அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

அயோத்திதாசர் உருவாக்கிய வரலாற்றெழுத்தின் அடிப்படையான கூறுகள் என்னென்ன? அவற்றை என் அவதானிப்பில் நான் இவ்வாறு வகுத்துக்கொள்வேன்.

அயோத்திதாசர் அவர்களின் இந்திரர்தேசத்து சரித்திரத்தில் நாம் காணும் முதன்மையான அம்சம் அதன் மாற்று வரலாற்றுத் தரிசனம். அதை எழுதப்பட்ட வரலாற்றின் தலைகீழாக்கம் என்று ராஜ்கௌதமன் போன்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த தலைகீழாக்கம் அயோத்திதாசர் அவர்களால் கண்டடையப்பட்ட ஒன்றல்ல. அது ஏற்கனவே இங்கே இருப்பதன் நவீன வடிவம்தான். தலைகீழாக்கம் எப்போதுமே நம் மரபில் இருந்துகொண்டிருக்கிறது.

Continue reading →

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2[தொடர்ச்சி]

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2[தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

அயோத்திதாசர் பற்றிய தன்னுடைய சிறிய நூலில் பேராசிரியர் ராஜ்கௌதமன் அயோத்திதாசரின் ‘முறையான வரலாற்றுநோக்கு இல்லாமை’யை அவரது முக்கியமான குறையாகச் சுட்டிக்காட்டுவதைக் காணலாம். கல்வித்துறைசார்ந்த இலக்கிய- வரலாற்று அணுகுமுறைக்குச் சிறந்த உதாரணமான ராஜ்கௌதமன் அப்படிச்சொல்வது இயல்பே. அயோத்திதாசரின் நோக்கம் சாதியற்ற சமகாலத்தை உருவாக்குவது. அதற்காக அவர் இறந்தகாலத்தைப்பற்றி தனக்குச் சாதகமான முறையில் புனைந்துகொள்கிறார் என்கிறார் ராஜ்கௌதமன்[ க.அயோத்திதாசர் ஆய்வுகள், காலச்சுவடு பிரசுரம்] அயோத்திதாசரின் இந்திரர்லோகசரித்திரம் முதலிய நூல்களையும் பல வரலாற்றுக்கருத்துக்களையும் எதிர்மறைப்பொருளில் புனைவு என்று சொல்கிறார் Continue reading →

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

நான் அயோத்திதாசரை வாசித்த நாட்களில் அவரது முக்கியத்துவம் ஏதும் என்னை வந்தடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஒட்டுமொத்த எழுத்துக்களில் இருந்து ஒவ்வொரு தளத்திலும் அவரது கருத்து என்ன என்பதை தனித்தனியாக தொகுத்து அளிக்காத வரை எந்த பொதுவாசகரும் அவரது கருத்துநிலைகளை எளிதில் புரிந்துகொள்ளவும் முடியாது. அந்நாட்களில் நானும் எம்.வேதசகாயகுமாரும் இணைந்தே அயோத்திதாசர் நூல்களை வாசித்தோம். அவர் அனேகமாக தினமும் மாலை என் வீட்டுக்கு வருவார். நெடுநேரம் எங்கள் வாசிப்புகளை பகிர்ந்துகொள்வோம்

அக்காலகட்டத்தில் அயோத்திதாசர் சமணம் பௌத்தம் இரண்டும் தனித்தனி மதங்கள் அல்ல, ஒரேமதமே என்று சொல்வதைப்பற்றிய பேச்சுவந்தது. அயோத்திதாசர் காலகட்டத்தில் விரிவான வரலாற்றாய்வுகள் நிகழவில்லை. தனக்குக்கிடைத்த குறைவான தரவுகளைக்கொண்டு அவர் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் என்பதே என்னுடைய கருத்தாக இருந்தது. அதை வேதசகாயகுமாரும் ஏற்றுக்கொண்டார்.

