கீதை அறிவுலகில்

கீதை அறிவுலகில்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[நாராயணகுருகுலம், பெர்ன் ஹில், ஊட்டி]

இந்து ஞான மரபு என்றால் என்ன?

1.வேதங்கள்,

2.ஆறுமதங்கள் (சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், காணபத்தியம், செளரம்)

3.ஆறுதரிசனங்கள் (சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வமீமாம்சம், உத்தரமீமாம்சம் அல்லது வேதாந்தம்)

4 முத்தத்துவங்கள் (உபநிடதங்கள், கீதை, பிரம்ம சூத்ரம்)

இது நெடுங்காலமாக இருந்துவரும் வைப்புமுறையாகும். இதில் வேதாந்தத்திற்கு பல மூலநூல்கள் இருந்தாலும் முதல்நூல் பிரம்ம சூத்திரம்தான். உபநிடதங்களும் கீதையும்கூட வேதாந்த நூல்களே. அப்படிப்பார்க்கும்போது இந்து ஞான மரபில் வேதாந்தம் மேலதிக அழுத்தம் தரப்பட்டுள்ளதாகத் தோன்றும். அது உண்மையல்ல என்று என்னுடைய ஐயத்திற்குப் பதிலாக நித்ய சைதன்ய யதி கூறினார். இந்நூல்களை வேதாந்த தரிசனமாகப் பயில்வது ஒரு தளம். தூய தத்துவ நூல்களாக மேலதிகமாகப் பயிலவேண்டும் என்பதே மரபின் உட்கிடையாகும். அதாவது இவற்றை ஒரு மதத்துடனும் தரிசனத்துடனும் தொடர்புபடுத்தாமல் தத்துவத்திற்குரிய வழிமுறைகளை மட்டும் கையாண்டு ஆராயவேண்டும். ஆகவேதான் வைணவ நூலான கீதைக்கு இந்திய ஞானமரபின் எல்லா தளங்களிலும் முக்கியத்துவம் உருவாயிற்று. Continue reading

கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 3 [நிறைவுப்பகுதி]

கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 3 [நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[திருச்செந்தூர் கோயில் ஓவியம்]

இந்தத் தளத்தில் நின்றபடித்தான் அர்ஜுனனின் அந்த உரையாடல் மொத்தத்தையும் நாம் பார்க்கவேண்டும். தன் நெருக்கமானவர்களைப் பட்டியலிடும் அர்ஜுனன் குருக்கள், பிதாமகர்கள் என்று அவற்றின் படிநிலையையே சொல்கிறான். அதாவது அவன் தெளிவாக வரையறை செய்யப்பட்ட ஒரு எல்லைக்குள் இருக்கிறான். மானுட நீதியின் எல்லை என்று விரிவாக அதைக் கூறலாம். இன்னும் குறிப்பாக குலநீதியின் எல்லை என்றும் கூறலாம். இதையொட்டியே ‘குலக்கலப்பு’ குறித்த அவனுடைய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை நாம் காணலாம். Continue reading

கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 1

கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[திருச்செந்தூர் கோயில் ஓவியம்]

1. ‘அறநிலமாம் குருநிலத்தில்
போருக்கு முனைந்து
வந்துள்ள
என்னவரும் பாண்டவரும்
என்ன செய்கின்றனர் சஞ்சயா?’

2.என்று கேட்ட திருதராஷ்ட்ரனிடம்
சஞ்சயன் சொன்னான்,
‘அதோ மன்னனாகிய துரியோதனன்
அணிவகுத்து நிற்கும்
பாண்டவப் படையைக் கண்டு
துரோணரை நெருங்கி
பேசலுற்றான்.’
Continue reading

கலாச்சார இந்து

கலாச்சார இந்து

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[ஒரான் பாமுக்]

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது  தர்க்க புத்திதான்.

ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் உண்டு. கும்பிடும் வேளை ஒரு மன அமைதி கிடைத்தாலும், நீ பெறுவது ஒரு போலிப் பாதுகாப்பு உணர்வுதான் என்று எனது தர்க்க மனது விழித்துக்கொள்ளும்.எனது உறவினர்களின், தெரிந்தவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக அவதானித்த வரை அவர்கள் மலைபோல் சந்தித்த துன்பங்களை எல்லாம் கடவுள் நம்பிக்கை கொண்டு இலகுவாக கடந்துவந்திருப்பதனை அறிவதனால் கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற இரு முனைவுகளுக்கு அப்பால் இறை நம்பிக்கை தனிமனிதனைப் பொறுத்தவரை பயனுடையது என்றே எண்ணுகின்றேன். Continue reading

இந்துமதமும் தரப்படுத்தலும்

இந்துமதமும் தரப்படுத்தலும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கான பாராட்டுவிழா நிகழ்ச்சியின் போது நண்பர்களுடன். சென்னை]

ஆங்கிலம் என்ற திமிங்கலம் மற்ற உலகமொழிகளை விழுங்கிவருவதுபோல, பெருமதங்கள் உலகத்தின் அனைத்து பழங்குடிமதங்களையும் ஞானமார்க்கங்களையும் விழுங்கிவிட்டால்? இது இயற்கையான நிகழ்வாகுமா? விழுங்கப்பட்ட மதங்களின் ஆன்மீக தத்துவ ஞான தரிசனங்கள் என்னாவது? Continue reading

உருவரு

உருவரு

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[சிக்கிம். வட கிழக்கு  பயணத்தின் போது]

அன்புக்குரிய எழுத்தாளருக்கு,

வணக்கம் அண்ணா.கருத்து முரண்பாடுகள் சில இருந்தபோதும் உங்களை துபாயில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது.இன்னும் பலமணிநேரங்கள்,பலநாள்கள் உரையாடவேண்டிய அளவிற்கு விடயங்கள் இருப்பினும் கிடைத்தவரைத் திருப்தியே.

செமிட்டிக் மதங்களுக்கும் இந்துமதத்திற்கும் இடையிலான முக்கிய முரண்பாடுகளில் ஒன்றாக பொதுவெளியில் வைக்கப்படும் கருத்து உருவ வழிபாடு பற்றியது.ஆயினும் செமிட்டிக் மதங்களின் மூலநூல்களில் நான் வாசித்தவரை இறைவனுக்கு உருவத்தை கூறுகின்ற வசனங்கள் காணப்படுகின்றன.அம்மதங்களின் கருத்தை சுருக்கமாக கூறுவதானால் இறைவன் தனது அரசில்(பௌதிகமாக) இருக்கிறார்.அவருக்குப்பதிலாக விக்கிரகங்களை வழிபடுவது குற்றமாகும். Continue reading

உருவம்

உருவம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[ஹூக்ளி நதி. வடகிழக்கு பயணத்தின் போது ]

அன்புள்ள ஜெ,

நான் எட்டு வருடங்களுக்கு முன்பு என் தந்தையாரிடம் இருந்து சிவதீக்கை பெற்றுக்கொண்டேன். ஆனால் இப்போதெல்லாம் என்னால் மனம் ஒன்றி பூஜைசெய்ய முடியவில்லை. என் மனம் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. என்னுடன் நான் கொண்டுபோகும் சிவலிங்கங்களை புனிதமானவையாக என்னால் நினைக்க முடிவதில்லை. ஆகவே பூஜைகள் சலிப்பை தருகின்றன. வீட்டில் இருக்கும்போது மட்டும் பூஜைசெய்வேன். மற்ற நேரங்களில் செய்வதில்லை. கடவுளுக்கு உருவம் உண்டா என்ன? இந்தமாதிரி ஒரு உருவத்தில் கடவுளை கற்பித்துக்கொண்டு வழிபடுவதனால் என்ன பயன்? இவையெல்லாம் பண்படாத காட்டுமிராண்டிக்கால வழக்கங்கள் அல்லவா? இந்து மதத்தில் உள்ள இந்த உருவ வழிபாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? எனக்கு இந்தமாதிரி உருவங்களை கும்பிடுபவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்ற எண்ணம் சமீபகாலமாக உருவாகி வருகிறது, ஆகவேதான் இந்த கடிதத்தை எழுதினேன்.

சிவக்குமார் பொன்னம்பலம் Continue reading

ஈஸோவாஸ்யம்- முன்னுரை

ஈஸோவாஸ்யம்- முன்னுரை

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

சமீபத்தில் என் நண்பரான ஜடாயு ஈசாவாஸ்ய உபநிடதத்தைத் தமிழாக்கம் செய்து தமிழ்ஹிந்து என்ற தளத்திலே வெளியிட்டார். அதற்கு வந்த எதிர்வினைகளில் ஒன்றில் இப்படி ஒரு கேள்வி இருந்தது.

