முடிவின்மையின் தொடர்பு : கார்ல் சகன், ‘தொடர்பு’

முடிவின்மையின் தொடர்பு

[ஜெயமொகன்.இன் இல் இருந்து தொகுத்தது]

[கார்ல் சகன்]

‘எல்லி அரோவே’ யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான தேடலை அறிவியலாளரான அவள் தந்தை கணிதத்தையும் அறவியலையும் நோக்கித் திருப்பினார். தந்தையுடன் அவளுக்கிருந்த உணர்வுப்பூர்வமான நுட்பமான உறவு அந்த தேடல் வலுப்பெற்று அதை மட்டுமே மையமானதாகக் கொண்டு அவளது ஆளுமை உருவாகக் காரணமாக அமைந்தது. இளமையின் சபலங்களுக்கோ உலகியல் ஆர்வங்களுக்கோ அவள் ஆளாகவில்லை. அவளது தேடல் அவளை வானவியல் ஆய்வாளராக ஆக்கியது.

Continue reading

வைசேஷிகத்தின் தத்துவம் – தொடர்ச்சி

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

வைசேஷிகத்தின் தத்துவம் – தொடர்ச்சி

[இந்திய நெடும்பயணத்தில் டோலாவீரா, குஜராத். செல்லும் வழியில் ஒரு உப்பு ஏரி]

பிற திரவியங்களின் சிறப்பியல்புகளைக் கணாதர் கூறுகிறார். காலமும் இடமும் பருப்பொருட்களைப் போலவே புறவயமானவை என்பது வைசேஷிகத்தின் நம்பிக்கை. ஆனால் அவை பிற பருப்பொருட்களை நம்பி மட்டுமே இருக்க முடியும்.

ஒரு திரவியத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட குணங்கள் இருக்கலாம். கணாதரே கூறுகிறார்: “மண்ணுக்குச் சுவை, மணம், வடிவம், தொடுகை ஆகிய குணங்கள் உள்ளன. அக்னிக்கு வடிவம், தொடுகை ஆகியவை உள்ளன. வாயுவுக்கு தொடுகை மட்டுமே” Continue reading

வைசேஷிகத்தின் தத்துவம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

வைசேஷிகத்தின் தத்துவம்

[2011 கோவை புத்தகக் கண்காட்ச்சியில் வாசகர்களுடன்]

’இனி நாம் தர்மத்தை விலக்க முயல்வோம்’ என்று கூறியபடி வைசேஷிகச் சூத்திரங்கள் ஆரம்பிக்கின்றன. தர்மம் என்றால் என்ன? எதிலிருந்து எல்லா விஷயங்களும் உருவாகி வருகின்றனவோ அதுவே தர்மம்; எது எல்லாவற்றுக்கும்அடிப்படையாக அமைகிறதோ அதுவே தட்மம். இப்பார்வை பிறகு பெளத்த ஞானமரபில் பெரிதாக வளர்ந்தது.

மனிதனைச் சாராமல் தன் சொந்தத் தனித்தன்மையால் நிலையாகவும் நிரந்தரமாகவும் இருந்துகொண்டிருக்கும் பிரபஞ்சம் உண்டு என்று கணாதர் நம்பினார். அது எந்த விதிகளின்படி இயங்கிக்கொண்டிருக்கிறது எனப் பாரபட்சமற்ற ஆய்வின் மூலம் மனிதன் அறிய முடியும். அவ்விதியே தர்மம். அதை அறிவது மனிதனைத் தன் அறியாமையின் துயர்களிலிருந்து விடுதலை செய்யும். Continue reading

அணுக்கொள்கை: வைசேஷிகம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

அணுக்கொள்கை: வைசேஷிகம்

[ஊட்டி இலக்கிய முகாம். நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]

அணுக்களின் கூட்டு மூலமே இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் உருவாகியுள்ளன என்ற கொள்கை புதியது என்று நாம் கருதுகிறோம். இது தவறு. அணுக்களின் கூட்டாகப் பொருட்களைப் பார்க்கும் பார்வை மிகப் பழங்காலம் முதலே கீழைச் சிந்தனையிலும் கிரேக்க சிந்தனையிலும் இருந்து வந்துள்ளது. உண்மையில் நவீன அணுக்கொள்கையானது இந்தப் புராதன சிந்தனைகளின் ஒரு திருத்தப்பட்ட வடிவமேயாகும். Continue reading

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 3

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 3

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

சூத்திரம் ஆறு

ப்ரமாண விபர்யாய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய:

[ அவையாவன, யதார்த்தம், பொய்யறிவு, திரிபு , துயில்நிலை , நினைவுகூர்தல் ]

மனச்செயல்பாடுகளை ஆறுவகையாக பிரித்துப் பார்க்கின்றது யோகம். இங்கே பிரமாணம் என்ற சொல் வகுத்து அறியப்பட்டது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. புலன்களாலும் தர்க்கத்தாலும் நாம் அறியக்கூடிய அனைத்துமே பிரமாணம் என்பதில் அடங்கும். யதார்த்த அறிவு என்று இதை சொல்லலாம்.

