நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!
ஜெயமோகன்.இன் ல் இருந்து
சிலநாட்களுக்கு முன்னர் திருவையாறு ஐயாறப்பன் ஆலயத்தில் சென்றுகோண்டிருந்தபோது வழிபாட்டுணர்வுடன் சென்றுகோண்டிருந்த மக்களைப் பார்த்துவிட்டு மலையாள இலக்கியத்திறனாய்வாளர் கல்பற்றா நாராயணன் என்னிடம் சொன்னார் ”பக்தியில் மட்டும்தான் ஒரு சிறப்பு உள்ளது, அதில் மூழ்கி மூழ்கிச் செல்வதற்கான இடம் இருக்கிறது”
நான் சொன்னேன் ”பக்தி என்பது உண்மையில் ஒற்றைப்படையான ஓர் உணர்வே…பக்தியை இந்திய பக்தி இயக்கங்கள்தான் மூழ்கிச்செல்லவேண்டிய கடலாக மாற்றின. பக்தியை முழு வாழ்க்கையளவுக்கே பெரிதாக்கிக் கொண்டன அவை. பக்தியில் வாழ்க்கையின் எல்லா கூறுகளையும் கொண்டுவந்துசேர்த்துக் கொண்டன. நம்முடைய பக்தியில் தத்துவம் இருக்கிறது, இலக்கியமும் இசையும் இருக்கிறது. எல்லா கலைகளும் பக்தியே. சுவையான சமையல், கட்டிடக்கலை ஆகியவையும் பக்தி சார்ந்தவையே. நம்முடைய களியாட்டங்கள் கொண்டாடங்கள் ஆகியவையும் பக்திசார்ந்தவையே. நம் வாழ்க்கையில் பக்தி ஊடுருவாத எந்த வெற்றிடமும் இல்லை என்ற நிலையை உருவாக்கினார்கள் முன்னோர்” Continue reading







