முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.1

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.1

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற ஒரு புராதன நூலுக்குள் நுழைவதற்கு முன்பு வாசகர்களுக்கு வரக்கூடிய முக்கியமான ஐயங்கள் சிலவற்றை களைய வேண்டியுள்ளது. யோக சாதனை என்று கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும் கடவுளுடனும் தொடர்புபடுத்திக் கொள்வது பெரும்பாலோருக்கு இயல்பாக உள்ளது. யோகத்தை பற்றிய மிகத் தவறான புரிதல் அது.

நாம் வாழும் இச்சூழலில் இன்று தொடர்பு ஊடகங்கள் மிகவும் மலிந்துள்ளன. ஏராளமான விஷயங்களை தினமும் கேள்விப்பட்டபடி இருக்கிறோம். ஆனால் எவற்றையுமே உள்ளே சென்று ஆழத்தில் அறிவதற்கு நம்மால் முடிவதில்லை. அதற்கான அவகாசம் நமக்கில்லை. நம்முடைய லௌகீக ஆசைகள் முடிவற்றவை. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள செய்யவேண்டிய உழைப்பு ஒரு நாளும் ஓயாதது. ஆகவே அன்றாட அலுவல்கள் மற்றும் நாம் ஈடுபடும் தொழில் ஆகியவை தவிர அனைத்து விஷயங்களைப்பற்றியும் நாம் மேலோட்டமான சில பொதுப்புரிதல்களையே கொண்டுள்ளோம். அவற்றையே உண்மை என்று நம்பவும் செய்கிறோம். நமது வாழ்க்கையை உடனடியாக பாதிக்கும் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கூட நமது புரிதல்கள் பலசமயம் அபத்தமானவையாகவும், ஆபத்தான அளவுக்கு அரைகுறையானவையாகவும் உள்ளன. இந்நிலையில் ஆன்மீகம், தத்துவம், மதம் குறித்த விஷயங்களில் நமது புரிதல்கள் மிக மேலோட்டமானவையாக இருப்பதில் வியப்பில்லை . Continue reading

யோகத்தின் வழிமுறை – தொடர்ச்சி

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

யோகத்தின் வழிமுறை – தொடர்ச்சி

[ நன்றி: ஜெயமோகன்.இன்]

தாரணை என்று கூறப்படுவது மனச் செயல்பாட்டினை ஒரு புள்ளியில் குவிக்கும் பொருட்டு ஒரு மையத்தினைக் கண்டடைதலாகும். தாரணை என்ற சொல்லுக்கு தரித்தல் என்று பொருள். இதை நடைமுறையில் மந்திர தாரணை என்பார்கள். மனத்தை ஒரு மந்திரத்தில் குவிப்பதே வழக்கம். அதற்காக மூலமந்திரங்கள் (ஒம், க்ரீம், ஹம், முதலியவை), ஆப்த வாக்கியங்கள் ( பிரக்ஞானம் பிரம்மம், அஹம் பிரம்மாஸ்மி) முதலியவை குருவால் சாதகனுக்கு உபதேசம் செய்யப்படுகின்றன.

மனதை குவிக்க வேண்டிய மையம் விக்ரகமோ (உதாரணம்: கணபதி, நடராஜர்) யந்திரமோ (ஸ்ரீசக்ரம்) தீபமோ ஆகலாம். கொக்கோ கோலா என்று கூட சொல்லலாம். மந்திரம் என்பது மனமே என்று ஒஷோ ஒர் இடத்திலே சொல்கிறார்.

இம்மையத்தின் மீது முழு பிரக்ஞையையும் மெதுவாகக் குவிய வைப்பதே தியானம். இது பலபடிகள் உடையது. முதலில் பிரக்ஞையை மையம் மீது படியவைக்கும் முயற்சி. மையம் படிப்படியாகப் பிரக்ஞையின் எல்லா இடங்களையும் ஆக்கிரமிக்கிறது. பிறகு அம்மையம் மட்டுமே எஞ்சி, பிரக்ஞையே அதுவாக ஆகிறது. இறுதியில் அதுவும் இல்லாமலாகிறது.