இது சிறகுகள்கொண்டிருக்கிறது வானில் பறக்கிறது ஆகவே இது பறவை . இது சிறியதாக உள்ளது, சிறகுகள் நீலச்சாம்பல் நிறம். நீலச்சாம்பல் நிறமுள்ள சிறகுகள் கொண்ட சிறிய பறவை மைனா எனப்படும். ஆகவே இது மைனா. இவ்வாறு நாம் கண்டு கேட்டு யோசித்து அறிகிற செயல்பாடுதான் பிரமாணம். இது நம்மில் இடையறாது நடந்து கொண்டிருக்கிற மனச்செயல்பாடு . Continue reading

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 2

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 2

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

சூத்திரம் மூன்று

ததா த்ருஷ்ட்டு: ஸ்வரூபே அவஸ்தானம்

[அப்போதே பார்ப்பவன் தன்னிலையில் உறைகிறான்]

இந்தச் சூத்திரத்தில் மூன்று சொற்கள் உள்ளன. மூன்று தன்னிலைகள் என இதை வகுக்கலாம். திருஷ்டு என்றால் பார்ப்பவன், அவதானிப்பவன், உணர்பவன். மனதை உணரும் தன்னிலை என்று இதைச் சொல்லலாம். இரண்டாவது சொல் ஸ்வரூபம். தன்னுடைய உண்மையான அகநிலை. அல்லது தூய தன்னிலை. இங்கே இன்னும் அது ஒரு உருவகம்தான். மூன்றாவது அவஸ்தை. அந்த தூய நிலையில் உறைதல் என்ற நிலை. தான் என தன்னை உணர்பவன் அந்த உணர்தல் மூலம் உருவாகும் அலைகள் அனைத்தையும் அடக்கி இல்லாமலாக்கிக் கொண்டால் மட்டுமே தூய தன்னிலையாக தன்னை உணர்ந்து அந்நிலையில் அமைய முடியும் என்று இச்சூத்திரத்தை விளக்கலாம்

இச்சூத்திரத்தில் அவஸ்தானாம் என்ற சொல்லை சுட்டிக்காட்டுவது மரபு. அதாவது தூய தன்னிலை என்பது ஒரு அறிதல் அல்ல. அது நிலை. ஒரு அமைதல்தான்.

ஓர் உவமை மூலம் விளக்கலாம். நான்குபக்கமும் நிலைக்கண்ணாடிகள். நடுவே ஒரு சுடர் விளக்கு. நாம் காண்பது விளக்குகளினாலான ஒரு மாபெரும் வெளி. இதுவே நம் மனம். சுடரைக் காண நாம் முதலில் செய்ய வேண்டியது ஆடிகளை களைதல். அப்போது சுடர் மட்டும் எஞ்சுகிறது. Continue reading

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 1

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 1

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

சூத்திரம் ஒன்று

”அத யோக அனு சாசனம்”

[ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ]

அத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர் பலவாறாக பேசியுள்ளார்கள் . அத என்றால் ஆதலால் என்றோ , இனிமேல் என்றோ பொருள் கொள்ளலாம். இதை நமது சூத்திரங்கள் பல ‘என்ப’ என்று முடிவதுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும். அதாவது பதஞ்சலி முனிவர் யோகத்தைப்பற்றி பேசும் முதல் அறிஞர் அல்ல. ஏற்கனவே விரிவாக பேசப்பட்டுள்ளது. அவர் அதை வகுத்தும் தொகுத்தும் உரைக்க மட்டுமே முற்படுகிறார் .

பெரும்பாலான சூத்திர நூல்களில் இந்த அமைப்பு காணப்படுகிறது . உதாரணமாக வேதாந்த சூத்திரம் ” அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா ” என்று துவங்குகிறது. [ ஆதலால் பிரம்ம ஞானம் தேடுபவனே…] இதற்கு இரு வகை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்த தளத்தின் ஞானியால் முன்வைக்கப்படும் அதிகாரபூர்வ குரல் ஆதலால்தான் ‘ஆதலால்’ என துவங்குகிறது என்கிறார்கள்.

அதனுடன் சங்கரர் வேறுபடுகிறார் . பிரம்ம ஞானத்தை அடைவதற்கு முன்பு பலவிதமான பயிற்சிகளை செய்யவேண்டியுள்ளது. ஞானத்தில் பக்குவபப்ட்ட பிறகே யோகம் பயில வேண்டும். ஞானமில்லா யோகப்பயிற்சி வெறும் பழக்கமாகவே ஆகும். ஆகவே தத்துவ ஞானம் கனிந்தபின் பிரம்மஞானத்தை பெற முன்வரும் மாணவனை அழைத்து பேசுவதனாலேயே இந்த சொல்லாட்சி வந்துள்ளது என்கிறார் அவர். Continue reading