பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[வனம் நோக்கி ஈரோடு அருகில்]
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
உங்களுக்கு எனது முதல் கடிதம் இது. தவறுகள் இருப்பின் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். நான் கடந்த 20 வருடங்களாக Software துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமீப காலம் வரை ஆங்கில fiction , non – fiction எழுத்துக்கள் வாசித்து வந்தேன் (Carl Sagan , Stephen Hawkins , Malcolm Gladwell , Richard Feynman , James Rollins ஆகியோர் என் குறைந்த வாசிப்பில், என்னை கவர்ந்த எழுத்தளர்கள்). 2008 வரை தமிழ் வாசிப்பு மிக குறைவு. 80s இல் சுஜாதா, வாசித்ததோடு அவ்வப்போது விகடனில் எஸ் ராமகிருஷ்ணன் , நாஞ்சில் நாடன் வாசிப்பதுண்டு. அலுவலக நண்பர் ஒருவர் உயிர்மையில் தங்களது ஊமைச்செந்நாய் வாசிக்க அறிமுகப்படுத்தினார். என்னை மிகவும் பாதித்த கதைகளுள் ஒன்று அது. பல முறை வாசித்து விட்டேன்.
நான் தங்களது ப்ளாக் கடந்த மூன்று வருடங்களாக படித்து வருகிறேன். தங்களது சிறுகதை தொகுப்பு (முழு தொகுப்பு) , மண் சிறுகதை தொகுப்பு, விஷ்ணுபுரம் , இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள், இரவு, உலோகம் ஆகிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். தங்கள் எழுத்துக்கள் எப்போதும் என் மனதில் ஒரு ஆழமான பாதிப்பை , தேடலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. தங்கள் அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி வைத்துவிட்டேன் , படிக்கத்தான் நேரம் ஒதுக்க வேண்டும்:-) Continue reading →