கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 4

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 4

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கோதாவரி]

கீதை ஏன் மக்களை பகுக்கிறது?

கீதை ஒட்டுமொத்த மானுடகுலத்துக்கும்,காலமுழுமைக்கும், பொருந்தக்கூடிய ஒரே மாறா வழிமுறையைச் சுட்டும் மதநூல் அல்ல. அது பிரபஞ்சத்தையும், வாழ்க்கையையும், மனிதர்களையும் விளக்க முயலும் தத்துவநூல். மனிதர்கள் தங்கள் இயல்பிலேயே பன்மைத்தன்மை கொண்டவர்கள் என்பதும், எந்த ஒரு விஷயமும் ஒருவருக்கு சரியாக இருப்பது பிறருக்கு சரியாக இருக்காது என்பதும் இந்துஞான மரபின் எல்லா கிளைகளுக்கும் எல்லா அறிவியல் கோட்பாடுகளுக்கும் பொதுவாக உள்ள கருத்து. ஆகவே எல்லா தளத்திலும் பன்மைத்தன்மையை வலியுறுத்துவதும் எல்லா கூறுகளையும் பொதுவாக உள்ளடக்க முயல்வதும் இந்துஞானமரபின் எல்லா சிந்தனைகளிலும் காணப்படும் அம்சமாகும். கீதை மட்டுமல்ல பிரம்மசூத்திரமும் உபநிடதங்களும் கூட அப்படித்தான். ‘எல்லா ஆறுகளும் கடலையே சேர்கின்றன எல்லா அறிதல்களும் பிரம்மத்தை ‘ என்ற சாந்தோக்ய உபநிடத தரிசனம் நாம் அறிந்ததே Continue reading

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 3

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 3

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கோதைக்கரை]

கீதையை இப்போது படிப்பது எப்படி ?

தொடர்ந்து என் வாசகர்களில் ஒரு சாரார் கீதையை படிக்க ஆரம்பித்து ஐயங்களை எனக்கு எழுதுவதுண்டு என்பதனால் அவற்றிலிருந்து நான் உருவாக்கிய ஒரு பொதுவான வாசிப்புமுறைமையைச் சொல்கிறேன். கீதை பலவாறாக பல நோக்கில் விளக்கப்பட்டுவரும் நூல். அதற்கான இடம் அதில் உள்ளது. காரணம் அது ஒரு தத்துவநூல். விவாதத்துக்கு உரியது. உங்கள் வாழ்க்கைநோக்கில் ஆராய்வதற்குரியது. ஆகவே ஏதேனும் ஓர் உரையை நம்பி வாசிப்பது தவறானதாக ஆகக் கூடும். உதாரணமாக ஜெயதயால் கோயிந்தகா வின் கொரக்பூர் உரை மிக மிக வைதிக, சாதிய நோக்கு கொண்ட ஒன்று. அதை நான் நிராகரிக்கிறேன். ஹரே ராம ஹரே கிருஷ்ண இயக்கத்தின் நிறுவனரான பிரபுபாதரின் உரை கீதையை ஒரு மூலநூலாக, கிட்டத்தட்ட பைபிள் போல மேலைநாட்டு ருசிக்காக விளக்க முயல்வது. அவரை ஒரு ஞானி என்றே எண்ணுகிறேன். ஆனால் அவரது உரை எனக்கு ஏற்புடையது அல்ல. வைணவ அறிஞர்களில் பலரும் கீதையை வெறும்பக்தியை சரணாகதியைச் சொல்லும் நூல் என்று விளக்குவதுண்டு. அதுவும் எனக்கு ஏற்புடையதல. Continue reading

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 2

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கோதை]

மூலநூல் இன்றியமையாத ஒன்றா? எதற்காக மூலநூல்கள் தேவைப்படுகின்றன?

உலகில் வாழ்பவர்களில் மிகச்சிலர் தவிர வாழ முயல்பவர்களே ஒழிய வாழ்வை அறிய முயல்பவர்களல்ல என்பதை நாம் அறிவோம். பெரும்பாலானவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை ஏற்கனவே உருவாகி திடம் கொண்டுள்ள பாதையில் நடத்திச்செல்லவே விருப்பம். அதுதான் அவர்களால் முடியும். தங்கள் செயல்களைப் பற்றி சிந்திப்பதோ அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதோ அவர்களால் இயலாது. அத்தகையோருக்கு திட்டவட்டமான பாதையைக் காட்டும் மூலநூல்கள் தேவையே. இது சரி -இது பிழை, இப்படிச்செய்க என்ற ஆணைகள் மட்டுமே அவர்களுக்கு குழப்பமில்லாமல் வழிகாட்டும். சொற்கமும் நரகமும் பாவபுண்ணியங்களும் சேர்ந்துதான் அவர்களை நடத்த இயலும். Continue reading