சித்தம் பூரணமாக அடங்கி தியானிப்பவன், தியானிக்கப்படுவது என்ற இருநி லையே இல்லாமலாவதே சமாதி நிலை. இதில்தான் புருஷன் தன் தூய நிலைக்குப் போய் தூய பிரகிருதியை அறிகிறான். இதுவே மெய்ஞான நிலை. இதுவே கைவல்யம்.

இங்கு தரப்பட்டுள்ளது மிக எளிய ஒரு சித்திரம். பதஞ்சலி யோக சூத்திரமும் சரி, பிற்கால யோக நூல்களும் சரி, இந்தப் பயிற்சிகளின் பல்வேறு சிக்கல்களையும், அவற்றின் தீர்வுகளையும் விரிவாகவே விவாதிக்கின்றன.

இங்கு ஒரு தெளிவு அவசியம். யோக மரபில் இறைவழிபாட்டுக்கு இடம் உண்டா? நியமத்தின் உள்ளே அதன் ஒரு அம்சமாக யோகம் இறைத்தியானம் குறித்துக் கூறுகிறது. ஆகவே யோகம் கடவுளை ஏற்கிறது என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். யோகத்தைக் கடவுள் உள்ள சாங்கியம் ( ஸேஸ்வர சாங்கியம் = ஸ + ஈஸ்வர சாங்கியம்) என்று இவர்கள் வரையறுக்கிறார்கள்.

கடவும் நம்பிக்கையை ஒரு முழு முதல் இலக்காக யோகம் ஏற்கவில்லை என்பதை ரிச்சர்ட் கார்பே, ஹரிதாஸ் பட்டாசாரியா, டாக்டர் ராதாகிருஷ்ணன் முதலியோர் எடுத்துரைக்கிறார்கள். அன்றாட வாழ்வை நெறியுடன் நடத்த அவசியமானவற்றில் ஒன்றாகவே அது இறைபக்தியைப் பற்றிக் கூறுகிறது. இறை பக்தியை நீக்கி விட்டாலும் யோகம் எவ்வகையிலும் குறைபடுவதில்லை. ஆகவே இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட ஒன்றாகவே இருக்கவேண்டும்.

சாங்கியம் கூறும் கைவல்யம் இறைவனைக் காண்பதோ இறைவனில் இரண்டறக் கலந்துவிடுவதோ அல்ல. நம்முடைய வாழ்வையும் நம்மைச் சுற்றி உள்ள இயற்கையையும் நாம் அறிந்து வரும் விதத்துக்கு காரணமான அவித்யை விலகும் தருணம்தான் அது. அப்போது புருஷனின் சிதறுண்ட நிலை அகன்று அவன் உறுதியான தூயநிலையை அடைகிறான். அதுவே கைவல்யம்.

ஒர் உவமை கூறலாம். தாந்த்ரீக தியான முறையில் ஒரு பயிற்சி உண்டு. ஒரு நிலைக்கண்ணாடியில் துளித்துளியாக நீரோ எண்ணையோ விழச் செய்து அதன் முன் அமர்ந்து அலைபாயும் தன் பிம்பத்தைப் பார்த்தபடி அமர்ந்து தியானிப்பார்கள். அலைகள் உண்மையில் இல்லை என்று எண்ண முயல்வார்கள். ஒரு கட்டத்தில் அலைபாயாத பிம்பம் கண்ணாடியில் தெரியுமாம்.