Continue reading →

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1 [தொடரும்]

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1 [தொடரும்]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

ஒருமுறை குமரிமாவட்டத்தில் உள்ள ஒரு தொன்மையான நூலகத்துக்குச் சென்றிருந்தேன். நூறாண்டுக்கால வரலாறுள்ள அந்நூலகம் இன்று அழிந்துவிட்டது. ஓட்டுக்கூரை உடைந்து மழைநீர் உள்ளே பெய்ததனால் அதன் நூலக அடுக்குகளில் புராதனமான நூல்கள் பெரும்பாலும் மட்கிப் பூஞ்சைபிடித்து ஊதிப்போயிருந்தன. அந்நூல்களை எடுத்தெடுத்துப்பார்த்தபோது திடீரென்று ஒரு மறைந்த நகரத்தை , ஒரு பண்பாட்டை மண்ணுக்குள் தோண்டி எடுத்த உணர்ச்சியை அடைந்தேன். Continue reading →

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

இளம் வயதில் நான் கேட்டுப்பிரமித்த மேடைப்பேச்சாளர் என்றால் கேரள சிந்தனையாளரும் மார்க்ஸியருமான பேராசிரியர் எம்.என். விஜயன்தான். கண்ணனூரில் அவரை நான் ஒருமுறை நேரிலும் சந்தித்திருக்கிறேன். விஜயன் ஒருமுறை சொன்னார் ‘மிக அதிகமான புல் தின்று மிகக் கொஞ்சமாக பால் கொடுக்கும் ஒரு பசுதான் அழகியல் என்பது’ Continue reading →

இந்திய ஞானமரபும் காந்தியும் [தொடர்ச்சி]

இந்திய ஞானமரபும் காந்தியும் [தொடர்ச்சி]

[08-09-10 அன்று பினாங்கு [மலேசியா] தண்ணீர் மலை காந்தி மண்டபத்தில் ஆற்றிய உரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

2mcy25e

[ஒரு புத்தகக்கடையில். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அருகில்]

காந்தி அவரது சாத்வீகப்போராட்டமுறையை சமண முனிவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டார். அவரது ஆயுதம் தியாகம். அவரது அதிகாரம் அறத்தாலானது. தான் நம்பும் ஒன்றுக்காக உயிர்துறக்க எப்போதும் அவர் தயாராக இருந்தார். அந்த தியாகமே அவரை வெல்ல முடியாதவராக ஆக்கியது. அவரது உண்ணாநோன்பும் சத்யாக்கிரகமும் சமணத்தின் வடக்கிருத்தல் அன்றி வேறல்ல என்பதை நாம் உணரலாம். காந்தியின் தோற்றம் கூட வெள்ளுடை அணிந்த ஒரு ஸ்வேதாம்பர சமணமுனிவரின் தோற்றமேயாகும். Continue reading →

இந்திய ஞானமரபும் காந்தியும்

இந்திய ஞானமரபும் காந்தியும்

[08-09-10 அன்று பினாங்கு [மலேசியா] தண்ணீர் மலை காந்தி மண்டபத்தில் ஆற்றிய உரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[ஒரு விவசாயி. கும்பமேளா பயணத்தின்போது]

காந்தியின் சுயசரிதையான எனது சத்தியசோதனையில் ஓர் இடம் வருகிறது. மராட்டிய மாநிலத்தில் இருக்கையில் ஒருமுறை அவருக்கு உடம்பு சரியில்லாமலாகிறது. அஜீரணமும், காய்ச்சலுமாக துன்பப் படுகிறார். அலோபதி மருத்துவம் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இந்நிலையில் அப்பகுதியில் யோகி என்று புகழ் பெற்றவரான ஒரு சாமியாரை அவருக்கு மருத்துவம் பார்க்க அழைத்து வருகிறார்கள். அவர் சில மர்மமான வழிமுறைகளை பயன்படுத்தி சிகிழ்ச்சை அளிப்பதாக சொல்லப் படுகிறது
Continue reading →

நூலகம் எனும் அன்னை

நூலகம் எனும் அன்னை

[24-11-2007 யில் அருமனை அரசு நூலகத்தின் வருட விழாவில் ஆற்றிய சிறப்புரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

arumanai

அருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இந்த நூலகத்தில்தான் நான் என் இளமைப்பருவத்தை செலவழித்தேன்.

