அயன் ரான்ட் – 4

அயன் ரான்ட் – 4

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அயன் ராண்ட் கலைக்கலஞ்சியம் என்ற ஒரு நூலை அமெரிக்க நூலகத்தில் பார்த்த நினைவிருக்கிறது. அயன் ராண்டின் கொள்கைகளை பிரச்சாரம்செய்வதற்கான ஆய்வுமையத்தால் வெளியிடப்பட்டது அது. அயன் ராண்ட் பல்வேறு விஷயங்களைப் பற்றி சொன்ன கருத்துக்கள் அதில் அகரவரிசையில் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவரது நோக்கின் மையச்சரடு என்பது அவராலேயே புறவயவாதம் என்று வகுத்துரைக்கப்பட்டது. Continue reading

அயன் ராண்ட் – 3

அயன் ராண்ட் – 3

ஜெயமோகன்.இன் ல் இருந்து

நான் ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் இருந்தபோது பேரா.காசிநாதனைச் சந்தித்தேன். என்னை அவர் ஒருநாள்முழுக்க காரில் வெளியே அழைத்துச்சென்று மெல்பர்ன் நகருக்கு வெளியே உள்ள சிற்றூர்களைக் காட்டினார். இலங்கையில் தத்துவத்தில் ஆசிரியராக பணியாற்றிய காசிநாதன் அவர்கள் லண்டனில் தத்துவம் பயின்றவர். அவர் பயிலும்காலத்தில் தத்துவத்தில் பெரும் பரவசத்தை உருவாக்கிய ஆளுமை விட்கென்ஸ்டீன். காசிநாதன் அவர்கள் விட்கென்ஸ்டீன்னின் தத்துவத்தில் உயராய்வு செய்தார். கடந்த முப்பது வருடங்களாக அவருக்கு விட்கென்ஸ்டீன்தான் ஆய்வுப்பொருளாக இருக்கிறார். நாங்கள் ஒரு கிராமத்துப் புத்தகக் கடைக்குச் சென்றிருந்தோம். காசிநாதன் அங்கேயும் ஒரு விட்கென்ஸ்டீன் பற்றிய நூலைத்தான் வாங்கினார். Continue reading

அயன் ராண்ட் 2 [தொடர்ச்சி]

அயன் ராண்ட் 2 [தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

6850926453_f238c4aae3_o

பத்துவருடம் முன்பு உலகின் உயரமான கட்டுமானமாகக் கருதப்பட்ட டொரொண்டோவின் சி.என்.என் கோபுரத்துக்குச் சென்று வந்தபோது அ.முத்துலிங்கத்திடம் சொன்னேன், அது வானத்தை நோக்கி நீட்டப்பட்ட ஒரு முஷ்டி போல இருக்கிறது, அகங்காரமும் சவாலும் மட்டுமே தெரிகிறது, அது என்னை தொந்தரவு செய்கிறது என. ஆம்,கட்டிடங்களில் இருந்து அகங்காரத்தைப் பிரிக்க முடியாது. தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழனின் அகங்காரம்.ஆகவேதான் அவனது சொந்த மகனுக்கு அதைவிடப்பெரிய கோயில் ஒன்று தனக்கெனத் தேவைப்பட்டது. Continue reading

அயன் ராண்ட் 2

அயன் ராண்ட் 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அயன் ராண்ட் பற்றி தமிழில் எதுவும் எழுதப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன். சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகம் அவரைபொருட்படுத்தவில்லை. காரணம் க.நா.சு அவரை இடதுகையால் ஒதுக்கிவிட்டார்.  எங்கோ ஒரு கட்டுரையில் க.நா.சு ‘அரைவேக்காடு எழுத்து’ என்று அயன் ராண்ட் பற்றி சொல்லியிருக்கிறார். நவீன ஐரோப்பிய எழுத்தாளர்களை ஆதர்சமாகக் கொண்ட, அவ்வகையில் எளிய மக்களை அவர்களின் மொழியிலேயே முன்வைக்கும் கலைப்படைப்புகள் உருவாகவேண்டுமென வலியுறுத்திய, க.நா.சுவுக்கு அயன் ராண்ட் கடுப்பைக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை. Continue reading

அயன் ராண்ட் 1

அயன் ராண்ட் 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[அயன் ராண்ட்]

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்,நலம்தானே. அயன் ராண்டின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவரது ·பௌண்டன் ஹெட் [Fountainhead]மற்றும் அட்லஸ் ஷ்ரக்ட் [Atlas shrugged]  பற்றி பேசினீர்களென்றால் நன்றாக இருக்கும்.