புருஷன் அலைபாயாதவன். ஆனால் அவன் அவன் தன்னை இயற்கை எனும்  அலைபாயும் கண்ணாடியில் பிரதிபலித்துதான் பார்த்துக் கொள்ள முடியும். ஆகவே தன்னை அலைபாயும் பிம்பமாகவே அவன் அறிகிறான். அலைகளைத் தன் மனப்பயிற்சி மூலம் அவன் இல்லாமல் ஆக்கிவிட்டால் தன் அசல் பிம்பத்தை அவன் காண்கிறான். இதுவே கைவல்யம் என்பதாகும்.

யோகமும் வைதிக வேதாந்த மரபுகளும்

யோகமும் ஒரு பெளதிகவாதத் தரிசனமாகத் தொடங்கி படிப்படியாக ஆன்மிகவாத தரிசனமாகப் பரிணாமம் அடைந்தது. ஆரம்பத்தில் அது ’உப சாங்கியமாக’ இருந்தது. பிற்பாடு ‘கைவல்யம்’ அதன் முதல் இலக்காக ஆயிற்று. யோகத்தைப் பிற மதங்களும் தரிசனக்களும் படிப்படியாக உள்வாங்கிகொண்ட போது அதன் பெளதிகவாத அம்சம் – அதாவது சாங்கியத் தத்துவ அம்சம் – முழுமையாகவே ரத்து செய்யப்பட்டது. இன்று நாமறியும் யோகம் ஆன்மிகவாதத் தரிசனங்களில் உள்ள ஒரு பயிற்சி முறை மட்டுமேயாகும்.

யோகம் முழுமையாகவே வேதாந்த மரபால் உள்வாங்கபடுவதைக் காண நாம் பகவத் கீதையை எடுத்துப் பார்க்கலாம். யோக மரபின் பெரும்பாலான கருத்துகளைக் கீதை எடுத்தாள்கிறது. ‘யோகி’ என்ற கருத்தை மிக விரிவாக பல தளங்களுக்கு அது எடுத்து செல்கிறது. யோகம் மூலம் தன்னை அறிந்தவன் யோகி. அதன்பிறகு தன் அன்றாட வாழ்வை அவன் திறம்பட நடத்தும் போது அவன் கர்மயோகி ஆகிறான். ‘கர்மயோகி’ என்ற கருத்தே கீதையின் சாரமாகும்.

வேத, வேதாந்த மரபுகள் யோகத்தை தங்களிடமிருந்து வேள்வி மரபுகளுடன் பிற தியான முறைகளுடனும் இணைந்து பெரிதாக வளர்த்து எடுத்தன. வேத வேதாந்த மரபில் யோகம் மூன்று வகையில் விளக்கப்படுகிறது. யுஜ் என்ற வேர்சொல்லில் இருந்து பிறந்தது யோகம். இது சமாதி, சுயக்கட்டுபாடு, ஒன்றாதல் ஆகிய மூன்று பொருட்களை உடையது. இம்மூன்று அர்த்தங்களும் யோகத்திற்கும் தரப்படுகின்றன. ஏராளாமான விளக்கங்கள் உள்ளன.

யோகங்களில் ஹடயோகம், ராஜயோகம், கர்மயோகம், பக்தி யோகம் என்ற நான்குமே முக்கியமானவை என்று கூறப்படுகிறது. யோகம் என்று தனியாக கூறும்போது வேதாந்தமரபு ஞானயோகம்தான் என்று உத்தேசிக்கிறது.

இவற்றில் பற்பல உட்பிரிவுகளும் பற்பல கிளைகளும் இந்த நாள் வரை உருவாகியபடியே வருகின்றன

அடுத்து வருவது..

அணுக்கொள்கை: வைசேஷிகம்

யோகத்தின் வழிமுறை

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

யோகத்தின் வழிமுறை

[அருங்காட்சியகம். டோரொண்டோ, கனடா ]

யோகம் என்றால் ‘சித்தவிருத்தி நிரோதம்’ என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். (யோகேஸ்சித்த விருத்தி நிரோத)  சித்த விருத்தி நிரோதம் என்றால் சித்தத்தின் செயல்பாடுகளைத் தடுத்தல் என்று பொருள். ஒருவரின் மனமும் அறிவும் அடங்கியது தான் சித்தம் என்பது.

