குருகுலமும் கல்வியும் – 2
ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[குரு நித்யா காவிய முகாமின் போது வாசக நண்பர்களுடன்.
நாராயணகுருகுலம், பெர்ன் ஹில், ஊட்டி ]
இரண்டு
நம் சமகால இந்தியாவில் தொடர்ச்சியாக நான்காவது தலைமுறையை எட்டியிருக்கும் ஒரு தத்துவ சிந்தனை மரபு என்று நாராயணகுருவின் சீடபாம்பரையைச் சொல்லலாம். தமிழ் சித்தர் மரபு இந்திய நவீனமயமாதலுக்கு அளித்த பங்களிப்புகள் என்று நாராயணகுரு , ராமலிங்க வள்ளலார் இருவரையும் கூற இயலும். கேரளத்தில் 1854 ல் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் கள் இறக்கும் ஈழவர் என்னும் சாதியில் பிறந்தவர் நாராயணகுரு. தந்தை மாடன் ஆசான். தாய் குட்டியம்மா. அச்சாதி அன்று தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டது. சிறுவயதிலேயே தமிழ் கற்று நூல்களை வாசிக்க ஆரம்பித்த நாராயணகுரு அன்று திருவனந்தபுரம் சாலைத்தெருவில் இருந்த தைக்காடு அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். பின்னர் இருபத்து மூன்றாம் வயதில் ஊரைவிட்டு கிளம்பி துறவு பூண்டு தமிழகத்தில் அலைந்தார். இக்காலகட்டத்தில் பல சித்தர்களை இவர் கண்டதாக ஊகிக்க முடிகிறது. பிற்காலத்தில் கேரள அறிவுத்துறையின் தலைமைப்பேரறிஞராக நாராயணகுருவை நிலைநாட்டிய சாஸ்திரக்கல்வி இக்கலத்தில் அவர் பெற்றதேயாகும். வேதங்கள் , உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மதங்கள், பௌத்த சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள் ஆகியவற்றில் நிகரற்ற கல்வி அவருக்கு இருந்தது. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பெரும்புலமை பெற்றார். Continue reading →