தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 4 [நிறைவுப்பகுதி]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[கும்பமேளா பயணத்தின்போது]
சாங்கிய-வேதாந்த இணைப்பு
இப்பகுதியில் உள்ள 28 ஆவது பாடலை சில பதிப்புகளில் சற்று எளிமையாக மொழியாக்கம் செய்திருப்பார்கள். அவியக்தாதீனி என்பதை ‘மாயையில் இருந்து உருவாவது’ என்றே நாம் வாசிக்க நேரும். ஆனால் ‘அவியக்தம்’ என்பது சாங்கிய சிந்தனையின் அடிப்படையான கோட்பாடாகும். நாம் காணும் இப்பிரபஞ்சமானது முழுமுதல் இயற்கை (ஆதிப்பிரகிருதி)யில் இருந்து உருவாகி வந்தது என்று சாங்கியம் கூறுகிறது. இந்த பிரபஞ்சமானது மூன்று அடிப்படைக் குணங்கள் உடையது. தமோகுணம், ரஜோ குணம், சத்வ குணம். இவற்றை முறையே நிலைக்கும் தன்மை, செயலூக்கத்தன்மை, சமநிலைத்தன்மை என்று விளக்கலாம். இக்குணங்களின் கோடானு கோடி இணைவுகள் மூலமே பிரபஞ்சத்தின் எண்ணற்ற வடிவங்கள் முடிவின்மை வரை உருவாகி விரிந்துள்ளன என்பது சாங்கியங்களில் கூற்றாகும். Continue reading