சித்தத்தின் செயல்பாடுகள் ஐந்து. அவை (1) பிரமாணங்கள் (2) விபரியாயம் (3) விகல்ப விருத்தி (4) நித்ரா விருத்தி (5) ஸ்மிருதி விருத்தி (யோகசூத்திரம் 1-5-6) Continue reading

யோகத்தின் பரிணாமம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

யோகத்தின் பரிணாமம்

[ஊட்டி இலக்கிய முகாம். நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]

யோக முறைகளுக்கு எத்தனை கால வரலாறு இருக்கும் என்று எவரும் கூறிவிட முடியாது. மிகத் தொடக்க கால ஆதிமனிதர்கள் கூட யோகப் பயிற்சிகளை செய்திருக்கலாம். காரணம், தன்னைக் கூர்ந்து கவனிக்கும் வல்லமை உடைய ஒரு மனம், இயல்பாகவே கண்டடையக் கூடிய வழிமுறை இதுவாகும்.

கடோபநிஷத் இவ்வாறு  கூறுகிறது: ‘ஐம்புலன்களும் மனமும் செயலற்றிருக்க, அறிவு நிலைத்து நிற்கும் நிலையே யோகம்’ (11-3). அறிவின் சிக்கல்களையும் மனத்தின் சஞ்சலங்களையும் கடந்து சென்று மெய்ஞானத்தை அறிவதற்கான ஒரு வழிமுறையே யோகம்’ என்று ஸ்வேதாஸ்வேதா உபநிஷத் கூறுகிறது. Continue reading

தூய்மையான அறிதல் முறை: யோகம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தூய்மையான அறிதல் முறை: யோகம்

[ டோரொண்டோ, கனடா பயணத்தின் போது. ஆயிரம் தீவுகள் ]

சாங்கியத்தின் கிளையாகவே யோகம் வளர்ந்து வந்தது. யோகம் சாங்கியத்தின் மூன்று அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. ஒன்று: பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது. பிரபஞ்சத்தின் மூலகாரணமும் பருப்பொருளேயாகும். இரண்டு: முக்குணங்களின் சமநிலை உடைய ஆதி இயற்கை, அந்த சமநிலை குலைந்ததனால் உருமாறி நாம் காணும் பிரபஞ்சமாக ஆயிற்று. மூன்று: இயற்கையிலிருந்து மகத்தும், தன் மாத்திரைகளும் அவற்றிலிருந்து புலனறிவும் பிறந்தன.

யோகம் உருவாக என்ன முகாந்திரம்? சாங்கிய மரபில் உருவான புருஷ தத்துவமே அதற்கு வழி வகுத்தது என்று பல அறிஞர்கள் நம்புகிறார்கள். ‘புருஷன்’ தன் தூய நிலையில் இருக்கும்போது இயற்கையும் தன் ஆதி தூய நிலையில் இருக்கிறது இல்லையா? பிரபஞ்சம் முக்குணங்களின் ஆலடரங்காக மாறிப் பரவியப் பிரம்மாண்டமான சிக்கலான தோற்றம் கொண்டுவிட்ட பிறகு புருஷனும் அதற்கேற்ப மாறுவது இயல்பே. புருஷனின் சகஜநிலை சிதறுண்ட நிலைதான். இயற்கையின் சகஜ நிலை என்பது முக்குணங்களின் சமநிலை இல்லாத நிலைதான். Continue reading

இந்திய சிந்தனை மரபில் குறள்.5

இந்திய சிந்தனை மரபில் குறள்.5

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[29 – ஜனவரி 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நிகழ்த்திய தமிழ்நாடு மெர்க்கனைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு  நிறைவுப்பகுதி]

உ. குறள் மறுப்பும் மீட்பும் .