’உபநிடதங்கள் பிரம்மா வித்யை என்று அழைக்கப்பட்டன. பிரம்மத்தைத் தேடுபவர்களே கூட முறையாக ஆன்மீகக் கல்வியில் தேர்ச்சி பெற்று, அதிகாரம் பெற்றுத்தான் அணுக முடிந்தது என்று தெரிகிறது. எப்படியாயினும் உபநிடதங்கள் – வேதத்தின் கருத்து முடிவாக, இறுதி உண்மையாகக் கருதப்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை.

…அதனை நாடி வருகிற ஒருவனை இவ்வாறு ’பிறர் பொருளை விரும்பற்க’ (வடமொழியில் ’மா கஸ்யஸ்வித் தனம்’) என்று கூறுவது ஏன்? பிறர் பொருளுக்கு ஆசைப் படுபவன் உலகியலைத் துறந்து பிரம்மத்தைத் தேடுவானா? பிரம்மத்தை அடைவதே குறிக்கோளாக கொண்டு வருபவனிடம் திருடாதே என்று சொல்வதே கூட ஒரு இன்சல்ட் இல்லையா? இதற்கு இன்னும் வேறு அர்த்தம் ஏதும் இருக்கிறதா?’

[குரு நித்ய சைதன்ய யதி] Continue reading

நாராயணகுருவின் தத்துவம்

நாராயணகுருவின் தத்துவம்

ஜெயமோகன்.இன்  ல் இருந்து தொகுத்தது

[Copyright:Thinnai.com ]

[நாராயணகுரு]

தமிழ்ச் சூழலில் நாராயணகுருவின் செய்தியை புரிந்துகொள்ள சிரமங்கள் உள்ளன. இங்கே ஓர் எதிர்மறையான சிந்தனைப்போக்கு மிக வலுவாக வேரூன்றியுள்ளது. மரபையே நிராகரிக்கும் போக்காக அது மாறியுள்ளது . மேலும் மிக எளிமைப்படுத்தபட்ட ஒரு இரட்டைஎதிர்மை [binary opposition] கற்பிதம் செய்யப்பட்டுள்ளது . ஆரிய X திராவிட வாதம் , உயர் சாதி X கீழ்சாதி வாதம் , ஆதிக்கப்போக்கு X அடிமைப்படுத்தப்பட்ட போக்கு என்றெல்லாம் அப்பிரிவினை தொடர்ந்து செய்யப்படுகிறது . அந்த இரட்டைஎதிர்மைத்தன்மை தமிழ்ப்பண்பாட்டாய்வில் வெள்ளையர்களால் [உதாரணமாக கால்டுவெல்] அக்கால மேற்கத்திய சிந்தனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது . அது அன்றைய மேற்கத்திய சிந்தனையின் சாரமாக காணப்பட்டமையால் அவ்வாறு உருவாக்கப்பட்டமை இயல்பானதேயாகும் . அப்போக்கு மார்க்ஸியத்துடனும் ஒத்துப்போனதனால் அது வலுவாக நம் சிந்தனையில் வேரூன்றி அதுவே ஒரே சிந்தனைமுறை என கருதப் படுகிறது .நாராயணகுருவை புரிந்துகொள்ள மிகுந்த தடையாக அமைவது அதுவே. உண்மையில் நாராயண குருவின் பிரதான சீடர்கள் சிலர் கூட அவ்வடிப்படையில் நாராயணகுருவை மறுத்தனர் . முக்கியமாக சகோதரன் அய்யப்பன். Continue reading

வைசேஷிகமும் பெளதீகவாதமும்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

வைசேஷிகமும் பெளதீகவாதமும்

[கோதாவரிப் பயணத்தின் போது]

வைசேஷிகம் ஒரு ஆதி பெளதிகவாத ஞானதரிசனம் என்று ஏன் கூறுகிறோம்? ஒரு வரியில் இதை வகுத்துக் கூறிவிடலாம். எந்த பெளதிகவாத மரபினையும் போல வைசேஷிகமும் பருப்பொருளையே பிரபஞ்சத்தின் ஆதியாகக் காண்கிறது. இந்த அடிப்படையிலிருந்து அது பெரும்பாலும் தடம் மாறவில்லை. Continue reading