிக்கத்தையும் அடைந்தது. அதற்கு முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தை நாம் காண்கிறோம். அதற்கு முன் கிரேக்கர்கள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இந்தியா பண்பட்டிலும் செல்வத்திலும் ஓங்கியிருந்த ஒரு நாடு என நாம் அறிவோம். உலகமே இந்தியாவை கல்விக்காகவும் வணிகத்துக்காகவும் தேடிவந்த ஒருகாலகட்டம் இருந்தது. இந்தியா என்பது ஒரு பொற்கனவாக உலகமனத்தில் இருந்தது. Continue reading

கீதை எதற்காக?

கீதை எதற்காக?

ஜெயமோகன்.இன் இல் இருந்து தொகுத்தது

[ஊட்டி இலக்கிய சந்திப்பில் வாசக நண்பர்கள்]

கீதையை ஏன் பயில வேண்டும்? ஒரு மதநூலாக அதைப் பயின்றாக வேண்டிய கட்டாயம் இந்துவுக்கு சற்றும் இல்லை. இந்துமதம் அப்படி எந்தக் கட்டாயத்தையும் விதிக்கவில்லை. வழிபாட்டு நூலகவும் அது இன்றியமையாதது அல்ல. வேதங்கள், திருமுறைகள், திருவாய்மொழிகள் போன்றவையே அவ்வகையில் முக்கியமானவை.

கீதை ஒரு தத்துவ நூல், ஞான நூல் என்ற இருவகையிலும்தான் அதை வாசிக்க வேண்டிய தேவை எழுகிறது. இந்திய தத்துவமரபை கற்க விரும்புகிறவர்களுக்கு அது தவிர்க்க இயலாத நூலாகும். இந்து மெய்ஞான மரபை அறிய விரும்புகிறவர்களுக்கும் அது இன்றியமையாதது. இந்து மரபு சார்ந்து ஞானத்தேடலில் இருப்பவர்களுக்கு அது முக்கியமான முதல்நூல்.

Continue reading