சமூகங்கள் கட்டமைக்கப்படும் காலகட்டங்களிலும் மாற்றம் கொள்ளும் காலங்களிலும் நீதிநூல்கள் உருவாகின்றன. நீதிநூல்கள் சமூகக்கட்டமைப்பின் வரைபடங்கள். சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய கனவுகளும்கூட. குறள் தமிழ்ச்சமூகம் உதிரி இனக்குழுக்கள் ஒன்றாகத்திரண்ட ஒரு காலகட்டத்தின் ஆக்கம். அப்படி அவற்றை திரட்டிய கருத்தியல் விவாதத்தின் திரள்மையம்.

தமிழ்நிலத்தில் சமணமும் பௌத்தமும் மெல்லமெல்ல கைவிடப்பட்டு மறைந்தன. இந்திய அளவிலும் அவை மெல்ல மறைந்து பெயரளவுக்கே எஞ்சுகின்றன. அவற்றின் அழிவுக்கான காரணங்கள் பலவாறாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் ஆர்.எஸ்.சர்மா போன்ற மார்க்ஸிய ஆய்வாளார்களின் பொதுக்கருத்தை இங்கே எடுத்துக்கொள்ளலாம். இந்திய நிலப்பரப்பில் உதிரி இனக்குழுக்களையும் அரசுகளையும் வணிகரீதியாக ஒருங்கிணைக்கவும் அதற்கான அடிப்படை அற அடிப்படைகளை உருவாக்கவும் உதவியாக இருந்த இம்மதங்கள் அதற்கு அடுத்தபடியாக உருவாகி வந்த பேரரசுகளின் காலகட்டத்தின் தேவைகளை எதிர்கொள்ள முடியாமையினாலேயே அழிந்தன.

பௌத்த சமண மதங்களின் வீழ்ச்சியுடன் வணிக சமூகங்களின் அதிகாரம் வீழ்ச்சியடைந்ததும் பின்னிப்பிணைந்துள்ளது. சிலப்பதிகார காலத்தில் நாம் காணும் வணிக சமூகத்தின் மாண்பை பின்னர் வந்த காலகட்டங்களில் எப்போதுமே கண்டதில்லை. இந்திய நிலப்பகுதியில் வணிகம் உருவாகி அதன் விளைவாக மூலதனக்குவிப்பு நிகழ்ந்து அதன் அடுத்தபடியாக பேரரசுகள் பிறந்தபோது அதற்கு பெரிதும் உதவக்கூடிய வைதீக மதம் புத்துயிர்கொண்டது.

புத்துயிர்கொண்ட வைதீகமதம் வேள்விமதம் என்ற அடையாளத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பெருவழிபாட்டுமதமாக தன்னை மறு ஆக்கம் செய்துகொண்டது. ஆலயங்கள், திருவிழாக்கள் என பெருவாரியான மக்கள் பங்கேற்பைக் கொண்ட மதமாக அது உருப்பெற்ற போது மெல்லமெல்ல பெருவாரியான மக்களால் பின்பற்றப்பட்டு வந்த பௌத்த சமண மதங்கள் பின்னகர்ந்தன. Continue reading

இந்திய சிந்தனை மரபில் குறள்.4

இந்திய சிந்தனை மரபில் குறள்.4

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[29 – ஜனவரி 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நிகழ்த்திய தமிழ்நாடு மெர்க்கனைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு பகுதி 4]

