கீதை எதற்காக?
ஜெயமோகன்.இன் இல் இருந்து தொகுத்தது
[ஊட்டி இலக்கிய சந்திப்பில் வாசக நண்பர்கள்]
கீதையை ஏன் பயில வேண்டும்? ஒரு மதநூலாக அதைப் பயின்றாக வேண்டிய கட்டாயம் இந்துவுக்கு சற்றும் இல்லை. இந்துமதம் அப்படி எந்தக் கட்டாயத்தையும் விதிக்கவில்லை. வழிபாட்டு நூலகவும் அது இன்றியமையாதது அல்ல. வேதங்கள், திருமுறைகள், திருவாய்மொழிகள் போன்றவையே அவ்வகையில் முக்கியமானவை.
கீதை ஒரு தத்துவ நூல், ஞான நூல் என்ற இருவகையிலும்தான் அதை வாசிக்க வேண்டிய தேவை எழுகிறது. இந்திய தத்துவமரபை கற்க விரும்புகிறவர்களுக்கு அது தவிர்க்க இயலாத நூலாகும். இந்து மெய்ஞான மரபை அறிய விரும்புகிறவர்களுக்கும் அது இன்றியமையாதது. இந்து மரபு சார்ந்து ஞானத்தேடலில் இருப்பவர்களுக்கு அது முக்கியமான முதல்நூல்.