அன்புடன் ரவி

பி.கு. நான் உங்களை 2006ல் மதுரை புத்தகச்சந்தையில் சந்தித்தபின் வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறேன் Continue reading

தத்துவத்தைக் கண்காணித்தல்

தத்துவத்தைக் கண்காணித்தல்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

Picture 031

[கவி மழைப்பயணம்]

அன்புள்ள ஜெ…சார்,

1980-90 களில் ரஜ்னீஷ் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை படித்துவிட்டு நண்பர்களிடம் விவாதித்துக்கொண்டிருப்போம். ஒரு நெருங்கிய நண்பர் திடீரென்று ஒரு நாள் மொட்டையடித்துக்கொண்டு வெள்ளை ஜிப்பா, வேஷ்டி அணிந்துகொண்டு வந்தார். ‘நான் இன்றுதான் பிறந்திருக்கிறேன். என்னை நான் diseducate செய்து கொண்டேன்.‘ என்றார்.  (அச்சில் வருவதை…பாடப்புத்தகங்கள் உள்பட…உண்மை என்று என்று நம்பிக்கொண்டுருந்த கால கட்டம் அது) சிறிது நேரம் கழித்து ‘பசிக்கிறது…மசால் வடை சாப்பிடலாமா‘ என்றார். மற்றொரு நண்பர் ‘மசால் வடையை diseducate செய்யவில்லையா‘ என்று கேட்டார். அவ்வளவுதான்..அந்த நண்பர் சட்டென்று எழுந்து சென்று விட்டார். அவரை மீண்டும் பழய நிலைக்கு கொண்டு வர 5 வருடங்கள் ஆனது. Continue reading

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-3 [நிறைவுப் பகுதி]

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-3 [நிறைவுப் பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01192

[கவி மழைப்பயணம்]

இரண்டு மனிதர்கள் எப்போது கூடிவாழ ஆரம்பிக்கிறார்களோ அப்போதே உளக்கட்டுப்பாடு தொடங்கி விடுகிறது. கூட்டாக வாழும் எல்லா உயிர்களும் உளக்கட்டுப்பாடும் படிக்க வரையறையும் அச்சமூகத்தால் வலியுறுத்தப்படுகின்றன. ஜேன் குடால் போன்ற நவீன ஆய்வாளர்கள் சிம்பன்ஸி சமூகத்தில் பலவிதமான பாலியல் கட்டுபாடுகள் உள்ளதை எடுத்துக்காட்டியுள்ளனர். பாலியல் கட்டுபாடு இல்லாத பழங்குடிச் சமூகம் ஏதும் கண்டடையப்பட்டதில்லை. அப்படியானால் •பிராய்டியக் கோட்பாடுகளை சிம்பனிஸிக்களுக்கும் போட்டுப் பார்க்கலாமா என்ன? Continue reading

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-2

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01191

[கவி மழைப்பயணம்]

நிலைபெற்றவன்

ஆத்மவான் என்ற சொல்லின் செயல்தள விரிவாக்கம் ‘ஸ்திதப்பிரதிக்ஞன்’ என்ற சொல்லாகும். ஆத்மாவாக தன்னை உணர்ந்து தத்துவார்த்தமான தெளிவை அடைந்தவன் செயல்களில் ஈடுபடும்போது சிதறாத உள்ளம் கொண்டவனாக நிலைத்த பிரக்ஞை கொண்டவானக இருப்பான். அவனே நிலைபெற்றவன். கீதையில் உள்ள இக்கலைச் சொல் இந்து ஞானமரபில் பலதளங்களில் மீளமீள விவாதிக்கப்படும் ஒன்றாகும். Continue reading

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-1

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01173

[கவி மழைப்பயணம்]

பாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு சொன்னார்’’ தூங்காதே’’ பலநாள் தூங்காமலிருக்க முயன்று உடல் மெலிந்து மனம் குலைந்த நிலையில் மீண்டும் குருவிடம் வந்து சிவானந்தர் சொன்னார் ‘’தூங்காமலிருக்க என்னால் முடியவில்லை’’ Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.4 [நிறைவுப்பகுதி]

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.4 [நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[சிட்னி]

வேதங்களும் கருமங்களும்

இப்பகுதியில் வேதங்களுக்கு கீதை அளிக்கும் மறுப்பு இந்து ஞான மரபில் கடந்த இருபது நூற்றாண்டுகளாக தத்தளிப்பை உருவாக்கிவருவதாகும். நித்ய சைதன்ய யதி ஒர் உரையாடலில் இவ்வண்ணம் குறிப்பிட்டார். ”வாளை அதன் எதிரே வரும் ஒவ்வொன்றும் மழுங்கடிக்க முயல்கின்றன. வேதாந்தத்தை அத்துடன் உரையாடும், அதற்கு உரையளிக்கும், அதை விரித்துப் பேசும் ஒவ்வொரு தரப்பும் ஏதோ ஒருவகையில் மழுங்கடிக்கவே முயல்கின்றன.” நான் ‘சங்கரர் கூடவா?’ என்று கேட்டேன். “ஆம், சங்கரரும் நாராயண குருவும் கூடத்தான்” என்றார் நித்யா. நான் வியப்பில் பேச்சிழந்தேன். Continue reading