விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம்

by Samrat Ashok

Scratches in my grey matter

கடந்த மூன்று மாதங்களாக விஷ்ணுபுரம் புதினத்தை படித்து வருகிறேன் . இன்று காலை அதை முடித்தேன் . ஒரு விதமான சோகம் என் மனதில் பரவியது . நான் தமிழ்ல் படித்த புதினங்களில் மிக முக்கியமான  ஒரு பதிவு என்றே கூற  வேண்டும் . இன்னும் சொல்ல போனால் ஆங்கிலத்தில் கூட இவ்வளவு  தேர்ச்சியான நூலை படித்தது  இல்லை . இந்த புத்தகம் விஷ்ணுபுரம் என்னும் ஒரு கற்பனை நகரத்தையும் அதன் மனிதர்களையும்  பற்றியது . அந்த நகரத்தின் வரலாற்றின் வாயிலாக ஜெயமோகன் இந்திய ஞான மரபின் பல்வேறு கருத்தகளை முன் வைக்கிறார் . இந்த புத்தகத்தின் அடி நாதமாக விளங்குவது மனிதர்களின் தேடல் . மனிதன் தன்னை  சுற்றி இருக்கும் இந்த பெருவெளியை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்கிறான் . இந்த அடிப்படையில் உண்டானதே பல்வேறு சிந்தனைகளும் / சித்தாந்தங்களும்  / மதங்களும் . இந்த முயற்சிகளால் அவன் இந்த அர்த்தமற்ற வாழ்கையின் வெறுமையை வெல்ல முயலுகிறான். அவனுடைய  ஆணவம் தன்னை இந்த பெருவெளியின் மைய கூராக என்ன வைக்கிறது  . அவன் சுற்றி வரும் ஒரு கூடத்தையே   இந்த உலகம் என எண்ணி கொள்கிறான் . அவனுடைய ஆணவம் கலையும்  பொழுதெல்லாம் அஞ்சி ஓடுகிறான் , ஆனால் வெறுமையே  அவனுக்கு  என்றும் எட்டுகிறது . ஞானத்தின்  தேடல் அவனை வேதனை உணர்வுடனே விட்டு விடு கிறது .

நம்மை சுற்றி இருக்கும் இந்த உலகம் ஆச்சர்யம் நிறைந்த ஒரு இடம் , அதை பற்றி நமக்கு எண்ணற்ற கேள்விகள்   மனதில் எழுந்த வண்ணம் உள்ளது . அதை தேடும் பொழுது அவன் மனதில் ஒரு பெரும் பிரளயம் வெடிக்கிறது . உலகத்தின் மீது உள்ள சுயம்   சார்ந்த கனவு கலைகிறது . அவன் தேடி செல்லும் ஞானம் ஒரு கானல் நீறு போல் கரைந்துவிடுகிறது . அவன் மனம் நிரந்தரமான  ஒரு  தவிப்பால் நிறைந்து இருக்கிறது .

இந்த புத்தகத்தின் கதை விஷ்ணுபுரத்தின் ஞான மரபை சுற்றி நடை பெறுகிறது  . விஷ்ணுபுரத்தின் தலைவன் தன்னுடைய தருக்க திறமையால் ஆளுகிறான் . அவனுடைய சித்தாந்தம் பிரபஞ்சத்தின் தோற்றத்தை பற்றியும் , அதன் தோற்றத்தின் காரணத்தையும் விளக்கவேண்டும்  .

இந்த  நகரம் தொடர்ந்து உருவாக்கவும் / அழிக்கவும் படுகின்றது . அந்த நகரம் காலத்தின் போக்கில் பல்வேறு தர்மங்களால் ஆள படுகிறது .  புத்தகத்தில் பல்வேறு  புனைகதைகள் உள்ளன , அவை அங்கு வாழும் மனிதர்களின் நம்பிக்கைவாயிலாக பல்வேறு சித்தாந்தங்களை ஆராய்கின்றன . இந்த கதை ஒரு விதமான non-linear  முறையில் எழுதப்பட்டு இருக்கிறது . இந்த கதையை படிக்கும் பொழுது , காலம் ஒரு சக்கரம் போல் திரும்பி வருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது . கதை ஒரு பிரளயத்தில் முடிகிறது , கதையின் போக்கில் விஷ்ணுபுரம் ஒரு செழிப்பான நகரமாக  இருந்து அழிவில் போய் முடிகிறது . பிரளயத்தின் பொழுது விஷ்ணு திரும்பி படுக்கிறார் என்றும்  , அப்பொழுது மறுபடியும் பஞ்ச பூதங்களும் , உயிர்களும் தோன்றுகின்றன . மனிதனின் ஞான தேடலும் அவன் வளர்ச்சியும் மறுபடியும் தொடர்வதாக கதை நிறைவு பெறுகிறது  .தமிழில் இல்லகிய ஆர்வம் உள்ள அனைவரும் வாங்கி  படிக்க வேண்டிய ஒரு முக்கியமான நூல் இந்த விஷ்ணுபுரம் . ஜெயமோகனுக்கு என் வாழ்த்துக்கள் , அவரின் தமிழ்க்கும் , இந்திய ஞான மரபின் மீது அவருக்கு இருக்கும் ஆளுமைக்கும் என்  வணக்கங்கள் .