என் அப்பா பாகுலேயன்பிள்ளை இங்கே உதவி பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடம் பணியாற்றினார். நாங்கள் இங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள முழுக்கோடு என்ற ஊரில் தங்கியிருந்தோம். அதன்பின் மறுபக்கம் ஐந்து கி.மீ தூரத்தில் உள்ள திருவரம்புக்கு சொந்த வீடு கட்டி மாறினோம். நான் படித்ததெல்லாம் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்தான். எங்கள் சந்தை அருமனையில் இருந்தது… திரையரங்கு இங்கேதான்- கிருஷ்ணப்பிரியா. ஓலைக்கொட்டகை. மளிகை வாங்குவது ராகவப்பணிக்கர் கடையில். என் இளமைப்பருவம் இந்த ஊரை மையப்படுத்தியது.

Continue reading →

ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்

ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்

[ நவம்பர் 26, 2006 அன்று வர்க்கலை நாராயணகுருகுலத்தில் ஆற்றிய உரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

35mqqkh

[குரு நித்யா]

அன்புக்கும் வணக்கத்திற்கும் உரிய ஆசிரியர்களே, தோழர்களே,

அஜிதனை சின்னக்குழந்தையாக கையில் தூக்கிக்கொண்டு அலைந்த நாட்கள் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. அப்போது எனக்கு இரண்டு தலைகள். இரண்டு முகங்கள். ஒன்றுக்கு முப்பத்திரண்டுவயது. ஒன்றுக்கு ஒருவயது. ஒன்றில் இருந்து முப்பத்திரண்டுவரை நீண்டுபரந்த ஒரு மனம். ஆச்சரியமான ஓர் இணைவு. தெருவில் நான் செல்லும்போது என்னை ஒருவர் பின் தொடர்ந்து வந்தால் எனக்கு ஒருவயதா இல்லை முப்பத்திரண்டு வயதா என்ற சந்தேகம் எழும். அந்த உற்சாகத்தை அடைந்தபின் இன்றுவரை நான் அந்த ஒருவயதுக்குழந்தையை கீழே இறங்கவிடவில்லை.

Continue reading →

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? [தொடர்ச்சி]

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? [தொடர்ச்சி]

[16–1–07 அன்று பாளையங்கோடை தூய சவேரியார் கல்லூரி தமிழ்துறை சார்பில் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[வட கிழக்குப் பயணத்தின் போது. சிக்கிம் ]

சார்த்ரும் காம்யூவும் இருத்தலியத்தின் பிதாமகர்கள். முன்னர் நான் சொன்ன சொற்றொடர்கள் இருத்தலியத்தின் மூலவரிகள் போன்றவை. முன்னர் நான் சொன்ன படைப்பாளிகலின் வரிசையை ஒட்டுமொத்தமாக நவீனத்துவர்கள் என்று அடையாளம் காட்டலாம்.

நான் வாசிக்க வந்த காலத்தில் நவீனத்துவத்தின் கொடி பறந்தது. இருத்தலியமே எங்கும் முழங்கும் தத்துவமாக இருந்தது. இந்திய மொழிகளில் நம் உடனடி முன்னோர்கள் அனைவருமே நவீனத்துவர்களாக இருந்தனர். அசோகமித்திரன் சுந்தர ராமசாமி சா கந்தசாமி இந்திரா பார்த்த சாரதி … மலையாளத்தில் ஓ.வி.விஜயன், எம் டி வாசுதேவன் நாயர் ,எம் முகுந்தன் ,புனத்தில் குஞ்ஞப்துல்லா கன்னடத்தில் யு ஆர் அனந்தமூர்த்தி, பி.லங்கேஷ், வங்காளத்தில் சுனில் கங்கோபாத்யாய அதீன் பந்த்யோபாத்யாய…
Continue reading →