நியாயம் உருவகிக்கும் பிரபஞ்சவியல்

நியாயம் உருவகிக்கும் பிரபஞ்சவியல்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

11jyr9y

[நாளந்தா இடிபாடுகள்]

வைசேஷிகத்தைப் போலவே நியாயமும் பிரபஞ்ச இயக்கத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமையால்தான் மனிதனுக்குத் துக்கங்கள் ஏற்படுகின்றன என்று கருதியது. அறியாமையே துக்கத்தின் ஊற்றுக்கண். அறிவு துக்கத்தை அகற்றுகிறது. சரியானபடி இப்பிரபஞ்சத்தைப் புரிந்துகொண்டு நாம் அடையும் சமனிலையை நிஸ்ரேயஸம் என்று நியாயம் உருவகித்தது. Continue reading

தருக்கமே தரிசனம்: நியாயம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தருக்கமே தரிசனம்: நியாயம்

100_2380

[அருகர்கள் பாதை. இந்திய நெடும்பயணத்தின்போது பெல்காமில்]

நியாயம் என்ற வார்தை நம்முடைய அன்றாட வாழ்வில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒன்று. தருக்கப்பூர்வமானது, நீதிபூர்வமானது, சமனிலைப்படுத்தப்பட்டது, யுக்திக்கு உகந்தது என்ற அர்த்தங்களில் நாம் இச்சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்தி வருகிறோம். (நியாயமான பேச்சு, எல்லாவற்றுக்கும் நியாயம் வேண்டும், நியாயம் செய்வதாகும். நியாயவிலைக்கடை…)

இச்சொல் இந்து ஞானமரபின் ஆதி தரிசனங்களில் ஒன்றான ‘நியாய மரபில்’ இருந்து வந்ததாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல நியாய தரிசனமானது வைசேஷிக தரிசனத்தின் துணைத் தரிசனம். அடிப்படையில் வைசேஷிகத்தின் பிரபஞ்சப்பார்வையே நியாய மரபிலும் தொடர்கிறது. வைசேஷிகத் தரிசனங்களுக்குத் தருக்க அடிப்படையினை உருவாக்கித் தரும் ஒரு தருக்க சாஸ்திரமாகவே வெகு காலம் நியாயம் விளங்கி வந்திருக்கிறது. Continue reading

பொம்மையும் சிலையும்

பொம்மையும் சிலையும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அ ன்புள்ள ஜெயமோகன்,

இந்து மதத்தின் வழிபாட்டுச் சிலைகளை ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றியபடி விளக்கிக்கொள்ளலாம் என்று நீங்கள் சொல்கிறீர்களா? அவ்வாறு ஆளுக்காள் அதை மாற்றுவார்கள் என்றால் அதன் பின்னர் நம்முடைய விக்ரகங்கள் எப்படி இருக்கும்? வழிபடுவதற்கு சாமிகளே இருக்காதல்லவா? ஒருமதத்தின் அடிப்படைகளை மாற்றிக்கொண்டே இருப்பது எப்படி சரியானதாக ஆகும்? Continue reading

ஒரு அதிர்வு இருக்குதுங்க!. [தொடர்ச்சி.]

ஒரு அதிர்வு இருக்குதுங்க!.[தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

தமிழ்வரலாற்றில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் தாந்த்ரீகத்தை பக்தியால் விளக்கும் இந்தப் போக்கு நிகழ்ந்து வருகிறது. மிகச்சிறந்த உதாரணம் திருமந்திரம், சித்தர்பாடல்கள் போன்றவற்றுக்கு எழுதப்பட்ட உரைகள். அந்த மூல ஆக்கங்கள் சென்றகால தாந்த்ரீகமரபைச் சேர்ந்தவை. அவற்றின் பெரும்பகுதி எவருக்கும் பொருள்புரியாதபடி மூடுண்டது. திருமந்திரத்தின் இரண்டாம் இருநூறுபாடல்களில் பெரும்பாலானவை மர்மமானவை. சித்தர்பாடல்களில் கம்பிளிச்சட்டைநாயனார் போன்றவர்களின் பாடல்கள் நமக்கு என்னவென்றே தெரியாதவை. அவற்றை எல்லாம் பக்திநோக்கில் மிகமிக எளிமைப்படுத்திப் பொருள்கொண்டு இந்த உரைகள் எழுதப்பட்டுள்ளன. Continue reading

