அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3[தொடர்ச்சி]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் முதல் நம்முடைய வரலாறு நவீன நோக்கில் எழுதப்படும் பணி தொடங்கியது. அவ்வாறு வரலாறு தொகுது நவீனப்படுத்தி எழுதப்பட்டபோது அதன் விளைவாக நம்முடைய ஆன்மீகமும் மறுஆக்கம் செய்யப்பட்டது.சைவம் வைணவம் போன்றவற்றில் நிகழ்ந்த மறுமலர்ச்சி என்பது இதுதான். அதாவது அவற்றின் ஆன்மீகமானது மறுவரலாற்றுவிளக்கம் பெற்றது.
ஏறத்தாழ இதேகாலகட்டத்தில்தான் பௌத்தமும் மறுவிளக்கம் பெற்றது. ஆல்காட், ரைஸ் விலியம்ஸ், பால் காரஸ் போண்ற மேலைநாட்டறிஞர்களாலும் அநாகரிக தம்மபால போன்ற கீழை அறிஞர்களாலும். சைவமும் வைணவமும் எப்படி நவீனகாலகட்ட்டதுக்காக மறு ஆக்கம் செய்யபப்ட்டனவோ அதேபோலவே பௌத்தமும் மறு ஆக்கம்செய்யப்பட்டது. Continue reading