எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தருக்கமே தரிசனம்: நியாயம்

[அருகர்கள் பாதை. இந்திய நெடும்பயணத்தின்போது பெல்காமில்]
நியாயம் என்ற வார்தை நம்முடைய அன்றாட வாழ்வில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒன்று. தருக்கப்பூர்வமானது, நீதிபூர்வமானது, சமனிலைப்படுத்தப்பட்டது, யுக்திக்கு உகந்தது என்ற அர்த்தங்களில் நாம் இச்சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்தி வருகிறோம். (நியாயமான பேச்சு, எல்லாவற்றுக்கும் நியாயம் வேண்டும், நியாயம் செய்வதாகும். நியாயவிலைக்கடை…)
இச்சொல் இந்து ஞானமரபின் ஆதி தரிசனங்களில் ஒன்றான ‘நியாய மரபில்’ இருந்து வந்ததாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல நியாய தரிசனமானது வைசேஷிக தரிசனத்தின் துணைத் தரிசனம். அடிப்படையில் வைசேஷிகத்தின் பிரபஞ்சப்பார்வையே நியாய மரபிலும் தொடர்கிறது. வைசேஷிகத் தரிசனங்களுக்குத் தருக்க அடிப்படையினை உருவாக்கித் தரும் ஒரு தருக்க சாஸ்திரமாகவே வெகு காலம் நியாயம் விளங்கி வந்திருக்கிறது. Continue reading →