ஒரு அதிர்வு இருக்குதுங்க!.1

ஒரு அதிர்வு இருக்குதுங்க!.1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். இந்து மதத்தைப் பற்றிய உங்கள் பல ஆக்கங்கள் என் மதத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ளப் பெரிதும் உதவி இருக்கிறது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. சில விஷயங்களைப் பற்றி உங்கள் கருத்துகளைத் தெளிவுபடுத்தினால் வசதியாக இருக்கும். உங்கள் இணையதளம் முழுவதும் தேடிப்பார்த்து பதில் கிடைக்கவில்லை என்பதாலேயே இங்கே கேட்கிறேன். நீங்கள் பொதுவாகவே வைதீகம் சம்பந்தப்பட்ட பழக்கங்களைத் தேவையற்றதென ஒதுக்குவதாகவே புரிந்துகொள்கிறேன். கோவில்களை இந்து மதத்தின் குறியீடுகளாக நீங்கள் பார்க்கிறீர்கள். அங்கு நடக்கும் பூசைகளிலேயோ வழிபாட்டு முறைகளிலேயோ எந்தவிதத் திட்டவட்டமான பயன்களும் இல்லை, ஆனால் ‘அவை நம் பண்பாட்டின் நுட்பமான பன்மைத்தன்மையின் சின்னங்கள், அவை தொன்மங்கள், குறியீடுகள், அவை அளிக்கும் ஆழ்மனப்பதிவு முற்றிலும் தனித்தன்மை கொண்டது’ என்பதாகவே நீங்கள் சொல்கிறீர்கள். வீட்டில் சடங்குகளின்போது கடைப்பிடிக்கப்படும் ஆச்சாரங்களைப் பற்றியும் உங்கள் கருத்து இதுவே என நான் நினைக்கிறேன்.

Continue reading

இந்தியஞானம்-கடிதங்கள்

இந்தியஞானம்-கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெ,

சிந்திப்பவர்களுக்கான சிறப்பு வாசல் வாசித்தேன். நவீன மனம் கொண்டவர்களுக்கான, ‘ இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற நூல் இந்தத் தலைமுறையினரில் பெரும்பாலானவர்களுக்கு ஓர் அரிய பரிசாகவே இருக்கும். இந்து ஞானம் பற்றிய அறிமுகம் என்னும் மகத்தான பணியை நீங்களும் அயராது ஆற்றி வருகிறீர்கள், அந்தச் செயல்கள் மூலம் உங்கள் மீது குத்தப்படும் அபத்தமான மதவாத முத்திரைகளைப் பொருட்படுத்தாது. நான் தங்கள் எழுத்துக்களிலிருந்து இந்து ஞானம் குறித்த, குறிப்பாக வேதாந்தம் பற்றிய தெளிவை அடைந்திருக்கிறேன். தாங்கள் கீதை தொடரை எழுதிய போது அதைப் பரவசத்துடன் தொடர்ந்தவர்களில் நானும் ஒருவன். அதன் குறிப்பிடத்தக்க அம்சம் வாசகனுக்கான எவ்வித சமரசமுமின்றி கீதையை சாத்தியமுள்ள பல்வேறு கோணங்களிலிருந்து அலசியிருந்ததுதான். துவக்க நிலையிலுள்ள ஒரு சாதகனுக்கு அந்தக் கீதைத் தொடர் ஒருவேளை உவப்பை அளிக்காமல் போயிருக்கலாம். Continue reading

சிந்திப்பவர்களுக்கான சிறப்புவாசல்

சிந்திப்பவர்களுக்கான சிறப்புவாசல்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

Mahatma-Gandhi-Pandit-Kshitimohan-Sen

[காந்தியுடன் க்ஷிதிமோகன்சென்]

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நான் நித்ய சைதன்ய யதியின் குருகுலத்தில் ஆரோன் என்ற அமெரிக்க இளைஞரைப்பார்த்தேன். மெல்லிய உதடுகளும் சிவந்த தலைமுடியும் பச்சைக்கண்களும் இளங்கூனலும் கொண்ட அந்த இளைஞர் ஒரு ஊதாநிறக் குடையுடன் ஊட்டியில் தனித்து அலைந்துகொண்டிருந்தார். நித்யா நடக்கச்செல்லும்போது மட்டும் கூடவே செல்வார். அவரிடம் ஒருமுறை பேச நேர்ந்தது. அவர் நித்யாவைக் கண்டுகொண்ட தருணத்தைப்பற்றிச் சொன்னார் Continue reading