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 1

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கோதையில்…]

அன்புள்ள ஜெயமோகன்,

 பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா ? என்னைப்போன்றவர்களுக்கு இந்தவகையான சர்ச்சைகள் மிக்க குழப்பத்தை அளிக்கின்றன. கீதையைப்பற்றி இப்போது தமிழில் மிகவும் எதிர்மறையான பார்வையை அளிக்கும் நூல்கள் பல வந்துள்ளன. அவற்றைப்படித்துவிட்டுச் சிலர் ஏளனமும் கண்டனமும் செய்கிறார்கள். பகவத் கீதை உரைகளில் அதற்கான பதில் உண்டா ? அவற்றில் எது சிறப்பானது ? எப்படி அவற்றைப் படிப்பது ? வழிமுறைகள் என்னென்ன ? உங்கள் பதில் எனக்கு தனிப்பட்டமுறையில் உதவியாக இருக்கும் என்று படுகிறது. ‘இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் ‘ தெளிவான மொழியில் திட்டவட்டமான பார்வையை அளிப்பதாக இருந்தது, அதேபோல விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.

எஸ். விவேகானந்தன் Continue reading

துவைதம்

துவைதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[நண்பர் வேல்முருகன் இல்லம். பாஸ்டன்]

அன்புள்ள ஜெ,

உங்கள் கீதை உரைகளில் சங்கரர் ராமானுஜர் மத்வர் ஆகிய மூவருடைய உரைகளையும் குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் அளிக்கும் முக்கியத்துவமும் அவ்வரிசையிலேயே உள்ளது. சொல்லப்போனால் மத்வாச்சாரியாரைப்பற்றி கொஞ்சம் மேம்போக்காக சொல்லிச் செல்வதாகவே தெரிகிறது. என் அலுவலகத்தில் இருநண்பர்கள் உடுப்பியைச் சேர்ந்த மாத்வ பிராமணர்கள். அவர்களுடன் நான் உடுப்பி மடங்களுக்கும் சென்றிருக்கிறேன். அவர்கள் மத்வர் ஆத்மாவும் பிரம்மமும் வேறுவேறுதான் என்பதை நிலைநாட்டுவதற்காக உருவாக்கிய தத்துவக்கருவிகள் மற்ற வேதாந்தங்களில் இல்லை என்றும் மத்வர் வெறும் பக்திப்பிரச்சாரகர் அல்ல அவர் மாபெரும் தத்துவ ஞானி என்றும் சொல்கிறார்கள். பிற இரு தரிசனங்களைப்பற்றியும் நீங்கள் எழுதிய கடிதங்களை அவர்களுக்கு வாசித்துக்காட்டினேன். அதனடிப்படையில் இந்த பேச்சு நிகழ்ந்தது. மத்வ வேதாந்தத்தை எப்படி சுருக்குவீர்கள் என்று அறிய ஆசைப்படுகிறேன் [ஆங்கிலக் கடிதத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்]

ஆர்.வெள்ளியங்கிரி Continue reading

கலாச்சார இந்து

கலாச்சார இந்து

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[ஒரான் பாமுக்]

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது  தர்க்க புத்திதான்.

ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் உண்டு. கும்பிடும் வேளை ஒரு மன அமைதி கிடைத்தாலும், நீ பெறுவது ஒரு போலிப் பாதுகாப்பு உணர்வுதான் என்று எனது தர்க்க மனது விழித்துக்கொள்ளும்.எனது உறவினர்களின், தெரிந்தவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக அவதானித்த வரை அவர்கள் மலைபோல் சந்தித்த துன்பங்களை எல்லாம் கடவுள் நம்பிக்கை கொண்டு இலகுவாக கடந்துவந்திருப்பதனை அறிவதனால் கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற இரு முனைவுகளுக்கு அப்பால் இறை நம்பிக்கை தனிமனிதனைப் பொறுத்தவரை பயனுடையது என்றே எண்ணுகின்றேன். Continue reading

இந்துமதமும் தரப்படுத்தலும்

இந்துமதமும் தரப்படுத்தலும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கான பாராட்டுவிழா நிகழ்ச்சியின் போது நண்பர்களுடன். சென்னை]

ஆங்கிலம் என்ற திமிங்கலம் மற்ற உலகமொழிகளை விழுங்கிவருவதுபோல, பெருமதங்கள் உலகத்தின் அனைத்து பழங்குடிமதங்களையும் ஞானமார்க்கங்களையும் விழுங்கிவிட்டால்? இது இயற்கையான நிகழ்வாகுமா? விழுங்கப்பட்ட மதங்களின் ஆன்மீக தத்துவ ஞான தரிசனங்கள் என்னாவது? Continue reading

உருவரு

உருவரு

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[சிக்கிம். வட கிழக்கு  பயணத்தின் போது]

அன்புக்குரிய எழுத்தாளருக்கு,

வணக்கம் அண்ணா.கருத்து முரண்பாடுகள் சில இருந்தபோதும் உங்களை துபாயில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது.இன்னும் பலமணிநேரங்கள்,பலநாள்கள் உரையாடவேண்டிய அளவிற்கு விடயங்கள் இருப்பினும் கிடைத்தவரைத் திருப்தியே.

