அம்பேத்கரின் தம்மம்- 1
ஜெயமோகன்.காம் ல் இருந்து

புத்தகங்களைப் பூஜையறையில் வைத்து வாசிப்பதற்காக ஒரு ஸ்டேண்ட் உண்டு. கத்திரி போன்ற வடிவில் இருக்கும். அதற்கு எங்களூரில் கிரந்தகாவடி என்று பெயர். பெரும்பாலான குமரிமாவட்டப் பழங்கால வீடுகளில் அது சந்தன மரத்தில் செய்யப்பட்டிருக்கும். நான் சிறுவயதாக இருக்கும்போது அப்படி ஒரு ஸ்டேண்டை எடுத்துக்கொண்டு வந்து அதில் வைத்து அலக்ஸ்டாண்டர் டூமாவின் த்ரீ மஸ்கிட்டீர்ஸ் என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். கனமான நூல். அதாவது பக்க அளவில்.
ஜோதிடரான என் பெரியப்பா அங்கே வந்தார். ‘அது என்ன நூல்?’ என்று கேட்டார். சொன்னேன். கடும் கோபத்துடன் ‘அதற்கு எதற்காக கிரந்த காவடி? எடுத்துக் கொண்டுபோ அந்த புத்தகத்தை’ என்று கத்தினார். நான் நடுங்கிப்போனேன். கொஞ்சநேரம் கழித்து சாந்தமாகி ஒருவாய் வெற்றிலை போட்டுத் துப்பியபின் அவர் விளக்கினார். ஒரு நூலுக்கு கிரந்தகாவடி வைப்பது என்பது ஒரு பெரிய கௌரவம். அதை எல்லா நூல்களுக்கும் கொடுக்கக்கூடாது. Continue reading