ஈ. குறள்நீதி என்னும் அழியாத கவிதை

குறள் ஒரு ஸ்மிருதியா இல்லை சுருதியா? இந்திய ஞானமரபின் விவாதங்களில் இந்த வினா முக்கியமானது. இந்திய மெய்யியல் நூல்களை ஆராயும்போது நடராஜகுரு இந்தவினாவை எப்போதும் எழுப்பிக்கொள்கிறார். நெறிகளை அறிவுறுத்தும் நூல் ஸ்மிருதி. அடிப்படையான தரிசனங்களை முன்வைக்கும் நூல் சுருதி. பகவத்கீதையைப்பற்றி பேசும்போது அது ஒரு ஸ்மிருதி அல்ல சுருதிதான் என்று நடராஜகுரு தன் பகவத்கீதை உரையில் விவரிக்கிறார். ஏனென்றால் கீதை நெறிகளை அறிவுறுத்தவில்லை, நெறிகளுக்கு ஆதாரமாக உள்ள தத்துவப்பிரச்சினைகளை ஆராய்கிறது. அவற்றைச்சார்ந்து தன் முரணியக்க தரிசனத்தை முன்வைக்கிறது.

குறளை ஒரு வெறும் நீதிநூலாக அதாவது ஸ்மிருதியாக பார்க்கும் பார்வையே நம்மில் மேலோங்கியிருக்கிறது. குறளின் தத்துவ, தரிசன தளங்கள் குறைவாகவே பேசப்பட்டுள்ளன. குறள் ஒரு ஸ்மிருதியா என்றால் ஆம் என்ரே சொல்லவேண்டியிருக்கும். ஆனால் அது ஒரு சுருதியும் கூட என்று அந்நூலின் மீதான விரிவான வாசிப்பனுபவத்தைச்சார்ந்து கூறமுடியும் என்பதே என் கருத்தாகும்.

குறள் ஓர் ஆயுதமேந்திய பிரதி அல்ல. அது தனக்குப்பின்னால் ஓர் அதிகாரத்தை நிறுத்திக்கொண்டு அதன் குரலாகப்பேசவில்லை. அடக்குமுறையையோ ஆதிக்கநோக்கோ அதன் கூற்றில் இல்லை. குறளின் குரல் அறத்தின் அதிகாரத்தையே முன்னிறுத்துகிறது. அறம்சார்ந்த ஒரு விவாதத்தை உருவாக்கி அதில் கருத்தியல் ரீதியான மேலாதிக்கத்தை அடைந்து தன்னை நிறுவிக்கொள்ள அது முயல்கிறது என்று மேலும் திட்டவட்டமாகச் சொல்லலாம். அதற்கான காரணங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன. அது கருத்தியலாதிக்கம் தேவைப்பட்ட இனக்குழுத்தொகுப்புக் காலகட்டத்தை தன் உருவாக்கப்பின்னணியாகக் கொண்டது. Continue reading

இந்திய சிந்தனை மரபில் குறள்.3

இந்திய சிந்தனை மரபில் குறள்.3

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[29 – ஜனவரி 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நிகழ்த்திய தமிழ்நாடு மெர்க்கனைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு பகுதி 3]

இ. திருக்குறளின் விவாதக்களம்

இந்தியச் சூழலில் தர்மசாஸ்திரங்களின் இடத்தையும் பங்களிப்பையும் விரிவாக ஆராய்ச்சி செய்தவர் பி.வி.காணே. தர்ம சாஸ்திரங்களைப்

பற்றிய அவரது மகத்தான கலைக்களஞ்சியம் இந்திய வரலாற்றையும் தத்துவத்தையும் அறிவதற்கான முதன்மை ஆதாரங்களில் ஒன்று. இந்தக்கலைக்களஞ்சியம் அளிக்கும் மனச்சித்திரம் ஒன்றுண்டு. ஒரே வயலில் பயிர்கள் வளர்ந்து நிற்பது போல இந்த எல்லா தர்ம சாஸ்திரங்களும் ஒரே பண்பாட்டுக்களத்தில், ஒரே விவாதச்சூழலில் முளைத்தெழுந்து நிற்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள மறுக்கமுடியாத ஒற்றுமைகளே நம் கண்ணில் முதன்மையாகப் படுகின்றன. பேதங்களை உருவாக்கும் விவாதச்சூழல் அடுத்தபடியாக கண்ணில்படுகிறது.

