அயன் ராண்ட் 2 [தொடர்ச்சி]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
பத்துவருடம் முன்பு உலகின் உயரமான கட்டுமானமாகக் கருதப்பட்ட டொரொண்டோவின் சி.என்.என் கோபுரத்துக்குச் சென்று வந்தபோது அ.முத்துலிங்கத்திடம் சொன்னேன், அது வானத்தை நோக்கி நீட்டப்பட்ட ஒரு முஷ்டி போல இருக்கிறது, அகங்காரமும் சவாலும் மட்டுமே தெரிகிறது, அது என்னை தொந்தரவு செய்கிறது என. ஆம்,கட்டிடங்களில் இருந்து அகங்காரத்தைப் பிரிக்க முடியாது. தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழனின் அகங்காரம்.ஆகவேதான் அவனது சொந்த மகனுக்கு அதைவிடப்பெரிய கோயில் ஒன்று தனக்கெனத் தேவைப்பட்டது. Continue reading









