செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.3 [நிறைவுப்பகுதி]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[கங்கை]
ஆத்மாவும் பிற மதங்களும்
ஆத்மா குறித்த சாக்ரடீஸ் கூறியவற்றுடன் கீதையை இதற்குள் வாசகர்கள் ஒப்பிட்டிருப்பார்கள். கிரேக்க மரபில் மேலும் பற்பல உருவகங்களும் விவாதங்களும் உள்ளன. இந்து ஞானமரபு போலவே தொன்மையும் ஆழமும் உடைய கிரேக்க மரபில்தான் இவ்வாறு ஒப்பிடத்தக்க கருத்துக்கள் உள்ளன. செமிட்டிக் அல்லது ஆபிரகாமிய மதங்களில் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) எளிமையான நேரடியான உருவகமே காணப்படுகிறது. மனித உடலுக்குள் பிரக்ஞை வடிவில் இருப்பது ஆத்மா. இது பாவத்தின் காரணமாக உடலில் குடியேறுகிறது. இறைவனுக்கு நேர் எதிரான தீய சக்தியான சாத்தானின் தூண்டுதலால் பாவங்கள் செய்கிறது. உடலை நீத்தபின் நியாயத் தீர்ப்பு நாளுக்காக காத்திருந்து அந்த நாளில் தன் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவனால் நரகமோ சொற்கமோ அளிக்கப்பட்டு அங்கு செல்கிறது என்பது யூத, கிறிஸ்தவ மதத்தின் கருத்து. Continue reading