இந்திய தர்மசாஸ்திரங்களை அனைத்தையும் ஒரேதளத்தில் வைத்து ஒப்பாய்வுசெய்வதனூடாக நாம் அடையும் வெளிச்சங்கள் பல உள்ளன. திருக்குறள் போன்ற நூல்கள் அத்தகைய விரிவான ஆய்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டனவா என்ற ஐயம் எனக்கு உள்ளது. குறிப்பாக பிரபலமான ஸ்மிருதிகளுடனும் ஜைன சூத்திரங்களுடனும் பௌத்த நீதிநூல்களுடனும் குறள் விரிவாக ஒப்பீட்டாய்வுக்கு உட்படுத்தப்பட்டதில்லை. இந்த நீதிநூல்கள் உருவான ஓர் ஒட்டுமொத்த விவாதக்களத்தில்தான் குறளும் உருவாகியகுக்கிறது.

நான்குவருணங்கள் நான்கு புருஷார்த்தங்கள் நான்கு ஆசிரமங்கள் இவையே எல்லா தர்ம சாஸ்திரங்களுக்கும் பொதுவான பேசுபொருள். எல்லா ஸ்மிருதிகளும் இவற்றைப்பற்றியே விரித்துரைக்கின்றன. ஒரு நீதிநூலை இன்னொன்றுடன் நாம் வேறுபடுத்திப்பார்ப்பது எவ்வகையில் அது இந்த பொதுமையில் இருந்து வேறுபடுகிறது என்பதை வைத்தே. உதாரணமாக குறள் நான்குவருணங்களைப் பற்றிப் பேசவில்லை. நான்கு புருஷார்த்தங்களில் வீடுபேறை விட்டுவிட்டது. Continue reading

இந்திய சிந்தனை மரபில் குறள்.2

இந்திய சிந்தனை மரபில் குறள்.2

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[29 – ஜனவரி 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நிகழ்த்திய தமிழ்நாடு மெர்க்கனைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு பகுதி 2]

ஆ. குறள் என்னும் நீதிநூல்

கி.பி. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்கும் நடுவே, தமிழகத்தை சமணர்களான களப்பிரர்கள் ஆண்ட காலகட்டத்தில், திருவள்ளுவர் என்று சிறப்புப்பெயரால் குறிப்பிடப்படும் நூலாசிரியரால் இயற்றப்பட்ட திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் நீதிநூல்வரிசையில் முதன்மையானதாக நெடுங்காலமாகவே போற்றப்பட்டு வருகிறது. தமிழர்களின் முதல்நூலாகவும் தமிழ்ப் பண்பாட்டின் கொடியடையாளமாகவும் குறள் முன்னிறுத்தப்படுகிறது. திருக்குறளைப்போன்ற ஒரு நூலை அவ்வாறு முன்னிறுத்துவது எந்த ஒரு சமூகத்துக்கும் பெருமையளிக்கக்கூடிய ஒன்றே.

மேலே குறிப்பிட்ட விவாதத்தில் குறள் என்ன சொல்கிறது?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான்

எல்லா உயிர்களும் பிறப்புசார்ந்து நிகரானவையே. ஆனால் சிறப்பு என்பது அவ்வண்ணம் நிகரானது அல்ல. அது செய்யும் தொழிலால் வேறுபடுகிறது– என்பது இதன் நேரடிப்பொருள். இதற்கு பரிதியார் ‘நற்குலத்தாரவர் என்றதால் இழிதொழிலாலே இழிகுலமாவார் என்பதாம்’ என்று விளக்கம் அளிக்கிறார்.