ஆத்மாவும் அறிவியலும்:ஒரு விவாதம்.1

ஆத்மாவும் அறிவியலும்: ஒரு விவாதம்.1

ஜெயமோகன்.இன்.ல் இருந்து

JJ%2520233

[அறம்  நூல் வெளியீட்டு விழாவின் போது ஓட்டல் அறையில் ஓர் உரையாடல்]

அன்புள்ள ஜெயமோகன்,

கீதை, சாங்கிய யோகம் குறித்த உங்கள் பதிவை படித்தேன். நீங்கள் செவ்வியல் நோக்கில் ஆத்மா குறித்த கேள்வியை அணுகுவதை நான் வரவேற்கிறேன். அந்தக் கட்டுரையில் நீங்கள் ஆத்மாவின் பொருளை விளக்க பல வழிகளை கையாள்கிறீர்கள். ஆனால் அறிவியல் சார்ந்த அணுகுமுறைகளைப்பற்றிய உங்கள் கருத்து முன் தீர்மானம் கொண்டதாக உள்ளது. அறிவியலின் விளக்கங்களை நீங்கள் மேலோட்டமாக விளக்குகிறீர்கள். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ  இந்து மத கோட்பாடுகளை பிற கோட்பாடுகளுக்கு மேலாக ஆதரித்து வாதிடுகிறீர்கள் என்று படுகிறது. உங்கள் கட்டுரை ஒரு விஷயத்தை தெளிவாகவே காட்டுகிறது. உங்களால் தத்துவ, ஆன்மீக கோணத்தில் விஷயங்களை விளக்க முடிகிறது, அறிவியல் சார்ந்து முடியவில்லை. Continue reading

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம் [ நிறைவுப்பகுதி]

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம் [ நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC_5583

[ஊட்டி இலக்கிய முகாம்]

இக்காரணத்தால் இந்து ஞானமரபில் உவமைகளை உவமிக்கப்படும் அக்கருத்தின் புற வடிவங்களாகவே கண்டு விவாதிக்கிறோம். இங்கு கீதை அளிக்கும் நான்கு உவமைகளையும் அவ்வாறே வாசகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கற்பனை மூலம் உவமையை விரித்து எடுக்கவேண்டும். கீதை 22 ஆம் பாடலில் ஆத்மா தன் உடல்களை கிழிந்த உடைகளை மாற்றுவது போல மாற்றிக் கொள்கிறது என்று கூறப்படுகிறது. மறுபிறப்புக் கோட்பாட்டின் அடிப்படை உவமையாக இன்றுவரை இது திகழ்ந்து வருகிறது. Continue reading

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-2

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-2

ஜெயமோகன்.இன் இல் இருந்து

DSC_5572

[ஊட்டி இலக்கிய முகாமில்]

பரத்தை கண்டறிதல்

புலனடக்கம் பற்றிய கீதையின் விளக்கத்தில் புலன்களை வெல்லும் வழி என்று கூறப்பட்டிருப்பது என்ன? பொதுவாக கீதை உரைகளில் ‘இறைவனை மையமாகக் கொண்டு மனதை குவித்தல்’ என்றே கூறப்படிருக்கும். கீதை பரம்பொருளால் கூறப்பட்ட வேதம் என்ற நம்பிக்கையில் இருந்து தொடங்கினால் அது இயல்பான ஒரு முடிவுதான். ஆனால் வேதாந்த நூலாக கீதையை எடுத்துக் கொணடால் அப்படிக் கூறமுடியாது.

கீதை 45 ஆம் பாடலில் முக்குணமயமான வேதங்களைத் தாண்டி நீ ‘ஆத்மவானாக’ இரு என்று கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். ஆத்மாவில் நிலைபெற்ற நோக்கு உடையவனை ‘ஸ்ருத பிரதிக்ஞன்’ என்கிறார். நிலைபேறு உடையவன் புலன்களை வெல்கிறான். தன் ‘ஆத்ம ஸ்வரூ ப’த்தை உணர்ந்து அதில் மனதின் நிலைநிறுத்தி அதனூடாக புலன்களை வெல்லுதலைப் பற்றியே கீதை பேசுகிறது என்பது தொடர்ந்துவரும் பாடல்களை கூர்ந்து வாசிப்பவர்களுக்குப் புரியும். கீதை 53ஆம்பாடலில் நேரடியாக இது கூறப்படுகிறது. ‘உன் அறிவு என்று ஆத்மாவில் உறுதி பெறுமோ அன்று நீ யோகம் அடைவாய்’ என்கிறார் கிருஷ்ணன். Continue reading