செமிட்டிக் மதங்களுக்கும் இந்துமதத்திற்கும் இடையிலான முக்கிய முரண்பாடுகளில் ஒன்றாக பொதுவெளியில் வைக்கப்படும் கருத்து உருவ வழிபாடு பற்றியது.ஆயினும் செமிட்டிக் மதங்களின் மூலநூல்களில் நான் வாசித்தவரை இறைவனுக்கு உருவத்தை கூறுகின்ற வசனங்கள் காணப்படுகின்றன.அம்மதங்களின் கருத்தை சுருக்கமாக கூறுவதானால் இறைவன் தனது அரசில்(பௌதிகமாக) இருக்கிறார்.அவருக்குப்பதிலாக விக்கிரகங்களை வழிபடுவது குற்றமாகும். Continue reading

உருவம்

உருவம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[ஹூக்ளி நதி. வடகிழக்கு பயணத்தின் போது ]

அன்புள்ள ஜெ,

நான் எட்டு வருடங்களுக்கு முன்பு என் தந்தையாரிடம் இருந்து சிவதீக்கை பெற்றுக்கொண்டேன். ஆனால் இப்போதெல்லாம் என்னால் மனம் ஒன்றி பூஜைசெய்ய முடியவில்லை. என் மனம் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. என்னுடன் நான் கொண்டுபோகும் சிவலிங்கங்களை புனிதமானவையாக என்னால் நினைக்க முடிவதில்லை. ஆகவே பூஜைகள் சலிப்பை தருகின்றன. வீட்டில் இருக்கும்போது மட்டும் பூஜைசெய்வேன். மற்ற நேரங்களில் செய்வதில்லை. கடவுளுக்கு உருவம் உண்டா என்ன? இந்தமாதிரி ஒரு உருவத்தில் கடவுளை கற்பித்துக்கொண்டு வழிபடுவதனால் என்ன பயன்? இவையெல்லாம் பண்படாத காட்டுமிராண்டிக்கால வழக்கங்கள் அல்லவா? இந்து மதத்தில் உள்ள இந்த உருவ வழிபாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? எனக்கு இந்தமாதிரி உருவங்களை கும்பிடுபவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்ற எண்ணம் சமீபகாலமாக உருவாகி வருகிறது, ஆகவேதான் இந்த கடிதத்தை எழுதினேன்.

சிவக்குமார் பொன்னம்பலம் Continue reading

ஈஸோவாஸ்யம்- முன்னுரை

ஈஸோவாஸ்யம்- முன்னுரை

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

சமீபத்தில் என் நண்பரான ஜடாயு ஈசாவாஸ்ய உபநிடதத்தைத் தமிழாக்கம் செய்து தமிழ்ஹிந்து என்ற தளத்திலே வெளியிட்டார். அதற்கு வந்த எதிர்வினைகளில் ஒன்றில் இப்படி ஒரு கேள்வி இருந்தது.

’உபநிடதங்கள் பிரம்மா வித்யை என்று அழைக்கப்பட்டன. பிரம்மத்தைத் தேடுபவர்களே கூட முறையாக ஆன்மீகக் கல்வியில் தேர்ச்சி பெற்று, அதிகாரம் பெற்றுத்தான் அணுக முடிந்தது என்று தெரிகிறது. எப்படியாயினும் உபநிடதங்கள் – வேதத்தின் கருத்து முடிவாக, இறுதி உண்மையாகக் கருதப்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை.

…அதனை நாடி வருகிற ஒருவனை இவ்வாறு ’பிறர் பொருளை விரும்பற்க’ (வடமொழியில் ’மா கஸ்யஸ்வித் தனம்’) என்று கூறுவது ஏன்? பிறர் பொருளுக்கு ஆசைப் படுபவன் உலகியலைத் துறந்து பிரம்மத்தைத் தேடுவானா? பிரம்மத்தை அடைவதே குறிக்கோளாக கொண்டு வருபவனிடம் திருடாதே என்று சொல்வதே கூட ஒரு இன்சல்ட் இல்லையா? இதற்கு இன்னும் வேறு அர்த்தம் ஏதும் இருக்கிறதா?’

[குரு நித்ய சைதன்ய யதி] Continue reading