இந்தக்குறளை கீழான தொழிசெய்பவர்கள் கீழானவர்கள் என்றோ கீழான தொழில்செய்யும் சாதிகளில் பிறந்தவர்கள் கீழானவர்கள் என்றோ பொருள்கொள்பவர்கள் சிலர் உண்டு.ஆனால் அடுத்த குறள் இன்னும் தெளிவான விளக்கத்தை இந்த பாடலுக்கு அளிக்கிறது. உண்மையில் இவ்விரு குறள்களையும் பிரிக்காமல்தான் பொருள்கொள்ள வேண்டும்.

Continue reading

இந்திய சிந்தனை மரபில் குறள்.1

இந்திய சிந்தனை மரபில் குறள்.1

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[29 – ஜனவரி 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நிகழ்த்திய தமிழ்நாடு மெர்க்கனைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு பகுதி 1]

அ . சமூகப்பரிணாமமும் நீதிநூல்களும்

வியாச மகாபாரதத்தைக் கூர்ந்து வாசிக்கும் வாசகனுக்கு உண்மையில் அது சாதியைப்பற்றி என்னதான் சொல்கிறது என்ற குழப்பம் எழாமலிருக்காது. மகாபாரதக்கதையே பிரம்மாண்டமான குலக்கலப்பின் வரலாறு என்றால் அது மிகையல்ல. அதன் கதைசொல்லியும் குருவம்சபிதாமகருமான மகாவியாசன் கிருஷ்ண துவைபாயனனே குலக்கலப்பில் பிறந்தவர்தான். பராசர முனிவருக்கு காளி என்ற மீனவப்பெண்ணில் பிறந்தவர் அவர். காளி என்றால் கறுப்பி என்று பொருள். கிருஷ்ணன் என்றாலும் கருப்பன்தான். மாறாகவும் நிகழலாம். மதங்க ரிஷி பிராமணப்பெண்ணுக்கு ஒரு சவரக்காரர் உறவில் பிறந்தவர்.

மகாபாரதம் சாந்திபர்வத்தில் நான்குவர்ணங்களையும் ஒருவனின் செயல்களை மட்டுமே வைத்து வரையறுக்கவேண்டும் என்ற குரலை நாம் மீண்டும் மீண்டும் காணலாம். பிறப்பால் எந்த மனிதனையும் சாதியடையாளம் செய்யக்கூடாது என்று பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ‘பிராமணனின் குணமில்லாதவன் பிராமணன் அல்ல. க்ஷத்திரியனின் குணமில்லாதவன் க்ஷத்ரியனல்ல’ [மகாபாரதம் சாந்திபர்வம் 189/8] பிராமணனின் மகனாகப்பிறந்த ஒருவன் தன் இயல்பாலும் சூழலாலும் பிராமணனாக வாழமுடியவில்லை என்றால் அவன் க்ஷத்ரிய குலத்தவனாகி அச்செயலைச்செய்யலாம். அல்லது வைசியகுலத்தவனாகி அச்செயல்களைச் செய்யலாம்’ என்கிறது மகாபாரதம்.

மகாபாரதத்தில் போரிடும் பிராமனர்களை நாம் காண்கிறோம். அரசியல்த்தொழில் செய்பவர்களை நாம் காண்கிறோம். மகாபாரதத்தின் ஒருபகுதியாக விளங்கும் கீதையில் அர்ஜுனன் அர்ஜுனவிஷாத யோகத்தில் ‘குலக்கலப்பு ஏற்பட்டால் தர்மம் அழியும்’ என்கிறான். ஆனால் அவனே குலக்கலப்பால் பிறந்தவன். அவனுக்கு விளக்கமளிக்கும் கிருஷ்ணன் ‘நான்குவர்ணங்களும் இயல்புகள் செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் படைக்கப்பட்டவை’ என்று சொல்கிறான். கீதையின் வேதாந்தப்பகுதி மகாபாரதத்தைவிட பழமையானது என்பது என் எண்ணம். அர்ஜுனன் வரும் முதல்பகுதி மகாபாரதகாலத்துக்கு நெடுங்காலம் கழித்து உருவானது. Continue reading